தலைவழுக்கையான இளைஞர் தொடர்பான ‘பாலா’ வசூலில் பெரு வெற்றியீட்டியது
அயூஷ்மன் குராணா கதாநாயகனாக நடித்த ‘பாலா’ திரைப்படம் வசூலில் பெரு வெற்றியீட்டியுள்ளது.இது இளம் வயதிலேயே தலை வழுக்கை ஏற்பட்ட இளைஞர் ஒருவர் எதிர்நோக்கும் அழுத்தங்கள் தொடர்பான கதையம்சம் கொண்ட திரைப்படமாகும்.
பூமி பட்நாகர் மற்றும் யமி கௌதம் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அமர் கௌஷிக் இயக்கிய ‘பாலா’ படத்தை தினேஷ் விஜன் தயாரித்திருந்தார்.
25 கோடி இந்திய ரூபா செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் கடந்த 7 ஆம் திகதி வெளியிடப்பட்டது. 6 நாட்களில் உலகளாவிய ரீதியில் சுமார் 94 கோடி இந்திய ரூபாவை இப்படம் வசூலித்துள்ளது. இப்படம் அடுத்த வாரம் 100 கோடி ரூபா வசூலை கடக்கும் என நம்பப்படுகிறது.