இலங்கை இராணுவத்தின் 243 பேர் அமைதி காக்கும் பணிகளுக்காக மாலி பயணமாகினர்

0 341

ஐநா அமைதி காக்கும் படையில் கடமையாற்றுவதற்காக இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 243 பேர் இன்று (13) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக மேற்கு ஆபிரிக்க நாடான மாலி நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

விஜயபா படையணி மற்றும் வைத்திய, பொறியியலாளர் மற்றும் சேவைப் படையணியைச் சேர்ந்த அதிகாரிகள் 20  பேரும் ஏனைய தரத்திலான அதிகாரிகள் 223 பேரும் அடங்கிய படையினர் இவ்வாறு கடமைகளுக்காக புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இவர்களை அழைத்துச் செல்வதற்காக ஐநாவினால் அனுப்பப்பட்டிருந்த எத்தியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான போயிங் 767 – 300 ரக விமான விமானத்தின் மூலம் குறித்த படையினர் இன்று(13) அதிகாலை 3.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மாலி நோக்கி பயணமாகினர்.

இதேவேளை. லெப்டினட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமையினால் அதிருப்தி வெளியிட்டிருந்த ஐநா, அதனை காரணம் காட்டி தமது அமைதி காக்கும் படையில் பணியாற்றிவரும் இலங்கைப் படையினரை நாட்டு திருப்பியனுப்புவதாக அறிவித்திருந்தது.

பின்னர் இது தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கும் ஐநா பிரதிநிதிகளுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளையடுத்து இப்பிரச்சினைக்கு  தீர்வு காணப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே தற்போது ஐநா அமைதிக் காக்கும் படையில் கடமையாற்றுவதற்காக இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த படையினர் மாலி பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sri Lanka Army troops line up at Bandaranaike International Airport in Katunayake as they leave for Mali on a UN peacekeeping mission on November 13, 2019. – The UN had previously announced they will not accept Sri Lankan peacekeepers following allegations of war crimes against Sri Lanka’s army chief but the issue was resolved following talks. (Photo by ISHARA S. KODIKARA / AFP)
A Sri Lanka Army soldier is frisked at Bandaranaike International Airport in Katunayake as troops leave for Mali on a UN peacekeeping mission on November 13, 2019. – The UN had previously announced they will not accept Sri Lankan peacekeepers following allegations of war crimes against Sri Lanka’s army chief but the issue was resolved following talks. (Photo by ISHARA S. KODIKARA / AFP)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!