அச்சம், அழுத்தத்தைக் போக்க மாணவர்களை சவக்குழியில் படுக்க வைக்கும் நெதர்லாந்து பல்கலைக்கழகம்! (வீடியோ)

0 1,041

பரீட்சை நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் அச்சத்தையும் மன அழுத்தத்தையும் போக்க அவர்களை சவக்குழியில் படுக்க வைக்கும் வினோதமான முறையை நெதர்லாந்து பல்கலைக்கழகம் ஒன்று கையாள்கிறது.

நெதர்லாந்து நாட்டின் நிஜ்மேகன் நகரில் உள்ள ‘ராட்பௌட்’ (Radboud University பல்கலைகழகமே இந்த முறையை கையாள்கிறது. அரைமணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை சவக்குழியில் மாணவர்கள் படுக்க வைக்கப்படுகிறார்கள். ‘வித்தியாசமாக இருங்கள்’ என்ற படுக்கையுடன் ஒரு போர்வை, யோகா பாய் ஆகியவை கொடுக்கப்படுகின்றன. மாணவர்களிடையே இது மிகவும் பிரபலமாகியுள்ளது.
இதுகுறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், ‘இந்த முறை மிகவும் பிரபலமாகியுள்ளது, சவக்குழியினுள் படுக்க நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக உள்ளது. நிச்சயம் வேறு ஒரு நாள் அங்கு செல்வோம்’, என்றார்.
இத்திட்டத்தின் நிறுவனர் ஜான் ஹாக்கிங் இதுபற்றி கூறுகையில், ‘18, 19 வயதுகளில், வாழ்க்கையின் முடிவு, மரணம் போன்றவற்றை பற்றி மாணவர்களிடம் பேசுவது மிக கடினம், ஆனால் இந்த சவக்குழியில் படுப்பது, இந்த பூமியில் நமது வாழ்நாள் பற்றிய உண்மையை ஏற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்’ என்றார்.

கல்லூரி வளாகத்தில் ‘மரிப்பாய் ஒரு நாள் நினைவிருக்கட்டும்’ என எழுதப்பட்ட பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!