‘முதலாவது தேர்தல் முடிவு இன்று நள்ளிரவுக்குப் பின்னர்’ -தேர்தல் ஆணையர்

0 1,046

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு இன்று (16)  காலை 7.00 மணிக்கு ஆரம்பமான நிலையில் கடந்த 6 மணித்தியால காலப் பகுதியில் (1.00 மணி வரை) எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி சுமூகமாக இடம்பெற்றுள்ளது.

குறித்த காலப் பகுதிக்குள்ளான வாக்களிப்பு வீதமும் 50 சத வீதத்தில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி வாக்களிப்பின் முதலாவது முடிவை இன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் வெளியிடக் கூடியதாக இருக்கும் என சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!