வரலாற்றில் இன்று: நவம்பர் 18: 1993 -தென் ஆபிரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை

0 343

1421 : நெதர்லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பரவியதில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

1993: தென் ஆபிரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை

1477 : இங்கிலாந்தில் அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்ட முதலாவது நூலான “Dictes or Sayengis of the Philosophres” வில்லியம் கக்ஸ்டன் என்பவரால் வெளியிடப்பட்டது.

1493 : கொலம்பஸ் புவர்ட்டோ ரிக்கோ தீவை முதல் தடவையாகக் கண்டார்.

1626 : புனித பீட்டர் பசிலிக்கா தேவாலயம் ரோம் நகரி; திறந்து வைக்கப்பட்டது.

1803 : ஹெயிட்டி புரட்சியின் கடைசிப் பெரும் போர் இடம்பெற்றது. இது ஹெயிட்டி குடியரசு என்ற மேற்கு அரைக்கோளத்தின் முதலாவது கறுப்பினக் குடியரசு அமைக்கப்பட வழிவகுத்தது.

1863 : டென்மார்க்கின் ஒன்பதாம் கிறிஸ்டியன் ஷ்லெஸ்விக் நகரம் டென்மார்க்குக்குச் சொந்தம் என அறிவிக்கும் சட்டமூலத்துக்கு ஒப்பமிட்டார்.

இது 1864 இல் ஜேர்மன்-டென்மார்க் போர் ஏற்பட வழிவகுத்தது.

1883 : கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேர எல்லைகளை வகுத்துக் கொண்டன.

1903 : பனாமா கால்வாய்க்கு தனிப்பட்ட உரிமையை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்பாடு பனாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.

1909 : நிக்கரகுவாவில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 500 புரட்சியாளர்கள் அரசுப்படையினால் கொல்லப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா இரண்டு போர்க்கப்பல்களை அந்நாட்டுக்கு அனுப்பியது.

1918 : லத்வியா ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1926 : பிரித்தானிய இலக்கியவாதி ஜோர்ஜ் பேர்னாட் ஷா, தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க மறுத்தார். நோபல் பரிசு ஸ்தாபகர் அல்பிரட் நோபல், டைனமைட்டை கண்டுபிடித்தவர் என்பதே இதற்குக் காரணம்.

1929 : அத்திலாந்திக் சமுத்திரத்தில் இடம்பெற்ற 7.2 ரிச்டர் பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. 28 பேர் கொல்லப்பட்டனர்.

1943 : இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் பேர்லின் நகரில் குண்டுகளை வீசியதில் 131 பேர் கொல்லப்பட்டனர். இச்சமரில் 9 பிரித்தானிய வான்கலங்கள் அழிக்கப்பட்டன.

1943 : யுக்ரைனில் லூவிவ் என்ற இடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த 6,000 யூதர்கள், ஜேர்மனிய நாஸிப் படைகளினால் கொல்லப்பட்டனர்.

1947 : நியூஸிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச் என்ற இடத்தில் வர்த்தகத் தொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீயினால் 41 பேர் கொல்லப்பட்டனர்.

1963: இலக்கங்களை சுழற்றுவதற்குப் பதிலாக அழுத்தி செயற்படவைக்கும் தொலைபேசி பாவனைக்கு வந்தது.

1978 : கயானாவில் ஜிம் ஜோன்ஸ் என்பவரின் ஆலயத்தில் இடம்பெற்ற கொலை மற்றும் தற்கொலை நிகழ்வுகளில் 270 குழந்தைகள் உட்பட 918 பேர் இறந்தனர்.

1987 : லண்டனில் கிங் க்ரொஸ் சுரங்க ரயில் நிலையத்தில் இடம்பெற்ற தீயில் 31 பேர் கொல்லப்பட்டனர்.

1993: தென் ஆபிரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமையளிக்கும் புதிய அரசியலமைப்புக்கு 21 அரசியல் கட்சிகள் அங்கீகாரம் அளித்தன.

2003: அமெரிக்காவின் மசாசூட்ஸ் மாநிலத்தில் ஒரு பாலினத் திருமணத்துக்கு தடைவிதிப்பபது அரசியலமைப்புக்கு முரணானது என மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அமெரிக்காவில் முதல் தடவையாக மசாசூட்ஸ் மாநிலத்தில் ஒருபாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

2013: செவ்வாய் கிரகத்தை நோக்கி மாவென் விண்கலத்தை அமெரிக்காவின் நாசா நிறுவனம் ஏவியது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!