பங்களாதேஷில் எரிவாயு குழாய் வெடித்து 7 பேர் பலி, 25 பேர் காயம்

0 1,928

பங்களாதேஷில் எரிவாயு குழாயொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 7 பேர் பலியானதுடன் மேலும் 25 பேர் காயமடைந்தனர்.

பங்களாதேஷின் தென்கிழக்குப் பிராந்தியத்திலுள்ள சிட்டாகொங்கின் புறநகரான பதார்காட்டாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது.

எரிவாயு குழாய் வெடித்தால் மதில் ஒன்றின் ஒரு பகதி உடைந்து வீழ்ந்ததாக உள்ளூர் பொலிஸ் அதிகாரி மொஹம்மத் மோஷின் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் 7 பேர் பலியானதுடன் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.எரிவாயு குழாய் வெடித்தமைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!