பொலிவியாவின் ஜனாதிபதியாக தன்னைத் தானே பிரகடனப்படுத்தினார் ஜெனின் அனிஸ்

0 37

பொலி­வி­யாவின் இடைக்­கால ஜனா­தி­ப­தி­யாக அந்­நாட்டு செனட்­ச­பையின் துணை சபா­நா­யகர் ஜெனின் அனிஸ் தன்­னைத்­தானே அறி­வித்­துள்ளார்.

தென் அமெ­ரிக்க நாடான பொலி­வி­யாவில் கடந்த மாதம் ஜனா­தி­பதிப் பத­விக்­கான தேர்தல் நடை­பெற்­றது. வாக்கு எண்­ணிக்­கையில் முறை­கே­டுகள் செய்து வெற்றி பெற்­ற­தாக கூறி, ஜனா­தி­பதி இவோ மொரா­லெ­ஸுக்கு எதிராக போராட்­டங்கள் நடை­பெற்­றன.

வாக்கு எண்­ணிக்­கையில் முறை­கே­டுகள் நடை­பெற்­ற­தாக சர்­வ­தேச தேர்தல் பார்­வை­யா­ளர்­களும் உறு­திப்­ப­டுத்­தி­யதால் இரா­ணுவ கிளர்ச்­சியின் மூலம் பதவி மாற்றம் ஏற்­படும் என்று கரு­தப்­பட்­டது. இதனால், ஜன­நா­ய­கத்தை பாது­காத்து இரா­ணுவ ஆட்சி ஏற்­ப­டாமல் இருக்க சமூக ஆர்­வ­லர்­களும் போராட்­டத்தில் குதித்­தனர். இந்தப் போராட்­டங்­களில் இது­வரை 7 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

பொலி­வியா நாட்டில் அமை­தி­யற்ற சூழல் நில­வி­யதால் ஜனா­தி­பதி ஈவோ மொரா­லெஸை புதவியில் இருந்து வில­கு­மாறு அந்­நாட்டு இரா­ணுவம் நிர்­பந்­தித்­தது. வாக்கு எண்­ணிக்­கையில் மோசடி செய்ய உத­வி­ய­தாக தலைமை தேர்தல் ஆணை­யாளர் மற்றும் துணை ஆணை­யாளர் கைது செய்­யப்­பட்­டனர்.

தானும் கைது செய்­யப்­ப­டலாம் என்ற நிலை ஏற்­பட்­டதால் ஜனா­தி­பதி பத­வியை ஈவோ மொராலெஸ் கடந்த ஞாயி­றன்று இரா­ஜி­னாமா செய்தார். அவரை தொடர்ந்து ஆளும் கட்­சியை சேர்ந்த அனைத்து அமை­ச­சர்­களம் தங்கள் பத­வியை இரா­ஜி­னாமா செய்­தனர்.

பின்னர் தான் கைது செய்­யப்­ப­டு­வ­தி­லி­ருந்து தப்­பிக்க அவர் மெக்­ஸிகோ நாட்டில் அர­சியல் தஞ்சம் அடைந்தார்.
இந்­நி­லையில், அர­சியல் குழப்­பங்கள் சூழ்ந்­துள்ள பொலி­வி­யாவில், செனட் சபையின் துணை சபா­நா­ய­க­ரான எதிர்­கட்­சியை சார்ந்த ஜெனின் அனிஸ் இடைக்­கால ஜனா­தி­ப­தி­யாக தன்­னைத்­தானே நேற்­று­முன்­தி­னம்­அ­றி­வித்­துக்­கொண்டார்.

இக்­கட்­டான சூழ்நிலையில் இடைக்கால அதிபரை தேர்ந்தெடுக்க சட்டமன்ற ஒப்புதலோ அல்லது உறுப்பினர்களின் அனுமதியோ தேவையில்லை என அந்நாட்டு அரசியலமைப்பு தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!