சட்டவிரோதமான முறையில் தேர்தல் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த சந்தேகநபர் கைது!

0 641

தும்மலசூரிய, வீரகொடியான பிரதேசத்தில் தேர்தல் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த சந்தேக நபரொருவரை இன்று (14) கைதுசெய்துள்ளதாக தும்மலசூரிய பொலிஸார் தெரிவித் துள்ளனர்.

நேற்று நள்ளிரவு முதல் தேர்தல் பிரசாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வீரகொடியான பிரதேசத்தில் வீடுவீடாகச் சென்று தேர்தல் துண்டுபிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தபோது இந்நபரை கைதுசெய்துள்ளதாக தும்மலசூரிய பொலிஸார் தெரிவிதுள்ளனர்.

இதன்போது, குறித்த சந்தேகநபரிடமிருந்து 155 துண்டுபிரசுரங்கள், 30 தபால் உறைகள் மற்றும் சந்தேகநபர் வருகைதந்த மோட்டார் சைக்கிள் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!