அமெரிக்காவில் வீடு ஒன்றுக்குள் வீழ்ந்த விமானம் (வீடியோ)

0 224

அமெரிக்காவில் வீடு ஒன்றுக்குள் சிறிய ரக விமானம் ஒன்று வீழ்ந்ததில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம்  நேற்று (07) இடம்பெற்றுள்ளது

சென்ற் பெர்னார்டினோ நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது, விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் மிகவும் தாழ்வாக பறந்த விமானம் அங்குள்ள வீட்டின் மேற்கூரையை உடைத்து கொண்டு உள்ளே வீழ்ந்தது.

இதனையடுத்து விமானத்தில் தீப்பிடித்தது. இதனால் வீடு முற்றாக தீப்பற்றி எரிந்தது. இதன்போது விமானி உயிரிழந்துள்ளார். இதேவேளை வீட்டுக்குள் இருந்த ஒரு குழந்தை உள்பட 3 பேர் உயிர் தப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!