பிஸ்னஸ் கார்ட் இணையத்தில் பரவியதன் மூலம் அதிக தொழில்வாய்ப்புகளைப் பெற்ற வீட்டுப் பணிப்பெண்

0 925

இந்தியாவைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவரின் பிஸ்னஸ் கார்ட் மூலம்; அவருக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளனவாம்.

புனே நகரத்தைச்சேர்ந்த கீதா கேல் எனும் இவர் வீடுகளில் பணிப்பெண்ணாக தொழில்புரிபவர். அண்மையில் இவர் தனது வேலையை இழந்ததால் கவலையுடன் காணப்பட்டார்.

எனினும் அவரின் எஜமானிகளில் ஒருவரான தனஸ்ரீ ஷிண்டே, கீதாவுக்காக பிஸ்னஸ் கார்ட் ஒன்றை தயாரித்து அவருக்கு உதவ முன்வந்தார். அச்சகமொன்றில் 100 கார்ட்கள் தயாரிக்கப்பட்டன. அயலிலுள்ள வீடுகளுக்கு அந்த அட்டைகள் விநியோகிக்கப்பட்டன.

அத்துடன் சமூக வலைத்தளத்திலும் இந்த பிஸ்னஸ் கார்ட்டை தனஸ்ரீ ஷிண்டே வெளியிட்டார்.

அதையடுத்து கீதாவுக்கு பல வீடுகளிலிருந்து பணிப்பெண்ணாக பணியாற்ற அழைப்புகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!