இளம் சட்டத்தரணியின் பதவிப்பிரமாண வைபவத்தில் சட்டத்தரணியின் குழந்தையை தூக்கிக் கொண்டு உறுதிமொழி ஏற்க உதவிய அமெரிக்க நீதிபதி (வீடியோ)

0 1,681

அமெரிக்காவில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்ய வந்த யுவதி உறுதிமொழியை வாசிக்கும்போது அவரின் குழந்தையை நீதிபதி ஒருவர் தூக்கி வைத்துக்கொண்டமை பலரையும் நெகிழச் செய்துள்ளது.

 

டென்னஸி மாநிலத்தின் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி  ரிச்சர்ட் டின் கின்ஸே இவ்வாறு புதிய சட்டத்தரணியின் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டார். 

ஒரு தாயாக இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருந்தாலும் அது ஒரு மிகப்பெரிய பொறுப்பும் கூட. அந்த பொறுப்புடன் தாய் தன்னுடைய தொழில்சார் வேலைகளையும் சிறப்புடன் செய்வது சாதரணமானது அல்ல.

இந்நிலையில், ஜூலியானா லமார் எனும் யுவதி சட்டத்தரணியாக பிரமாணம் செய்வதற்காக நீதிமன்றத்துக்கு வந்தபோது, தனது குழந்தையையும் தூக்கிக் கொண்டு வந்தார். 

அவர் உறுதிமொழியை வாசிக்கும்போது, நீதிபதி ரிச்சர்ட் டின்கின்ஸ் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு உறுதிமொழி ஏற்க உதவினார்.

இதன் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ டுவிட்டரில்  பகிரப்பட்ட பின் 70,000 இற்கும் அதிகமான தடவை பார்வையிடப்பட்டுள்ளது.

நீதிபதி ரிச்சர்ட் டின்கின்ஸின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.

 

 

 

வீடியோ:

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!