‘ரிஷாத் வன்னியின் மைந்தன் என்றால் நாங்கள் வன்னியின் மாடுகளா?’ சிவாஜிலிங்கம் கேள்வி

0 2,098

                               (கதீஸ்)
எமது தலைவர்கள் எதிரியின் காலை முத்தமிட்டு, நக்கி நிற்கிறார்கள். நிபந்தனையில்லாமல் இவர்கள் நக்குவதுதான் ஏமாற்றமாக உள்ளது என ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். நேற்று (9) வவுனியாவில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கையின் பௌத்த பேரினவாத வெற்றியாளன் யார் என்ற போட்டி நடக்கிறது. இதில் தென்னிலங்கை கட்சிகளின் ஏஜெண்ட்கள் இங்கும் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். கடந்தமுறை ஆஹா ஓஹோ என அன்னப்பட்சியை சொன்னவர்கள் இந்தமுறை ஒளிந்து ஓடிப்போய் விட்டனர். அன்னப்பட்சி இப்போது சுவாசிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

2015 ஜனாதிபதி தேர்தலில் 85 தொடக்கம் 90 சத வீதமான மக்கள் அன்னப்பட்சிக்கு வாக்களித்தனர். 2015 நாடாளுமன்ற தேர்தல், 2013 வடமாகாணசபை தேர்தல், 2012 கிழக்கு மாகாணசபை தேர்தலில் 65 சத வீதத்துக்கும் மேலான வாக்குகளை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த உள்ளூராட்சி தேர்தல் 38 சத வீதத்துக்கு கீழிறங்கியது.

மேலும் நீங்கள் அன்னப்பட்சிக்கு அளிக்கும் வாக்குகள் ரிஷாத்துக்கு அளிக்கும் வாக்குகளாகும். மறுபக்கம் கோட்டாவுக்கு அளிக்கும் வாக்கு மஸ்தானுக்கு அளிக்கும் வாக்குகளாகும் .
கருணா பிள்ளையான் என 10 கட்சிகள் சேர்ந்து மொட்டுடன் ஒப்பந்தம் செய்தார்களாம். நீங்கள் ஏதாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தீர்களா? முஸ்லிம்கள் செய்கிறார்கள். யார் வென்றாலும் ரிஷாத் ஹக்கீம் அமைச்சராவார்கள்.

மனோ கணேசன் சொல்கிறார் வன்னி மண்ணின் மைந்தன் ரிஷாத் என. அப்படியானால் ஏனைய நாங்கள் எல்லோரும் வன்னி மாடுகளா?. நாங்கள் எருமைத்தோல் படைத்தவர்கள். உங்களின் எந்த தாக்குதலையும் எதிர்கொள்வோம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!