வாக்களிப்பு நேரத்தில் 26 பேர் கைது; அடையாளம் காணப்பட்ட இடங்களில் கலகத் தடுப்புக் குழுக்கள்!

0 859

                                                                                                                                                           (எம்.எப்.எம்.பஸீர்)
ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (16) காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இடம்பெற்ற நிலையில், இக்காலப் பகுதியில் பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகவில்லை எனவும் வாக்களிப்பு மிக சுமுகமாக இடம்பெற்று முடிந்ததாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

இதன்படி நேற்று வாக்குப் பதிவு இடம்பெற்ற 10 மணி நேர காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய விதி மீறல்கள் மற்றும் சிறு, சிறு வன்முறைகள் தொடர்பில் 26 பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களை மையப்படுத்தி 153 கலகத் தடுப்புக் குழுக்கள் நிலைகொள்ளச் செய்யப்பட்டுள்ளன. இதில் 54 குழுக்கள் பூரண கலகத் தடுப்புக் குழுக்களாகவும் 99 குழுக்கள் அரைக் கலகத் தடுப்பு குழுக்களாகவும் செயற்படவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!