தென்கொரியாவில் படகு தீப்பற்றியதால் ஒருவர் பலி, 11 பேரை காணவில்லை

0 985

தென் கொரிய கடற்பகுதியில் மீன்பிடிப் படகு தீப்பற்றியதால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேரை காணவில்லை என கொரியாவின் கரையோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர். 

தென் கொரியாவின் ஜேஜூ தீவுக்கு அருகிலுள்ள சிறிய தீவொன்றிலிருந்து 76 கிலோமீற்றர் தூரத்தில் இன்று காலை இப்படகு தீப்பற்றியது.

இப்படகில் கொரியாவைச் சேர்ந்த 6 பேரும் வியட்நாமைச் சேர்ந்த 6 பேரும் இருந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(AFP PHOTO/ Korea Coast Guard)

 
படகு தீப்பற்றிய இடத்திலிருந்து 7.4 கிலோமீற்றர் தொலைவில் கொரியரான ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார்.அவர் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் அறிவித்தனர்.

காணாமல் போன 11 பேரையும் தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடற்படைக் கப்பல்கள், ஹெலிகொப்டர்கள், பொதுமக்களின் படகுகளும் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!