சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய பின்கடலில் நீந்தி உயிர் தப்பிய மாடுகள்

0 842

அமெரிக்காவில் சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 3 மாடுகள், பல கிலோமீற்றர் தூரம் கடலில் நீந்திச் சென்று உயிர்த்தப்பியமை தெரிய வந்துள்ளது.

செடார் தீவில் டோரியன் சூறாவளிக்கு முன்னர் காணப்பட்ட மாடுகள்

 

வட கரோலினா மாநிலத்தின் செடார் தீவில் வசித்த மாடுகளே இவ்வாறு கடலில் நீந்தி தப்பியுள்ளன.கடந்த செப்டெம்பர் மாதம் அமெரிக்காவின் கிழக்குப் பகுதியை டோரியன் சூறாவளி தாக்கியிருந்தது. இதன்போது வட கரோலினா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இம்மாடுகள் சிக்கின.

அதன்பின் அங்கிருந்த பல மாடுகளைக் காணாமல் போயிருந்தன. அம்மாடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்பட்டது.

செடார் தீவில் டோரியன் சூறாவளிக்கு முன்னர் காணப்பட்ட மாடுகள்

 

ஆனால், அவற்றில் 3 மாடுகள் வேறோர் இடத்தில் அண்மையில் வாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இம்மாடுகள் சுமார் 4 அல்லது 5 மைல் (சுமார் 6 -10 கிலோமீற்றர்) தூரம் கடலில் மிதந்து சென்று சென்று தரைப்பகுதியொன்றை அடைந்திருக்கலாம் என நம்பப்படுவதாக உள்ளூர் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

‘இம்மாடுகள் நீந்தக்கூடியவை. ஆனால், அவை சிறப்பாக நீந்துபவை அல்ல. அவை எவ்வாறு  அவ்வளவு தூரம் தாக்குப்பிடித்தன எனத் தெரியவில்லை’ என உள்ளூர் வன ஜீவராசிகள் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!