வசீம் ராஸிக்கின் தனி முயற்சி வீண்போனது துர்க்மேனிஸ்தானிடம் இலங்கை தோல்வி

0 462

கத்தார் 2022 உலகக் கிண்ணம் மற்றும் சீனா 2023 ஆசிய கிண்ணம் ஆகி­ய­வற்­றுக்­கான இணை தகு­திகாண் கால்­பந்­தாட்டச் சுற்றில் எச் குழுவில் இடம்­பெறும் இலங்­கைக்கு தோல்­விகள் தொடர்ந்த வண்ணம் உள்­ளன.

அஷ்­காபத், கோப்டெக் விளை­யாட்­ட­ரங்கில் நேற்று மாலை நடை­பெற்ற துர்க்­மே­னிஸ்­தா­னுக்கு எதி­ரான இரண்டாம் கட்ட தகு­திகாண் போட்­டியில் 0–2 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் இலங்கை தோல்வி அடைந்­தது.

ஜேர்­ம­னி­யி­லி­ருந்து அழைக்­கப்­பட்ட தொழில்சார் கால்­பந்­தாட்ட வீரர் அஹ்மத் வசீம் ராஸிக் இப் போட்­டியில் பல சந்­தர்ப்­பங்­களில் தனி­ஒ­ரு­வ­ராக கடும் முயற்­சி­யுடன் பந்தை வேக­மாக எதி­ரணி கோல் எல்­லைக்கு நகர்த்திச் சென்­ற­போ­திலும் அவ­ருக்கு ஈடாக உள்ளூர் வீரர்­களால் ஓட முடி­யாமல் போனதால் கோல் போடும் வாய்ப்­புகள் நழு­விப்­போ­யின.

வசீம் போன்று வேக­மாக ஓடக்­கூ­டிய, நக­ரக்­கூ­டிய வீரர்­களை இனங்­காண இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம் தவ­றினால் இலங்கை கால்­பந்­தாட்டம் மேலும் சரிவை அடை­வது உறுதி என கால்­பந்­தாட்ட விமர்­ச­கர்கள் தெரி­வித்­தனர்.

கொழும்பு குதி­ரைப்­பந்­தயத் திடலில் கடந்த செப்­டெம்பர் 5ஆம் திகதி நடை­பெற்ற முதலாம் கட்டப் போட்­டி­யிலும் 0–2 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை தோல்வி அடைந்­தி­ருந்­தது.

துர்க்­மே­னிஸ்­தா­னுக்கு எதி­ரான நேற்­றைய போட்­டியின் முத­லா­வது பகு­தியில் 43 நிமி­டங்கள் திற­மை­யாக விளை­யா­டிய இலங்கை 44ஆவது நிமி­டத்தில் எதி­ர­ணிக்கு ஒரு கோலை விட்­டது. அந்த சந்­தர்ப்­பத்தில் ஆப்தி பாசிமோவ் மிக வேக­மாக செயற்­பட்டு அலா­தி­யான கோல் ஒன்றைப் போட இடை­வே­ளை­யின்­போது துர்க்­மே­னிஸ்தான் 1–0 என முன்­னிலை வகித்­தது.

இடை­வே­ளையின் பின்னர் போட்­டியின் 59ஆவது நிமி­டத்தில் ஆல்­தி­மிராத் அன்­ன­துர்­தியேவ் மூலம் துர்க்­மே­னிஸ்தான் இரண்­டா­வது கோலைப் போட்­டது.தொடர்ந்து இரண்டு அணி­யி­னரும் கோல் போட எடுத்த முயற்­சிகள் கைகூ­ட­வில்லை.
(என்.வீ.ஏ.)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!