‘ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் ஹீரோவாக விளங்கினார்’! -பாக் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் (வீடியோ)

0 202

அல் கைதா இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் ஹீரோவாவாக விளங்கினார் என பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் முன்னர் அளித்த செவ்வியொன்றின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

காஷ்மீரில் இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போராட காஷ்மீரிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டது எனவும் முஷாரப் தெரிவித்துள்ளார்.

திகதி குறிப்பிடப்படாத இந்த் நேர் காணல் வீடியோவை பாகிஸ்தான் அரசியல்வாதி ஃபர்ஹத்துல்லா பாபர் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

அந்த வீடியோவில் பர்வேர்ஸ் முஷாரப் கூறுகையில்,’1979 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் பயனுக்காகவும் சோவியத் படைகளை விரட்டியடிக்கவும் ஆப்கானிஸ்தானில் மதத் தீவிரவாதத்தை அறிமுகம் செய்தோம்.

முஜாஹிதீன்களை உலகம் முழுவதிலுமிருந்து திரட்டி பாகிஸ்தானுக்குக் கொண்டு வந்து ஆயுதப் பயிற்சி அளித்தோம். தலிபான்களுக்கு பயிற்சியளித்து ஆப்கானுக்கு அனுப்பினோம். அவர்கள் எங்கள் ஹீரோக்களாக இருந்தனர்.

ஹக்கானி எங்கள் ஹீரோவாக இருந்தார்.  பின்லேடன், ஜவாஹிரி ஆகியோர் எங்கள் ஹீரோக்களாக இருந்தனர்.
பின்னர் உலகச் சூழ்நிலை மாறியது, விடயங்களை உலக நாடுகள் வேறு மாதிரிப் பார்க்கத் தொடங்கி விட்டன. எங்கள் ஹீரோக்கள் வில்லன்களாக மாறிவிட்டனர்’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!