தாய்லாந்து நீதிமன்றத்தில் பிரதிவாதியின் துப்பாக்கிப் பிரயோகத்தால் சட்டத்தரணிகள் இருவர் பலி; துப்பாக்கிதாரியை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்

0 47

தாய்­லாந்து நீதி­மன்­றத்தில் நபர் ஒருவர் மேற்­கொண்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் சட்­டத்­த­ர­ணிகள் இருவர் கொல்­லப்­பட்­டுள்ளனர். அதை­ய­டுத்து மேற்­படி துப்­பாக்­கி­தா­ரியை பொலிஸார் சுட்டுக் கொன்­றனர். தாய்­லாந்தின் சாந்­த­புரி நீதி­மன்­றத்தில் நேற்று  இச்­சம்­பவம் இடம்­பெற்­றது.

ஓய்வுபெற்ற காவல் அதி­கா­ரி­யான மேஜர் ஜெனரல் தானின் சந்­தி­ரடிப் (67) தன் மீது வழக்கு தொடர்ந்­த­வரை நோக்கி சர­மா­ரி­யாக துப்­பாக்­கியால் சுட்டார். இதில் வழக்கின் மனு­தா­ர­­ரான பன்சா பூர­மி­கா­னபோர்ன் மற்றும் அவ­ரது வழக்­க­றிஞர் உயி­ரி­ழந்­தனர். மேலும் இருவர் காய­ம­டைந்­தனர். துப்­பாக்கி சூடு நடத்­திய தானின் சந்­தி­ரடிப் காவ­லர்­களால் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்.

தா மாய் மாவட்­டத்தில் உள்ள ஒரு நிலம் தொடர்­பாக தானின் சந்­தி­ரடிப் மற்றும் பன்சா பூர­மி­கா­ன போர்ன் இடையே பிரச்­சினை நீடித்து வந்­தது.

இந்த நில தக­ராறு தொடர்­பான வழக்கில் கடந்த 10 ஆண்­டு­க­ளாக விசா­ரணை நடை­பெற்று வரு­கி­றது. இந்த வழக்கின் தீர்ப்பு செவ்­வாய்க்­க­ிழமை வழங்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டது.

அதை தொடர்ந்து மேஜர் ஜெனரல் தானின் சாந்­தி­ ரடிப் செவ்­வாய்க்­கி­ழமை காலை நீதி­மன்­றத்­திற்கு வந்தார். அதன்பின் காலை 9.15 மணி­ய­ளவில் வழக்கை தொடர்ந்த பன்சா பூர­மி­கா­னபோர்ன் தன் மனைவி மற்றும் இரண்டு வழக்­க­றி­ஞர்­க­ளுடன் நீதி­மன்றம் வந்தார்.

நீதி­பதி வரு­வ­தற்கு முன்­பாக இரு­த­ரப்­பினர் இடையே நீதி­மன்ற அறையில் வாக்­கு­வாதம் நடை­பெற்­றது. அப்­போது தானின் சந்­தி­ரடிப் திடீ­ரென தன் துப்­பாக்­கியை எடுத்து பன்சா பூர­மி­கா­னபோர்ன் மற்றும் அவர் உடன் வந்­தி­ருந்­த­வர்கள் மீது சர­மா­ரி­யாக சுட்டார்.

இந்த தாக்­கு­தலில் பன்சா பூர­மி­கா­னபோர்ன், அவ­ரது மனைவி சுபபோர்ன் மற்றும் 2 வழக்­க­றி­ஞர்கள் காய­ம­டைந்­தனர். தாக்­குதல் நடத்­திய தானின் சந்­தி­ர­டிப்பை அங்­கி­ருந்த பொலிஸார் துப்­பாக்­கியால் சுட்­டனர். பின்னர் ஐந்து பேரும் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

ஆனால் பன்சா பூர­மி­கா­னபோர்ன், அவ­ரது வழக்­க­றி­ஞர்­களில் ஒரு­வ­ரான விஜய் சுக்­கரோம் மற்றும் துப்­பாக்கி சூடு நடத்­திய தானின் சந்­தி­ர­படி ஆகிய மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த பன்சா பூரமிகானபோர்ன் முன்னாள் பிரதமர் யிங்கிலக் ஷினாவத்ராவின் சட்டத்தரணியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!