வரலாற்றில் இன்று: நவம்பர் 19: 2005 -இலங்கையின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்

0 349

1794 : அமெரிக்கப் புரட்சிப் போரின் பின்னர் எழுந்த சில பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு ஐக்கிய அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

1816 : போலந்தின் வோர்ஸோ பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1881 : யுக்ரைனின் ஒடீசா நகரில் விண்கல் ஒன்று வீழ்ந்தது.

2005: இலங்கையின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்

1932 : சோவியத் ஒன்றியத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் இரண்டாவது மனைவி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

1941 : இரண்டாம் உலகப் போர்: மேற்கு அவுஸ்திரேலியாவில் ஜேர்மன், அவுஸ்திரேலிய போர்க்கப்பல்களுக்கிடையில் நிழந்த மோதலில் இரு கப்பல்களும் மூழ்கின.

இதில் 645 அவுஸ்திரேலியக் கடற்படையினரும் 77 நாஸி ஜேர்மனியக் கடற்படையினரும் கொல்லப்பட்டனர்.

1942 : இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் சமர்- சோவியத் படையினர் ஸ்டாலின்கிராட் நகர் மீது மீள் தாக்குதலை ஆரம்பித்தனர். இது பின்னர் அவர்களுக்கு வெற்றியை அளித்தது.

1946 : ஆப்கானிஸ்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகியன ஐநாவில் இணைந்தன.

1969 : அப்போலோ 12 விண்கலத்தில் சென்ற சார்ள்ஸ் கொன்ராட், அலன் பீன் ஆகியோர் சந்திரனில் இறங்கி நடந்த மூன்றாவது, நான்காவது மனிதர்கள் என்ற புகழைப் பெற்றனர்.

1969 : பிரேஸில் கால்பந்தாட்ட வீரர் பெலே தனது 1,000வது கோலை அடித்தார்.

1977 : எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத் அமைதிப் பேச்சுக்களுக்காக இஸ்ரேல் சென்றடைந்தார். இஸ்ரேல் சென்ற முதல் அரபுத் தலைவர் இவராவார்

1977 : போர்த்துக்கல் போயிங் விமானம் ஒன்று மெடெய்ரா என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

1979: அமெரிக்க பணயக்கைதிகளில் 13 பெண்கள் மற்றும் கறுப்பினத்தவர்களை விடுதலை செய்யுமாறு ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா கொமேனி உத்தரவிட்டார்.

1984 :மெக்ஸிக்கோ நகரில் எண்ணெய்க்குதங்களில் ஏற்பட்ட பெரும் வெடிப்புகளினால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 500 பேர் கொல்லப்பட்டனர்.

1985 : பனிப்போர் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி; ரொனால்ட் றீகன், சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பசோவ் இருவரும் ஜெனீவாவில் முதல் தடவையாக சந்தித்தனர்.

1998: மோனிகா லுவின்ஸ்கி விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனுக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றக் குழு குற்றவியல் பிரேரணை விசாரணையை ஆரம்பித்தது.

1999 :மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது சென்ஷோ விண்கலத்தை ஏவியது.

2005 : இலங்கையின் 5 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்.

2010: நியூஸிலர்நதில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தினால் 29 பேர் பலியாகினர்.

2013: லெபனானிலுள்ள ஈரானிய தூதரகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்ததுடன் 160 பேர் காயமடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!