பங்களாதேஷில்  இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதின:  16 பேர் பலி, 58 பேர் காயம்

16 dead as trains collide in Bangladesh

0 1,563

  பங்களாதேஷில்  இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பயணிகள் உயிரிழந்துடன் 58 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரம்மன்பாரியா நகரில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றது.

பங்களாதேஷின் தெற்கு துறைமுக நகரமான சிட்டாகொங் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலும் தலைநகர் டாக்கா நோக்கி  கொண்டிருந்த ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானகின.

சமிக்ஞை  கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் ரயில்களின் சில பெட்டிகள் பலத்த சேதமடைந்தன.

இந்த விபத்தில் 16 பயணிகள் பலியாகினர். மேலும் 58 பேர் காயமடைந்தனர என பொலஸ் அதிகாரி அனிசுர் ரஹ்மான் தெரவித்துள்ளாhர்.

 மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!