காலியில் தமிழர்களை அச்சுறுத்தியமை தொடர்பில் விசாரணை!
(எம்.எப்.எம்.பஸீர்)
காலி – நாகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுகம – காபில் தோட்ட் தமிழர்கள் வாக்களிக்கச் செல்லக் கூடாது என அச்சுறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இன்று )16) பதிவாகியுள்ளது.
நாகொட பிரதேச சபை ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் தமிழ் மக்களை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட நாகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் நாகொட பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.