பங்­க­ளாதேஷ் 150 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது இந்­தியா 86 ஓட்­டங்­க­ளுக்கு ஒரு விக்கெட்

0 40

இந்தூர், ஹொல்கார் விளை­யாட்­ட­ரங்கில் நேற்று ஆரம்­ப­மான முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் இந்­திய அணியின் பந்­து­வீச்­சா­ளர்­க­ளிடம் திண­றிய பங்­க­ளாதேஷ் அணி; அதன் முத­லா­வது இன்­னிங்ஸில் 150 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது.
மொஹமத் ஷமி, ரவிச்­சந்­திரன் அஷ்வின், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் மிகத் துல்­லி­ய­மாக பந்­து­வீசி இந்­திய இர­சி­கர்­களின் பலத்த பாராட்டைப் பெற்­றனர்.

பதி­லுக்கு மிக நிதா­ன­மாகத் துடுப்­பெ­டுத்­தா­டிய இந்­தியா முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முத­லா­வது இன்­னிங்ஸில் அணித் தலைவர் ரோஹித் ஷர்­மாவின் விக்­கெட்டை இழந்து 86 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது.

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் (ஐ. சி. சி.) உலக டெஸ்ட் வல்­லவர் தொட­ராக அமையும் இந்தத் தொடரின் முத­லா­வது போட்­டியில் பங்­க­ளாதேஷ் அதன் முதல் இன்­னிங்ஸில் 58 ஓவர்கள் தடு­மாற்­றத்­துக்கு மத்­தியில் துடுப்­பெ­டுத்­தாடி ஆமை வேகத்தில் ஓட்­டங்­களைப் பெற்­றது.

பங்­க­ளாதேஷ் துடுப்­பாட்­டத்தில் முஷ்­பிக்குர் ரஹிம், மொமினுள் ஹக், லிட்டன் தாஸ் ஆகிய மூவரே 20 ஓட்­டங்­க­ளுக்கு மேல் பெற்­றனர்.முஷ்­பிக்குர் ரஹிமும் மொமினுள் ஹக்கும் 4ஆவது விக்­கெட்டில் பகிர்ந்த 68 ஓட்­டங்­களே பங்­க­ளா­தேஷின் சிறந்த இணைப்­பாட்­ட­மாக அமைந்­தது.

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய இந்­தியா, அணித் தலைவர் ரோஹித் ஷர்­மாவை குறைந்த ஓட்­டங்­க­ளுக்கு இழந்­தது.
ஆனால், மயன்க் அகர்வால், சேத்­தேஷ்வர் புஜாரா ஆகிய இரு­வரும் பொறுப்­பு­ணர்­வுடன் துடுப்­பெ­டு­த்­தாடி பிரிக்­கப்­ப­டாத இரண்­டா­வது விக்­கெட்டில் 72 ஓட்­டங்­களைப் பகிர்ந்து இந்­தி­யாவைப் பலப்­ப­டுத்­தினர்.

எண்­ணிக்கை சுருக்கம்
பங்­க­ளாதேஷ் 1ஆவது இன்: சக­லரும் ஆட்­ட­மி­ழந்து 150 (முஷ்­பிக்குர் ரஹிம் 43, மொமினுள் ஹக் 37, லிட்டன் தாஸ் 21, மொஹமத் ஷமி 27 – 3 விக்., இஷாந்த் ஷர்மா 20 – 2 விக்., ரவிச்­சந்­திரன் அஷ்வின் 43 க்கு 2 விக்., உமேஷ் யாதவ் 47 – 2 விக்.)
இந்தியா 1ஆவது இன்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 86 – 1 விக். (சேத்தேஷ்வர் புஜாரா 43 ஆ.இ., மயன்க் அகர்வால் 37 ஆ.இ.)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!