தாயைப் பராமரிக்க வர்த்தகரால் பணிக்கு அமர்த்தப்பட்ட பெண் தங்க நகைகள், பணத்தை திருடி பண்டிகையை கொண்டாடினார்: நான்கு கடைகளில் ஈடுவைக்கப்பட்ட தங்க நகைகளும் பொலிஸாரால் மீட்பு!

0 675

(கம்­பளை நிருபர்)

தான் பணிப்­பெண்­ணாக கட­மை­யாற்­றி­வந்த வீட்டு உரி­மை­யா­ளரின் வீட்டில் 4 இலட்­சத்து 98 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான தங்க ஆப­ர­ணங்கள் உட்­பட உள்­நாட்டு, வெளி­நாட்டு பணம் என்­பனவற்றைத் திரு­டினார் என்ற சந்­தே­கத்தின் பேரில் புஸல்­லாவ பொலி­ஸா­ரினால் பெண் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். குறித்த பெண்­ணினால் திரு­டப்­பட்ட தங்க ஆப­ர­ணங்­களை கம்­பளை தவ­லந்­தனை பிர­தே­சத்­தி­லி­ருந்து கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

இதனை­ய­டுத்து சந்­தேக நபரை நாவ­லப்­பிட்டி நீதி­மன்ற மேல­திக நீதிவான் அமில பிரசாத் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தி­ய­போது, எதிர்­வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்டார்

புஸல்­லாவ பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பிர­தே­சத்தைச் சேர்ந்த நபர் ஒரு­வரின் வீட்டில் பணிப்­பெண்­ணாக கட­மை­யாற்றி வந்த நிலை­யி­லேயே 9 சோடி காத­ணிகள் (தோடுகள்) 6 மோதி­ரங்கள் 3 பென்­டன்கள் தங்கக் காசுகள் 3 உட்­பட மூன்று இலட்­சத்து அறு­பது ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான தங்க ஆப­ர­ணங்­க­ளையும் ஒரு இலட்­சத்து எட்­டா­யிரம் ரூபாய் அமெ­ரிக்க டொலர், இலங்கை நாணயம் 36 ஆயிரம் ரூபா­வையும் திரு­டி­யுள்­ள­தாக முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளதுவீட்டின் உரி­மை­யாளர் வர்த்­தக நிலையம் ஒன்றை நடத்தி வந்த நிலையில் வீட்டில் தனது வய­தான தாயைப் பரா­ம­ரிப்­ப­தற்­காக சந்­தேக நப­ரான பெண்ணை வேலைக்கு அமர்த்­தி­யுள்ளார்.

இந் நிலையில், வீட்டில் இருந்த அலு­மா­ரியை அதன் உரி­மை­யாளர் இறு­தி­யாக கடந்த செப்­டம்பர் மாதம் 11 திக­தியே திறந்து பார்த்­துள்­ள­தா­கவும் அதன் பின் ஒக்­டோபர் மாதம் 29 ஆம் திகதி மீண்டும் தங்க ஆப­ர­ணங்கள் சில வற்றை வைப்­ப­தற்­காகத் திறந்­த­போது அவை காணாமல் போன விடயம் தெரிய வந்­துள்­ளது இதை­ய­டுத்து புஸல்­லாவ பொலிஸ் நிலை­யத்தில் செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டுக்­க­மைய விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலிஸார் குறித்த பெண்ணைக் கைது செய்து விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­போதே குறித்த ஆப­ர­ணங்­களைத் திருடி கம்பளை மற்றும் தவலந்தனை ஆகிய நகரங்களில் உள்ள நான்கு கடைகளில் ஈடுவைத்து அந்தப் பணத்தில் பண்டிகை ஒன்றை கொண்டாடியமையும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது .

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!