மனை­வி­யுடன் உல்­லா­ச­மாக இருந்­ததை செல்­போனில் வீடியோ எடுத்த தமி­ழக பொறி­யி­ய­லாளர் கைது!

0 2,368

மனை­வி­யுடன் உல்­லா­ச­மாக இருந்­ததை செல்­போனில் வீடியோ எடுத்த பொறி­யி­ய­லா­ளரை தமி­ழக பொலிஸார் கைது செய்து விசா­ரணை நடத்தி வரு­கின்­றனர்.

புதுவை பார­தி­நகர் பகு­தியை சேர்ந்த 25 வயது பட்­ட­தாரி பெண்­ணுக்கும் திருக்­கோ­விலூர் பகு­தியை சேர்ந்த என்­ஜி­னீயர் கார்த்திக் (வயது 28) என்­ப­வ­ருக்கும் ஒரு வரு­டத்­துக்கு முன்பு திரு­மணம் நடை­பெற்­றது. திரு­மண சீர்­வ­ரி­சை­யாக ரூபா 50 லட்சம் மதிப்பு உள்ள நகை மற்றும் பொருட்கள் வழங்­கப்­பட்­டது.

திரு­ம­ண­மாகி சில நாட்கள் கார்த்திக் அவ­ரது மனை­வி­யுடன் கீழையூர் பகு­தியில் உள்ள வீட்டில் பெற்­றோ­ருடன் வசித்து வந்தார்.

அப்­போது கார்­திக்கின் மனை­விக்கு சரி­யாக சமையல் செய்ய தெரி­ய­வில்லை என கார்த்­திக்கின் தந்தை கோவிந்­த­ராஜும் அவ­ரது தாய் மல்­லி­காவும் சேர்ந்து அவரை தகாத வார்த்­தை­களால் திட்­டினர்.

இந்த நிலையில் கார்த்­திக்­குக்கு சென்­னையில் உள்ள ஒரு நிறு­வ­னத்தில் வேலை கிடைத்­தது. இந்த விப­ரத்தை கார்த்திக் அவ­ரது மனை­வி­யிடம் தெரி­வித்தார். அதன் பின்னர் நாம் இரு­வரும் சென்­னைக்கு செல்ல வேண்டும்.

அங்கு நாம் தங்க வீடு பார்க்க வேண்டும் அதற்­காக நீ உனது பெற்­றோரின் வீட்­டுக்கு சென்­று­ இ­ரண்­டரை இலட்சம் ரூபா பணம் வாங்கி வா என்று அவ­ரது மனை­வி­யிடம் கூறினார். உடனே கார்த்­திக்கின் மனைவி அவ­ரது பெற்றோர் வீட்­டுக்கு சென்று பணம் வாங்கி கொடுத்தார். அதன் பின்னர் கார்த்திக் அவ­ரது மனை­வி­யுடன் சென்­னையில் வீடு பார்த்து குடி­யே­றினார். அங்­கி­ருந்து வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் கார்த்­திக்கின் பெற்றோர் மற்றும் அவ­ரது சகோ­தரி ஸ்ரீபி­ரியா ஆகியோர் சென்­னைக்கு சென்­றனர். அவர்கள் கார்த்திக் தங்­கி­யி­ருந்த வீட்டை பார்த்து விட்டு வீடு சரி­யில்லை என்று கூறி கார்த்­திக்கை திட்­டி­யுள்­ளனர்.

இதில் ஆத்­திரம் அடைந்த கார்த்திக் அவ­ரது மனை­வியை தகாத வார்த்­தை­களால் திட்டி உள்ளார். அதன் பின்னர் செல்­போனில் ஆபாச வீடி­யோக்­களை பார்த்து விட்டு அதில் உள்­ளது போல் நடந்து கொள்­ளு­மாறு அவ­ரது மனை­வியை வற்­பு­றுத்­தினார்.

அதற்கு அவர் மறுப்பு தெரி­வித்தார். இதில் ஆத்­திரம் அடைந்த கார்த்திக் தான் கூறு­வதை போல் நடந்து கொள்­ளா­விட்டால் அவ­ரது மனை­வியை கொலை செய்து விடு­வ­தாக மிரட்­டினார்.  இதில் பயந்து போன அவர் கார்த்திக் கூறி­யதை போல் நடந்து கொண்டார். இந்த சம்­ப­வத்தை கார்த்திக் தனது மனை­விக்கு தெரி­யாமல் அவ­ரது செல்­போனில் பதிவு செய்தார்.

சில நாட்­க­ளுக்கு பிறகு கார்த்­திக்கின் செல்­போனை எடுத்து பார்த்த அவ­ரது மனைவி கண­வ­ருடன் சேர்ந்து இருந்த காட்­சிகள் அந்த செல்­போனில் பதி­வாகி இருப்­பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கணவர் கார்த்­திக்­கிடம் கேட்ட போது கார்த்­திக்கும் அவ­ரது குடும்­பத்­தி­னரும் அந்த பெண்ணை தகாத வார்த்­தை­களால் திட்டி கொலை மிரட்டல் விடுத்­தனர். பின்னர் அவரை ஒரு அறையில் பூட்டி வைத்து சித்திர­வதை செய்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்த சம்­ப­வத்தை அந்த பெண் அவ­ரது பெற்­றோ­ரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறி கதறி அழுதார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவ­ரது பெற்றோர் சென்­னைக்கு சென்று கார்த்­திக்கின் பெற்­றோ­ரிடம் நடந்த சம்­ப­வத்தை கூறி நியாயம் கேட்­டுள்­ளனர்.

அதற்கு அவர்கள் நீங்கள் கொடுத்த வர­தட்­சணை போதாது கூடு­த­லாக 5 இலட்சம் ரூபா வர­தட்­சணை தர வேண்டும் என்று கூறினர். அதற்கு அவர்கள் ‘நாங்கள் எங்கள் மகளை எங்­க­ளுடன் அழைத்து செல்­கிறோம்’ என்று கூறி அந்த பெண்ணை அவ­ரது பெற்றோர் தங்­க­ளுடன் அழைத்து சென்­றனர்.

இது குறித்து அந்த பெண் திருக்­கோ­விலூர் அனைத்து மகளிர் பொலிஸ்; நிலை­யத்தில் புகார் செய்தார். அதன் பேரில் திருக்­கோ­விலூர் துணை பொலிஸ் அத்­தி­யட்­சகர் மகேஷ் இந்த வழக்கு தொடர்­பாக உரிய விசா­ரணை நடத்தி நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பொலிஸா­ருக்கு உத்­த­ர­விட்டார்.

அதன் பேரில் கார்த்திக், அவரது தந்தை கோவிந்த ராஜ்,தாய் மல்லிகா,சகோதரி ஸ்ரீPபிரியா ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி :மாலைமலர்: மனைவியுடன் உல்லாசமாக இருந்ததை செல்போனில் வீடியோ எடுத்த என்ஜினீயர் கைது

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!