தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் கோட்டாவுக்கு ஆதரவு!

0 533

                                                                                       (தி.சோபிதன்)
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினாலும் நல்லாட்சி அரசாங்கத்தினால் நெடுந்தீவு மக்கள் கட்ந்த 2 வருடங்களில் எந்த நன்மையையும் பெறாத நிலையில். தாம் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாவை ஆதரிக்கப் போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் பி. ரொஷான் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (12) ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளராக உள்ளேன் இந்த காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பிடமிருந்தோஇ இந்த நல்லாட்சியிடமிருந்தோஇஎந்தவொரு நன்மைகளும் கிடைக்கவில்லை. 9 கிலோ மீற்றா் நீளமான பிரதான வீதி பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் காணப்படுகிறது. .அதேபோல் துறைமுகம் பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாமல் உள்ளது. 
இவ்வாறான ஏமாற்றங்களினாலேயே கோட்டாவை ஆதரிக்கும் தீா்மானத்தை எடுத்துள்ளேன்.. பொதுவாகவே மக்கள் இன்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீதும் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை இழந்திருக்கும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாவை ஆதரிக்கும் தீா்மானத்தை எடுத்துள்ளேன்.

போா் நிறைவடைந்து 2 ஆண்டுகளில் கிளிநொச்சி நகரை கட்டியெழுப்பிய ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாய ராஜபக்ஷ நெடுந்தீவையும் கட்டியெழுப்புவாா்.மேலும் முன்னாள் போராளியான என்னையும் என்னைப் போன்ற போராளிகளையும் விடுதலை செய்ததைபோல் தமிழ் மக்கள் மீது அக்கறையுடன் செயற்படுவாா் என நம்புகிறேன். அந்த அடிப்படையிலேயே கோட்டாவை ஆதரிக்கத் தீா்மானித்துளேன் என்றாா்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!