கார்த்தி, ஜோதிகா நடிக்கும் ‘தம்பி’

0 703

கார்த்தி, ஜோதிகா இணைந்து நடிக்கும் படம் ‘தம்பி’. தமிழ் சினிமாவில் அண்ணன் – தங்கை, அண்ணன் – தம்பி பாசக் கதைகள் தான் அதிகம் வந்துள்ளன.

அக்கா ,- தம்பி பாசம் அதிகம் பார்க்காத ஒன்று. சமீபத்தில் வெளிவந்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் அக்கா – தம்பி பாசத்தைச் சொல்லியிருந்தார்கள்.

இப்போது நிஜ வாழ்க்கையில் அண்ணி, மைத்துனர் ஆக இருக்கும் ஜோதிகா, கார்த்தி, திரை வாழ்க்கையில் அக்கா, தம்பி ஆக நடித்துள்ள ‘தம்பி’ படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டரும் டீசரும் நேற்று முன்தினம் வெளியிட்டார்கள்.

சிறு வயதில் பிரிந்து போன தம்பி, அக்கா மீண்டும் ஒன்று சேர்கிறார்களா இல்லையா என்பது தான் படத்தின் கதையாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

கூடவே படத்தில் எக் ஷன் காட்சிகளும், சஸ்பென்ஸ் திரைக்கதையும் இருக்கிறது

என்பதையும் டீசரைப் பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது.

டீசரில் ஜோதிகா பேசும், ‘அன்பு எல்லாத்தையும் மாத்தும் சரவணா, அது உன்னையும் மாத்தியிருக்கு, என்னையும் மாத்தியிருக்கு’ என்பது தான் படத்தின் ஒன்லைன் கதை.

அதை ஒரு வசனத்திலேயே உணர்த்தியிருக்கிறார்கள்.

அப்பா சத்யராஜிடமிருந்து அக்காவுக்குக் கிடைத்த பாசம், தம்பி கார்த்திக்கு கிடைக்காமல் போயிருக்கலாம்.

அதனால், அவர் சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடிப் போயிருக்கலாம்.கோவாவில் சிலபல திருட்டு வேலைகளைச் செய்பவராக மாறியிருக்கலாம்.

எப்படியோ திரும்பி வந்து மீண்டும் அக்காவிடம் சேரும் போது அவர்கள் குடும்பத்துப் பிரச்சினையை கார்த்தி தீர்க்க முயற்சிக்கலாம் என டீசரைப் பார்த்து நாம் ஒரு கதை எழுதிவிட்டோம்.

ஜோதிகாவின் கணவர் சூர்யாவின் நிஜப் பெயரான சரவணன் என்பதையே கார்த்தியின் கதாபாத்திரப் பெயராக வைத்திருக்கிறார்கள்.

இது படத்தின் ஒரு சிறப்பு. கார்த்தி ஜோடி நிகிலா விமல். அவர் ஒரு பிரேமில் வந்து போகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சவுகார் ஜானகி. டிசம்பர் மாதம் வெளிவர உள்ள இந்த ‘தம்பி’, கார்த்திக்கு அடுத்த வெற்றியைத் தரும் என்பதைப் போல இயக்குநர் ஜீத்து ஜோசப் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!