பிரான்ஸில் பாலம் இடிந்ததால் சிறுமி உட்பட இருவர் பலி!
பிரான்ஸில் பாலமொன்று நேற்று இடிந்து வீழ்ந்ததால் ஒரு சிறுமி உட்பட இருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
டவ்லோஸ் நகரிலிருந்து 30 கிலோமீற்றர் தூரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்பாலம் நேற்று இடிந்து வீழ்ந்தால் ஒரு கார், லொறி ஆகியன நீரில் வீழ்ந்தன ஏன உள்@ர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமி 15 வயதானவர். அவர் கார் ஒன்றில் தனது தாயுடன் பயணம் செய்துகொண்டிருந்தார். அக்கார் ஆற்றில் வீழ்ந்ததால் அவர் உயிரிழந்தார். அவரின் தாயார் மீட்கப்பட்டுள்ளார்.
சுழியோடிகள் உட்பட 60 பேர் மீட்பு நடவடிக்கையில ஈடுபட்டனர். ஹெலிகொப்டர்களும் இதற்குப் பயன்படுத்தப்பட்டன.