கடலில் நீர்ச்சறுக்கலில் ஈடுபட்டவாறு திருமண நிச்சயதார்த்தம் செய்த இளைஞர்

0 1,013

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடலில் நீர்ச்சறுக்கலில் ஈடுபட்டவாறு தனது காதலியுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். ஆனால் இதன்போது அவரின் திருமண நிச்சயதார்த்த மோதிரம் கடலில் தவறி வீழ்ந்தது.

  அமெரிக்காவின் ஹவாய் தீவைச் சேர்ந்த கிறிஸ் கார்த் என்பவர் தனது காதலி லொறீளை ஹவாய் தீவின் வைகிகி பராந்தியத்திலுள்ள குயின்ஸ் கடற்கரையில் சில வருடங்களுக்கு முன்னர முதன் முதலில் சந்தித்தார்.

அண்மையில் அதே கடற்கரையில் நீர்ச்சறுக்கலில் (சேர்பிங்) ஈடுபட்டவாறு தனது காதலியை ப்ரபோஸ் செய்து திருமண மோதிரத்தை அணிவிப்பதற்கு கிறிஸ் கார்த் திட்டமிட்டார்.

இதற்காக பல புகைப்படப்பிடிப்பாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். நீர்ச்சறுக்கலில் ஈடுபட்டவாறேஇ தனது திருமண விருப்பதை கிறிஸ் கார்த் வெளியிட்டார். அதை அவரின் காதலி லொறின் ஏற்றுக்கொண்டார்.

ஆனால்இ நிச்சயதார்த்த மோதிரத்தை கையில் எடுக்க முயன்றபோது அது, தவறி கடலில் வீழ்ந்தது. ஆனால், நகல் மோதிரமொன்றையே நீர்ச்சறுக்கலின் போது தான் கொண்டு சென்றதாகவும் அசல் மோதிரம் கடற்கரையில் இருந்ததாகவும் கிறிஸ் கார்த் பின்னர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!