வாள் சுழற்றி நடனமாடிய இந்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி (வீடியோ)

0 1,168

இந்­திய மத்­திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, குஜ­ராத்தில் நடை­பெற்ற கலா­சார விழாவில் வாள் எடுத்து சுழற்றி நடனம் ஆடிய காட்சி அடங்­கிய வீடியோ சமூக வலைத்­த­ளங்­களில் வேக­மாக பர­வி­யது.

 ஸ்மிரிதி இரானி முன்னாள் நடிகை ஆவார். 43 வய­தான அவர் இந்­திய மத்­திய அர­சாங்­கத்தின் புட­வைத்­துறை மற்றும் பெண்கள், சிறார்கள் அபி­வி­ருத்தி அமைச்­ச­ராக பதவி வகிக்­கிறார்.

அவர் குஜராத் மாநி­லத்தின் பாவ் நக­ரி­லுள்ள சுவாமி நாராயண் குரு­கு­லத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற பெண்கள் மேம்­பாட்டு மன்­றத்தின் கலா­சார விழாவில் பங்­கு­பற்­றினார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட மாண­விகள், ‘தல்வார் ராஸ்’ எனறு அழைக்­கப்­ப­டக்­கூ­டிய குஜ­ராத்தின் பாரம்­ப­ரிய நட­ன­மான வாள் நடனம் ஆடினர்.

மாண­விகள் இரு கைக­ளிலும் வாள்­களை ஏந்­திக்­கொண்டு நடனம் ஆடினர்.

இரு கைக­ளிலும் வாள்­களை சுழற்றி நட­ன­மா­டு­வது ஆபத்­தா­னது என்­ற­போ­திலும் மாண­விகள் நேர்த்­தி­யாக ஆடினர்.

அப்­போது விழாவில் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்து கொண்ட அமைச்சர் ஸ்மிரிதி இரா­னியை மாண­வி­க­ளுடன் சேர்ந்து கொள்­ளு­மாறு விழா ஏற்­பாட்­டா­ளர்கள் கேட்­டுக்­கொண்­டனர்.

அவரும் மிகுந்த உற்­சா­கத்­துடன் களத்தில் இறங்கி இரு கைக­ளிலும் வாளேந்தி சுழற்றி நடனமாடினார். இவரின் நடனம் பார்வையாளர்களின் பலத்த கரகோசத்தை பெற்றது.

(வீடியோ)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!