‘நட்ராஜ் ஷொட்’ அடித்த ரன்வீர் சிங்குக்கு கபில் தேவ் பாராட்டு

0 404

நடிகர் ரன்வீர் சிங், ’83’ திரைப்­ப­டத்தில் நட்ராஜ் ஷொட் அடிக்கும் காட்சி அடங்­கிய புகைப்­படம் வெளி­யா­கி­யுள்­ளது. இப்­பு­கைப்­ப­டத்தைப் பார்த்த இந்­திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ், ரன்வீர் சிங்­குக்கு பாராட்டுத் தெரி­வித்­துள்ளார்.

ரன்வீர் சிங்

 

கபில் தேவ் தலை­மையில் 1983 ஆம் ஆண்டு இந்­திய கிரிக்கெட் அணி உலகக் கிண்­ணத்தை வென்­றமை தொடர்­பான திரைப்­ப­டத் தில், கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடித்து வரு­கிறார்.

கபில்தேவ்

 

சகல துறை வீர­ரான கபில்­தேவின் ‘நட்ராஜ் ஷொட்’ மிகப் பிர­சித்தி பெற்­றது. இந்­நி­லையில் ரன்வீர் சிங் நட்ராஜ் ஷொட் அடிக்கும் காட்சி அடங்­கிய புகை­படம் அண்­மையில் வெளி­யா­கி­யது.

ரன்வீர் சிங்­குக்கு நட்ராஜ் ஷொட் அடிப்­ப­தற்கு கபில்தேவ் தான் கற்­றுக்­கொ­டுத்­தாராம்.

புகைப்­ப­டத்தைப் பார்த்த கபில்தேவ், நடிகர் ரன்வீர் சிங்­குக்கு பாராட்டுத் தெரி­வித்­துள்ளார்.

இப்­ப­டத்தில் கபில் தேவின் மனைவி ரெமி கபூர் வேடத்தில் ரன்வீர் கபூரின் மனை­வி­யான நடிகை தீபிகா படு­கோனே நடிக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

கபீர் கான் இயக்கும் இப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!