அபுதாபி பத்து 10 லீக் கிரிக்கெட் இன்று ஆரம்பம் ஏழு அணிகளில் இலங்கையின் 15 வீரர்கள்

0 254

(எம்.எம்.சில்­வெஸ்டர்)

ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் அபு­தாபி செய்யத் கிரிக்கெட் மைதா­னத்தில் இன்று ஆரம்­ப­மாகும் அபு­தாபி பத்து 10 (டி 10) லீக் கிரிக்கெட் போட்­டியில் எட்டு அணிகள் பங்­கு­பற்­ற­வுள்­ளன. மூன்­றா­வது தட­வை­யாக நடத்­தப்­படும் இப் போட்டி எதிர்­வரும் 24ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள இறுதி ஆட்­டத்­துடன் நிறை­வு­பெ­ற­வுள்­ளது.

இரண்டு குழுக்­க­ளாக வகுக்­கப்­பட்டு லீக் முறையில் நடத்­தப்­படும் இப் போட்­டியில் ஏ குழுவில் திசர பெரேரா தலை­மை­யி­லான பங்ளா டைகர்ஸ், ஷேன் வொட்சன் தலை­மை­யி­லான டெக்கான் க்ளடி­யேட்டர்ஸ், ஒய்ன் மோர்கன் தலை­மை­யி­லான டெல்ஹி புல்ஸ், ஹஷிம் அம்லா தலை­மை­யி­லான கர்­நா­டகா டஸ்கர்ஸ் ஆகிய அணி­களும் பி குழுவில் யுவ்ராஜ் சிங் தலை­மை­யி­லான மாரத்தா அரே­பியன்ஸ், ஷஹித் அப்­ரிடி தலை­மை­யி­லான குவா­லண்டர்ஸ், டெரன் சமி தலை­மை­யி­லான நொதர்ன் வொரியர்ஸ், மொயீன் அலி தலை­மை­யி­லான டீம் அபு­தாபி ஆகிய அணி­களும் விளை­யா­ட­வுள்­ளன.

திசர பெரேரா (அணித் தலைவர்),ஷெஹான் ஜய­சூ­ரிய, கெவின் கொத்­தி­கொட,மலிந்த புஷ்­ப­கு­மார,உப்புல் தரங்க, நுவன் பிரதீப்,அசேல குண­ரட்ண,பானுக்க ராஜ­பக்ச,துஷ்மந்த சமீர,ஏஞ்­சலோ மெத்­தியூஸ், குசல் பெரேரா, லசித் மாலிங்க,தசுன் சானக்க,வனிந்து ஹச­ரங்க,நிரோஷன் திக்­வெல்ல

 

முதல் சுற்றில் ஒவ்­வொரு குழு­விலும் இடம்­பெறும் அணிகள் லீக் முறையில் ஒன்­றை­யொன்று எதிர்த்­தாடும். லீக் சுற்று முடிவில் அணிகள் தர­வ­ரி­சைப்­ப­டுத்­தப்­பட்டு இரண்டாம் சுற்றில் மோதும்.

இந்த சுற்­றில ஒரு குழு­வி­லுள்ள அணிகள் மற்­றைய குழுவில் உள்ள அணி­க­ளுடன் விளை­யாடும்.இரண்டாம் சுற்று முடிவில் முத­லி­ரண்டு இடங்­களைப் பெறும் அணிகள் நேரடி அரை இறு­தியில் விளை­யாடும். 3ஆம், 4ஆம் இடங்­களைப் பெறும் அணிகள் நீக்கல் போட்­டியில் விளை­யாடும்.

முத­லா­வது அரை இறு­தியில் தோல்வி அடையும் அணியும் நீக்கல் போட்­டியில் வெற்­றி­பெறும் அணியும் இரண்­டா­வது அரை இறு­தியில் மோதும்.இரண்டு அரை இறு­தி­களில் தோல்வி அடையும் அணிகள் 3ஆம் இடத்தைத் தீர்­மா­னிக்கும் போட்­டி­யிலும் வெற்­றி­பெறும் அணிகள் இறுதிப் போட்­டியில் விளை­யாடும்.

அபு­தாபி பத்து 10 கிரிக்கெட் போட்­டியில் இலங்­கையின் முன்­னனி வீரர்­க­ளான லசித் மாலிங்க, ஏஞ்­சலோ மெத்யூஸ், திசர பெரேரா, குசல் பெரேரா, நிரோஷன் திக்­வெல்ல உட்­பட 15 இலங்கை வீரர்கள் விளை­யா­ட­வுள்­ளனர்.

முன்னாள் இலங்கை வீரர்­க­ளான உப்புல் தரங்க, அசேல குண­ரட்ன மற்றும் இது­வரை இல­ங்கை அணியில் இடம்­பெ­றாத கெவின் கொத்­தி­கொட ஆகி­யோரும் விளை­யா­ட­வுள்­ளனர்.

குவா­லண்டர்ஸ் அணியைத் தவிர்ந்த மற்­றைய அணி­களில் இலங்கை வீரர்கள் இடம்­பெ­று­கின்­றனர்.
இலங்கை வீரர்கள்பங்ளா டைகர்ஸ் – திசர பெரேரா (அணித் தலைவர்), ஷெஹான் ஜய­சூ­ரிய, கெவின் கொத்­தி­கொட.
மாரத்தா அரே­பியன்ஸ் – லசித் மாலிங்க, தசுன் சானக்க, வனிந்து ஹச­ரங்க.டெல்ஹி புல்ஸ் – ஏஞ்­சலோ மெத்­தியூஸ், குசல் பெரேரா.டெக்கன் க்ளடி­யேட்டர்ஸ் –  பானுக்க ராஜ­பக்ச.                                         நொதர்ன் வொரியர்ஸ் –  நுவன் பிரதீப், அசேல குண­ரட்ண.                    கர்­நா­டகா டஸ்கர்ஸ் – உப்புல் தரங்க, மலிந்த புஷ்­ப­கு­மார.                    டீம் அபு­தாபி – நிரோஷன் திக்­வெல்லபோட்டி அட்­ட­வணை
தினமும் 3 போட்­டிகள் நடை­பெ­று­வ­துடன், கடைசி நாளன்று இரண்டு போட்­டிகள் நடத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இன்று நடை­பெ­ற­வுள்ள முத­லா­வது போட்­டியில் லசித் மாலிங்க இடம்­பெறும் மாரத்தா அரே­பியன்ஸ் அணியை நுவன் பிரதீப் இடம்­பெறும் நொதர்ன் வொரியர்ஸ் அணி எதிர்த்­தா­ட­வுள்­ளது.  

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!