வரலாற்றில் இன்று: நவம்பர் 13: 1989 -ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீர கொல்லப்பட்டார்

0 296

1002 : இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேனிஷ் மக்கள் அனைவரையும் கொல்லும்படி இங்கிலாந்து மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது சென் பிறைஸ் நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது).

1851 : அமெரிக்காவின் வோஷிங்டன் மாநிலத்தின் சியாட்டில் நகரின் முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் குடியேற்றினர்.

1970 : கிழக்குப் பாகிஸ்தானில் சூறாவளியினால் 5 லட்சம் பேர் பலி

1887: மத்திய லண்டன் பகுதியில் அயர்லாந்து சுதந்திரப் போராட்ட ஆதரவாளர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.

1887 : நவம்பர் 11 இல் சிக்காகோவில் தூக்கிலிடப்பட்ட நான்கு தொழிலாளர் தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.

1916: அவுஸ்திரேலிய பிரதமர் பில்லி ஹியூஜ்ஸ், கட்டாய இராணுவ ஆட்சேர்ப்புக்கு ஆதரவளித்ததால் தொழிற்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

1950 : வெனிசூலாவின் ஜனாதிபதி ஜெனரல் கார்லொஸ் டெல்காடோ சால்போட் படுகொலை செய்யப்பட்டார்.

1965 : அமெரிக்காவின் யார்மூத் காசில் என்ற பயணிகள் கப்பல் பஹாமசில் மூழ்கியதில் 90 பேர் கொல்லப்பட்டானர்.

1970 : கிழக்குப் பாகிஸ்தானில் (தற்போதைய பங்களாதேஷ்) இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியில் 500,000 பேர் வரையில் உயிரிழந்தனர். இது 20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரும் இயற்கை அழிவு எனக் கருதப்படுகிறது).

1989 : ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீர கொல்லப்பட்டார்

1971: ஐக்கிய அமெரிக்காவின் மரைனர் 9 விண்கப்பல் செவ்வாய்க் கோளை சுற்றி வந்தது. இதுவே பூமியை விட வேறொரு கோளைச் சுற்றிவந்த முதலாவது விண்கப்பலாகும்.

1982: அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் மே மென்சினியிடம் டுக் கூ கிம் என்பவர் தோல்வியுற்றார். 5 தினங்களின் பின் கிம் உயிரிழந்தமை குத்துச்சண்டை விளையாட்டு விதிகளின் மாற்றங்களுக்கு வழிவகுத்தது.

1985 : கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூஸ் என்ற எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட மண்சரிவினால் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லபட்டனர்.

1989 : மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் ரோஹண விஜேவீர, இராணுவத்தினரால் முதல் நாள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 13 ஆம் திகதி கொல்லப்பட்டார்.

1994 : ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு சுவீடன் மக்கள் முடிவூ செய்தனர்.

1995 : சவூதி அரேபியாவில் ரியாத் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் ஐந்து அமெரிக்கர்களும் இரண்டு இந்தியர்களும் உயிரிழந்தனர்.

2002: ஈராக் ஆயுத களைவு தொடர்பாக ஐ.பாதுகாப்புச் சபையின் 1441 அவது தீர்மானத்தின் நிபந்தனைகளை ஈராக் ஏற்றுக்கொண்டது.

2015 : பாரிஸ் நகர தாக்குதல்களில் 130 பேர் பலி

2007: ஜோர்ஜியாவிலிருந்த சோவியத் யூனியன் காலத்து இராணுவத் தளத்தை ரஷ்யா உத்தியோகபூர்வமாக வாபஸ் பெற்றது.

2015: பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 தாக்குதல்தாரிகள் உட்பட 137 பேர் உயிரிழந்தனர்.

2015: பூமியை சுற்றிக்கொண்டிருந்த றுவூ1190கு எனும் மர்ம விண்பொருள்,  வளிமண்டலத்துக்குளு; நுழையும்போது இலங்கையின் தெற்கே 100 கிலோமீற்றர் தொலைவில் வெடித்துச் சிதறியிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!