மூன்று தினங்களுக்குள் பங்களாதேஷ் அணியை இன்னிங்ஸால் தோல்வியடையச் செய்த இந்தியா

0 35

இந்தூர் ஹொல்கார் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் சக­ல­து­றை­க­ளிலும் பங்­க­ளா­தேஷை விஞ்­சிய இந்­தியா மூன்று தினங்­க­ளுக்குள் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 130 ஓட்­டங்­களால் அபார வெற்­றி­யீட்­டி­யது.

ஆரம்ப துடுப்­பாட்ட வீரர் மயாங்க அகர்­வாலின் அபார இரட்டைச் சதமும் மொஹமத் ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, ரவிச்­சந்­திரன் அஷ்வின் ஆகி­யோரின் துல்­லி­ய­மான பந்­து­வீச்­சு­களும் இந்­தி­யாவின் வெற்­றியில் பிர­தான பங்­காற்­றின.

இந்த வெற்­றி­யுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 -– 0 என்ற ஆட்டக் கணக்கில் இந்­தியா முன்­னிலை வகிக்­கின்­றது. அத்­துடன் ஐ.சி.சி. உலக டெஸ்ட் வல்­லவர் தொடரில் இது­வரை விளை­யா­டிய 6 டெஸ்ட் போட்­டி­க­ளிலும் இந்­தியா வெற்­றி­யீட்டி 300 புள்­ளி­க­ளுடன் முத­லி­டத்தில் இருக்­கின்­றது.

கடந்த வியா­ழக்­கி­ழமை ஆரம்­ப­மான இந்த டெஸ்ட் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய பங்­க­ளாதேஷ் அதன் முதல் இன்­னிங்ஸில் 150 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது.

மொஹம்மத் ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ரவிச்­சந்­திரன் அஷ்வின் ஆகியோர் மிகச் சிறப்­பாகப் பந்­து­வீசி 10 விக்­கெட்­க­ளையும் பகிர்ந்­து­கொண்­டனர்.

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய இந்­தியா, மயாங்க அகர்வால் குவித்த அபார இரட்டைச் சதம், சேத்­தேஷ்வர் புஜாரா, அஜின்­கியா ரஹானே, ரவீந்த்ர ஜடேஜா ஆகியோர் பெற்ற அரைச் சதங்­களின் உத­வி­யுடன் இரண்டாம் நாள் ஆட்­ட­நேர முடிவில் 6 விக்­கெட்­களை இழந்து 493 ஓட்­டங்­களைப் பெற்ற நிலையில் முதல் இன்­னிங்ஸை நிறுத்­திக்­கொண்­டது.

தனது எட்­டா­வது டெஸ்ட் போட்­டியில் விளை­யா­டிய மயாங்க அகர்வால், தனது 3ஆவது சதத்தைக் குவித்­த­துடன் மிகக் குறைந்த இன்­னிங்ஸ்­களில் இரண்டு இரட்டைச் சதங்­களைக் குவித்­த­வர்கள் வரி­சையில் இரண்டாம் இடத்தைப் பெற்­றுக்­கொண்டார்.

இந்­தி­யாவின் முன்னாள் வீரர் வினோத் கம்ப்ளி 5 இன்­னிங்ஸ்­களில் இரண்டு இரட்டைச் சதங்­களைக் குவித்­த­துடன் மயான்க் 12 இன்­னிங்ஸ்­களில் இரண்டு இரட்டைச் சதங்­களைப் பெற்றார்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 343 ஓட்­டங்கள் பின்­னி­லையில் இருந்த பங்­க­ளாதேஷ், ஓர­ளவு நிதா­னத்­துடன் துடுப்­பெ­டுத்­தாடி 200 ஓட்­டங்­களைக் கடந்­த­போ­திலும் தோல்­வியைத் தவிர்க்க முடி­யாமல் போனது.

துடுப்­பாட்­டத்தில் மீண்டும் திற­மையை வெளிப்­ப­டுத்­திய முஷ்­பிக்குர் ரஹிம் பொறு­மை­யுடன் துடுப்­பெ­டுத்­தாடி அரைச் சதத்தைப் பெற்றார்.இந்­திய வேகப்­பந்­து­வீச்­சா­ளர்கள் 7 விக்­கெட்­களைப் பகிர்ந்­த­துடன் அஷ்வின் 3 விக்­கெட்­களைக் கைப்­பற்­றினார்.

எண்­ணிக்கை சுருக்கம்
பங்­க­ளாதேஷ் 1ஆவது இன்: சக­லரும் ஆட்­ட­மி­ழந்து 150 (முஷ்­பிக்குர் ரஹிம் 43, மொமினுள் ஹக் 37, மொஹம்மத் ஷமி 27 –- 3 விக்., இஷாந்த் ஷர்மா 20–-2 விக், ரவிச்­சந்­திரன் அஷ்வின் 43 –- 2 விக்., உமேஷ் யாதவ் 47 -– 2 விக்.)

இந்­தியா 1ஆவது இன்: 493 –- 6 விக். டிக்­ளயார்ட் (மயாங்க அகர்வால் 243, அஜின்­கியா ரஹானே 86, ரவீந்த்ர ஜடேஜா 60 ஆ. இ., சேத்தேஷ்வர் புஜாரா 54, அபு ஜயெத் 108 –- 4 விக்.)

பங்­க­ளாதேஷ் 2ஆவது இன்: சகலரும் ஆட்டமிழந்து 213 (முஷ்பிக்குர் ரஹிம் 64, மெஹ்தி ஹசன் மிராஸ் 38, லிட்டன் தாஸ் 35, மொஹம்மத் ஷமி 31 –- 4 விக்., ரவிச்சந்திரன் 42 – 3 விக்., உமேஷ் யாதவ் 51 –- 2 விக்.) ஆட்டநாயகன்: மயான்க் அகர்வால்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!