மீண்டும் சினிமாவில் அமலா

0 123

‘மைதிலி என்னை காதலி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி 1980 ,- 90களில் தமிழ் திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை அமலா.

 ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுடன் இணைந்து இவர் நடித்த படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டிருந்த அமலா,

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸின் 18 ஆ-வது தயாரிப்பில் தமிழ் மற்றும்

தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் படத்தில் முக்கிய கதாபாத்தி­ரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் சர்வானந்த் நாயகனாக நடிக்க, ரிது வர்மா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இவர்களுடன் நாசர், சதீஷ், ரமேஷ் திலக் மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தை ஸ்ரீ கார்த்திக் இயக்குகிறார்.

இப்படத்தில் நடிப்பது குறித்து நடிகை அமலா அக்கினேனி தனது டுவிட்டரில்,

‘‘ஒரு நடிகர் பலரால் ஆசிர்வதிக்கப்படுகிறார்.

நான் அற்புதமான வாழ்க்கையை குடும்ப வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சினிமாவுக்கு திரும்பி வந்துள்ளேன்.

இது பெரிய அதிர்ஷ்டமானது” என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!