கோட்டாவின் பிரஜாவுரிமை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு

0 619

ரெ. கிறிஷ்­ணகாந், எம்.எப்.எம்.பஸீர்

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரும், முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ரு­மான கோட்­டா­பய ராஜ­பக்­ ஷவின் பிரஜாவுரிமை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் நேற்று மேன் முறை­யீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கோட்­டா­பய ராஜ­பக்­ ஷவை இலங்கை பிர­ஜை­யாக ஏற்றுக் கொள்­வதை தடுத்து உத்­த­ர­வொன்றைப் பிறப்­பிக்­கு­மாறு கோரி, மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட ‘செட்­டி­யோ­ராரி’எழுத்தாணை மனுவை மேன்முறை யீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்த உத்தரவை இரத்து செய்யுமாறுகோரி இந்த விசேட மேன் முறை­யீட்டு மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன.

இலங்கை அழ­கியல் பல்­க­லைக்­க­ழ­கத்தின் பேரா­சி­ரியர் சந்­ர­குப்த தேநு­வர, மக்கள் சக்தி அமைப்பின் ஏற்­பாட்­டாளர் காமினி வெயங்­கொட ஆகியோர் இந்த மனுக்­களை தாக்கல் செய்­துள்­ளனர்.

குடி­வ­ரவு – குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தின் கட்­டுப்­பாட்­டாளர் ஆர்.எம்.ரத்­நா­யக்க, ஆட்­ப­திவுத் திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் வியானி குண­தி­லக, அரச நிர்­வாக மற்றும் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் வஜிர அபே­வர்­தன, அமைச்சின் செய­லா­ளர்­கா­மினி சென­வி­ரத்ன, எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ, முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோட்­டா­பய ராஜ­பக்க்ஷ, பதில் பொலிஸ் மாஅ­திபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன, குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, அதன் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­கர, குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசேட விசா­ரணை அறை பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் லலித் திஸா­நா­யக்க ஆகியோர் இந்த விசேட மேன் முறை­யீட்டில் பிர­தி­வா­தி­க­ளாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளனர்.

ஸ்ரீலங்கா பொது ஜன பெர­முன ஜனா­தி­பதி வேட்­பாளர் கோட்­டா­பய ராஜ­பக்க்ஷ உரிய முறையில் இலங்கை குடி­யு­ரி­மையைப் பெற்றுக் கொண்­டவர் அல்லர் என்­பதால், இலங்­கையர் என்ற அடை­யா­ள­மான அவ­ரிடம் உள்ள கடவுச் சீட்டு, தேசி அடை­யாள அட்டை மற்றும் இரட்டை பிரஜா உரிமை சான்­றிதழ் ஆகி­ய­வற்றை இரத்துச் செய்து ‘செட்­டி­யோ­ராரி’ எழுத்­தாணை ஒன்றை பிறப்­பிக்­கு­மாறு கோரி தாம் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் மனு தொடுத்­த­தா­கவும், அதனை விசா­ர­ணைக்கு ஏற்­காது மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் நிரா­க­ரித்­த­தா­கவும் விசேட மேன் முறை­யீட்டில் மனு­தா­ரர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

குறித்த தமது மனுக்­களை விசா­ர­ணைக்கு ஏற்­காது நிரா­க­ரித்­தமை சட்­டத்­துக்கு முர­ணா­னது என கூறும் மனு­தா­ரர்கள், அதனால் தாம் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளதால் இந்த விசேட மேன் முறை­யீட்டை தாக்கல் செய்­வ­தா­கவும், தமது மனுக்­களை நிரா­க­ரித்த மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தீர்­மா­னத்தை இரத்துச் செய்­யு­மாறும் அதில் கோரி­யுள்­ளனர்.

மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை இரத்துச் செய்வதுடன், தாம் கோரிய நிவாரணங்களை தமக்கு அளிக்குமாறு அந்த விசேட மேன் முறையீட்டு மனுவில் மனுதாரர்கள் மேலும் கோரியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!