ஆண் போன்று வேட­மிட்டு யுவ­தி­களை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த பெண் கைது!

0 1,136

ஆண் போன்று வேட­மிட்டுக் கொண்டு, பாலியல் சாத­னங்­கங்கள் மூலம் இளம் யுவ­தி­களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாகக் கூறப்­படும் பெண்­ணொ­ரு­வரை இந்­தி­யாவின் ஆந்­திர மாநில பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

ஆந்­திர பிர­தே­சத்தைச் சேர்ந்த 32 வய­தான பெண்ணே இக்­குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இப்பெண் இளம் யுவ­தி­களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­யதை அறிந்த அவரின் 47 வயது கணவர் தற்­கொலை செய்­து­கொண்டார் எனவும் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

தன்னை ஆண் ஒருவர் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக 17 வய­தான ஒரு சிறுமி பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்­தி­ருந்தார்.  இது தொடர்­பான விசா­ர­ணை­யின்­போது பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாகக் கூறப்­படும் நபர், உண்­மையில் ஆண் வேட­மிட்ட ஒரு பெண் என்­பது தெரி­ய­வந்­த­தாக ஆந்­திர பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

சும­லதா எனும் இவர், சாய் ரமேஷ் ரெட்டி என தன்னை அறி­முகம் செய்­து­கொண்டு, ஆண் குரலில் பேசி பெண்­களையும் சிறு­மி­க­ளையும் தனது வீட்டுக்கு வர­வழைத்தார் என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். இப்பெண் ஆண்­களின் ஆடை­களை அணிந்­த­துடன் தனது தலை­மு­டி­யையும் ஆண்­களைப் போல் வெட்­டி­யி­ருந்தார் எனவும் இவர் ஏற்­கெ­னவே இரு தட­வைகள் திரு­மணம் செய்து கொண்­டவர் எனவும் ஒங்கோல் மாவட்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ரவி சந்­திரா தெரி­வித்­துள்ளார்.

மேற்­படி பெண், குறித்த சிறு­மி­யு­டனும் தனது கண­வ­ரு­டனும் ஒரே வீட்டில் தங்­கு­வ­தற்கும் திட்­ட­மிட்­ட­தா­கவும் இதற்­காக 28 வயது இளை­ஞ­ரான தனது நண்பர் ஒரு­வ­ருக்கு மேற்­படி சிறு­மியை போலி­யாக திரு­மணம் செய்து வைக்கத் திட்­ட­மிட்­ட­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ரவி சந்­திரா கூறி­யுள்ளார்.

பாதிக்­கப்­பட்ட சிறுமி தனது பெற்­றோ­ரிடம் இது குறித்து கூறியதையடுத்து, அச்சிறுமியின் பெற்றோர் பொலிஸாரை நாடினர். அதையடுத்து பாலியல் குற்றங்களிலிருந்து சிறார்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் அப்பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!