பிரிட்னி ஸ்பியர்ஸ் தலையை மொட்டையடித்துக் கொண்டது ஏன்?

12 வருடங்களின் பின்னர் வெளிவந்த காரணம்

0 277

அமெ­ரிக்­காவின் புகழ்­பெற்ற பாட­கி­களில் ஒரு­வ­ரான பிரிட்னி ஸ்பியர்ஸ் 12 வரு­டங்­க­ளுக்கு முன்னர் தனது தலையை ஏன் மொட்­டை­ய­டித்துக் கொண்டார் என்­ப­தற்­கான காரணம் தற்­போது வெளி­யா­கி­யுள்­ளது.

பாடகி, பாட­லா­சி­ரியர், நட­னக்­க­லைஞர், நடிகை எனப் பல முகங்­களைக் கொண்ட பிரிட்னி ஸ்பியர்ஸ் இசைத்­து­றையில் கொடி கட்டிப் பறந்­த­வர்­களில் ஒருவர்.

 

ஆனால், 2007 ஆம் ஆண்­ட­ளவில் அவர் பல்­வேறு பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள ஆரம்­பித்தார்.

பொது இடங்­களில் மோதல்­களில் ஈடு­பட்ட சம்­ப­வங்­களும் நடந்­தன.

திடீ­ரென தலையை மொட்­டை­ய­டித்துக் கொண்டார்.

அதுவும் பாப்­ப­ராஸி எனும் புகைப்­ப­டப்­பி­டிப்­பா­ளர்கள் 70 பேரின் முன்­னி­லையில் தனக்குத் தானே அவர் மொட்­டை­ய­டித்துக் கொண்டார்.

பிரிட்னி ஸ்பியர்ஸ் ஏன் இவ்­வாறு செய்தார் என்­ப­தற்­கான காரணம் தற்­போது வெளி­யா­கி­யுள்­ளது.

தனது மகன்­களைப் பார்­வை­யி­டு­வத­ற்கு அப்­போ­தைய கண­வ­ரான பாடகர் கெவின் பேர்­டினன்ட் அனு­ம­திக்­கா­மையே இதற்குக் காரணம் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பிரிட்னி ஸ்பியர்ஸ் குறித்து சணல் 5 அலை­வ­ரிசை தயா­ரித்த ஆவ­ணப்­ப­ட­மொன்றில் இது தொடர்­பான தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

மன அழுத்­தத்­துக்­கான சிகிச்­சைக்­காக சென்ற பிரிட்னி ஸ்பியர்ஸ், பின்னர் தனது அப்­போ­தைய கண­வ­ரான கெவின் பேர்­னட்டின் வீட்­டுக்குச் சென்று தனது மகன்­களை சந்­திக்க விரும்­பு­வ­தாக கூறி­னாராம்.

அதற்கு கெவின் பேர்­டினன்ட் மறுப்புத் தெரி­வித்தார்.

அதை­ய­டுத்து லொஸ் ஏஞ்சல்ஸ் நக­ரி­லுள்ள சலூன் ஒன்­றுக்கு தனது காரில் சென்ற அவர் தலையை மொட்­டை­ய­டித்துக் கொண்டார்.

அந்த சலூனில் இருந்த சிகை­ய­லங்­காரக் கலை­ஞ­ரான எஸ்தார் தோக்னஸ் இது தொர்­பாக கூறு­கையில், பிரிட்னி ஸ்பியர்ஸ் சலூ­னுக்கு வந்து, தனது தலையை மொட்­டை­ய­டிக்­கு­மாறு கூறி­ய­தா­கவும் பின்னர், அவரே திடீ­ரென தலையை மழித்துக் கொள்ள ஆரம்­பித்தார் எனவும் தெரி­வித்­துள்ளார்.

அவ­ருடன் பேசு­வ­தற்கோ அவ­ருக்கு உத­வி­ய­ளிக்­கவோ தான் விரும்­பிய போதிலும் பின்னர் அன்­றி­ரவே டாட்டூ நிலை­ய­மொன்­றுக்கு பிரிட்னி ஸ்பியர்ஸ் சென்றார். 

டாட்டூ கலை­ஞ­ரான எமிலி வின்னி ஹியுஸ் என்­பவர் இது தொடர்­பாக மேற்­படி ஆவ­ணப்­ப­டத்தில் கூறு­கையில்;, ‘டாட்டூ நிலை­யத்­துக்கு வெளியே கடு­மை­யான வாகன உறுமல் சத்தம் கேட்­டது.

கெவின் பேர்டினன்ட், பிரிட்னி

 

என்ன நடக்­கி­றது என்று எனக்குத் தெரி­ய­வில்லை. வெளியில் கல­வரம் எதுவும் நடக்­கி­றதோ என எண்­ணினேன்.பின்னர் சலூனின் முன்னால் கெமரா வெளிச்­சங்கள் பளிச்­சிட்­டன. கதவு மெது­வாக திறக்­கப்­பட்­டது. தலையை மூடிக்­கொண்டு ஒருவர் உள்ளே வந்தார்.

தற்போதைய காதலன் சாம் அஷ்காரியுடன் பிரிட்னி

அவரின் தலை­முடி இருக்­க­வில்லை. என்ன நடந்து? ஏன் தலையை மொட்­டை­ய­டித்­தீர்கள் என நான் கேட்டேன்.

அவரின் பதில் விசித்­தி­ர­மாக இருந்­தது. ‘எனக்கு எவரும் தேவை­யில்லை. எனது தலையை, தலை­மு­டியை எவரும் தொடு­வதை நான் விரும்­ப­வில்லை.

‘ என அவர் பதி­ல­ளித்தார்’ எனத் தெரி­வித்­துள்ளார்.

பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது இளமைக் கால காதலர் ஜேசன் அலெக்­ஸாண்­டரை 2004 ஆம் ஆண்டு திரு­மணம் செய்தார்.

அத்­தி­ரு­மணம் விரைவிலேயே முறிந்தது. பின்னர் கெவின் பேர்டினட்டை பிரிட்னி திருமணம் செய்தார். 2007 ஆண்டு இவர்கள் பிரிந்தனர்.

தற்போது 37 வயதான பிரிட்னி ஸ்பியர்ஸ், சாம் அஷ்காரி என்பவரை காதலித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!