புத்தளத்திலிருந்து மன்னாருக்குச் சென்ற பஸ்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம், கல்வீச்சு!

0 1,633

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக புத்தளத்திலிருந்து மன்னாருக்குச் சென்றவர்கள் பயணித்த   இரு பஸ்கள் மீத தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று (16) காலை தந்திரிமலை பொலிஸ் பிரிவின் போகொட சப்பாத்துப் பாலம் அருகில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இடத்தில் பயணித்துக் கொண்டிருந்த இரு பஸ்கள் மீது துபாக்கிப் பிரயோகம்  மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கல்வீசப்பட்டதாகவும் செட்டிகுள்ம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இரு பஸ்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பான விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!