நீரி­ழிவு நோயினால் பாதிக்­கப்­படும் இலங்­கை­யர்­களின் எண்­ணிக்கை 24 சத வீதத்துக்கு அதி­க­ரிக்கும் அபாயம்! -விசேட வைத்­திய நிபுணர் பிரசாத் கட்­டு­லந்த

0 256

(ஆர்.விதுஷா)

இலங்­கையில் நீர­ழிவு நோயினால் பாதிப்­புக்­கு­ளா­கின்­ற­வர்­களின் வீதம் அதி­க­ரித்து செல்­வ­தனை காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

அந்த வகையில் கடந்த 2005 தொடக்கம் 2015 வரை­யான காலப்­ப­கு­தியில் நீரி­ழி­வு­நோ­யினால் பாதிப்­புக்­குள்­ளா­வோரின் எண்­ணிக்கை 15 சத வீதத்­தினால் அதி­க­ரித்­தி­ருந்­தது.

ஆயினும் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் நீரி­ழிவு நோயினால் பாதிப்­புக்­குள்­ளா­ன­வர்­களின் எண்­ணிக்கை 24 சத வீதத்­துக்கு அதி­க­ரித்த மட்­டத்தில் செல்­வ­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

உலக நீரி­ழிவு தினத்தை முன்­னிட்டு சுகா­தார அமைச்சின் தொற்­றாத நோய்ப்­பிரின் விசேட வைத்­தி­யர்­களும் , லயன்ஸ் கழ­கத்­தி­னரும் இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று வியா­ழக்­கி­ழமை சுகா­தார மேம்­பாட்டு பணி­ய­கத்தில் இடம் பெற்­றது.

அதில் கலந்து கொண்டு கருத்து தெரி­வித்த விசேட வைத்­திய நிபுணர் பிரசாத் கட்­டு­லந்த கூறி­ய­தா­வது ,
2016 ஆம் ஆண்­ட­ளவில் நாட­ளா­விய ரீதியில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வின் பிர­காரம் 10 பேரில் ஒருவர் நீரி­ழிவு நோய்­தாக்­கத்­துக்கு உள்­ளா­கி­யி­ருந்­தனர். அந்தக் காலப்­ப­கு­தியில் கொழும்பு மாவட்­டத்தை எடுத்துக் கொண்டால் 6 பேரில் ஒருவர் இந்த நோய் தாக்­கத்­துக்கு உள்­ளா­கி­யி­ருந்தார்.

இந்­நி­லையில் கடந்த 2018 இல் மேற்­கொண்­டி­ருந்த ஆய்­வுக்­க­மைய நீரி­ழிவு நோய் தாக்­கத்­துக்கு உள்­ளா­கின்­ற­வர்­களின் எண்­ணிக்கை சுமார் 24 சத வீதத்­தினால் அதி­க­ரித்­த­மையை காணக் கூடி­ய­தா­க­வி­ருந்­த­துடன், அந்தக் கால­கட்­டத்தில் கொழும்பு மாவட்­டத்தில் மாத்­திரம் நான்கு பேரில் ஒருவர் நீரி­ழிவு நோய்த்­தாக்­கத்­துக்கு உள்­ளா­கி­யி­ருந்தார்.

அந்த வகையில் கடந்த இரு வரு­டங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வின் பிர­காரம் யாழ்ப்­பாண மாவட்­டத்தில் மாத்­திரம் சுமார் 20 சத வீதத்­தினால் நீரி­ழிவு நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­மையை காணக்­கூ­டி­ய­தா­க­வி­ருந்­தது.

சிறு­வர்கள்
சிறு­வர்­களும் நீரி­ழிவு நோயினால் பாதிப்­புக்­குள்­ளா­கின்­றனர் .அந்த வகையில் நான்கு சிறு­வர்­களில் ஒருவர் நீரி­ழிவு நோய்த்­தாக்­கத்­திற்கு உள்­ளா­வ­தற்­கான இரு அறி­கு­றி­களை அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வி­ருக்­கின்­றது.

ஆகவே , துள்­ளி­வி­ளை­யாடும் பிள்­ளை­களை சுறு­சு­றுப்­பாக இயங்­கு­வ­தற்­கான சூழலை ஏற்­ப­டுத்தி கொடுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். அவர்­க­ளு­டைய கல்­வியில் மாத்­திரம் கவனம் செலுத்­தாமல் சுகா­தார நடத்தை தொடர்பில் கவனம் செலுத்த வேண்­டி­யது பெற்­றோர்­க­ளு­டைய கட­மை­யாகும்.

நீழிவு நோய்க்­கான கார­ணிகள்
உகந்த முறை­யான உணவு பழக்­க­மின்மை, புகை­யிலை , மது­பான பாவனை , மன உழைச்­ச­லுக்கு உள்­ளாதல் மற்றும் உட­லியல் குறை­பா­டு­களின் கார­ண­மாக நீரி­ழிவு நோய் தாக்கம் ஏற்­ப­டு­கின்­றது. இந்த வகையில் முறை­யான உணவு பழக்கம் இன்மை மற்றும் மது பான மற்றும் புகை­யிலை பாவனை ஆகிய கார­ணி­க­ளி­னா­லேயே அதி­க­ளவில் இந்த நோய்த்­தாக்கம் ஏற்­ப­டு­கின்­றமை ஆய்­வு­க­ளின்­படி உறு­தி­யா­கி­யுள்­ளது.

இவ்­வாறு நோய்­தாக்­கத்­துக்கு உள்­ளா­கின்­ற­வர்­களின் எண்­ணிக்கை ஒவ்­வொரு வரு­டமும் தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்த வண்ணம் உள்­ளது. இந்­நி­லையில் அதனை எவ்­வாறு எதிர்­கொள்­வது என்­பது தொடர்பில் அனை­வரும் கவனம் செலுத்த வேண்­டி­யமை அவ­சி­ய­மா­ன­தாகும். சிறுவர் இந்த பாதிப்­புக்கு உள்­ளா­காமல் இருப்­ப­தனை உறுதி செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வேண்­டி­யதும் முக்­கி­ய­மான விட­ய­மாகும்.

இந்த நோய் தாக்கம் ஆரம்ப கட்­டத்தில் இருக்கும் போதே தடுப்­ப­த­ற­்கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும். அதற்­காக மருத்­து­வர்­க­ளினால் பரிந்­து­ரைக்­கப்­பட்ட மருந்து பொருட்­களை முறை­யாக உட்­கொள்ள வேண்டும். அதன் ஊடாக இந்த தாக்­கத்தை கட்­டுப்­ப­டுத்திக் கொள்­ளக்­கூ­ய­தா­க­வி­ருக்கும். அதற்­காக பல்­வேறு பட்ட செயற்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. கிரா­மிய மட்­டத்­தி­லான செயற்­திட்­டங்­களும் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

40 சத வீத­மானோர் நீரி­ழிவு நோய்த் தொற்றின் ஆரம்ப மட்டத்தில் உள் ளமை ஆய்வுகளின் படி உறுதியாகி யுள்ளது. அவர்கள் அதனை கவனிக் காமல் விடும் பட்சத்தில் 4 , 5 வரு டங்களில் முழுமையான நீரிழிவு நோய்த்தாக்கத்திற்கு உள்ளாக நேரிடும்.

அதன் பின்னர் அங்கவீனம் அடைதல், பார்வையை இழத்தல் உள்ளிட்ட பல் வேறு பாதகமான விளைவுகள் ஏற்படும். ஆகவே அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாக இந்த நோய் தாக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளை முன் னெடுக்க முடியும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!