போதைப்பொருட்களுடன் களியாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது!

0 198

                                                                                                                                        (எம்.மனோசித்ரா)
ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் களியாடத்தில் ஈடுபட்ட 22 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு பெந்தோட்டை – கஹாகல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்கள் 19 – 48 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார் , பெந்தோட்டை , கொஸ்கொட , அஹுங்கல்ல , பேருவல , ஹட்டன் மற்றும் தொஹியத்தகண்டிய ஆகிய பிரதேங்களை சேர்ந்தவர்கள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை பலப்பிட்டிய நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதனையடுத்து ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபரை மூன்று மாத காலத்துக்கு பூசா புனர்வாழ்வு முகாமுக்கு  அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை கஞ்சா வைத்திருந்த ஆறு சந்தேக நபர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டது. மேலும் போதை மாத்திரைகள் வைத்திருந்து குற்றச்சாட்டின் பேரில் 13 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேலும் இரு பிரதான சந்தேக நபர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!