ஒலிம்பிக் தகுதிகாண் அணிக்கு எழுவர் றக்பி தனுஷ் தலைமையிலான இலங்கை பங்கேற்பு

0 622

டோக்­கியோ 2020 ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் ஓர் அம்­ச­மாக இடம்­பெறும் அணிக்கு எழுவர் றக்பி (றக்பி செவன்ஸ்) போட்­டிக்­கான ஆசிய வலய ஒலிம்பிக் தகு­திகாண் சுற்றில் விளை­யா­ட­வுள்ள இலங்கை அணி நேற்று இங்­கி­ருந்து புறப்­பட்டுச் சென்­றது.
ஒலிம்பிக் தகு­திகாண் சுற்று தென் கொரி­யாவின் நாம்டொங் விளையாட்­ட­ரங்கில் எதிர்­வரும் சனி, ஞாயிறு தினங்­களில் நடை­பெ­ற­வுள்­ளது.

அண்­மையில் நடந்து முடிந்து ஆசிய அணிக்கு எழுவர் றக்பி தொடரில் நான்காம் இடத்தைப் பெற்ற இலங்கை அணியில் இடம்­பெற்ற வீரர்­களே பெரும்­பாலும் ஒலிம்பிக் தகு­திகாண் சுற்றில் விளை­யா­ட­வுள்­ளனர்.

இலங்கை அணிக்கு கண்டி கழக வீரரும் கட்­டு­கஸ்­தோட்டை புனித அந்­தோ­னியார் கல்­லூ­ரியின் முன்­னாள்­வீ­ர­ரு­மான தனுஷ் தயான் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். தகு­திகாண் சுற்றில் சிறு முன்­னே­றத்தை இலங்கை அணி வெளிப்­ப­டுத்தும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இலங்கை றக்பி அணியில் பம்­ப­லப்­பிட்டி புனித பேது­ரு­வா­னவர் கல்­லூ­ரியின் முன்னாள் வீரர் கெவின் டிக்சன் ஜோசப், ரீஸா ரபாய்தீன் ஆகி­யோரும் இடம்­பெ­று­கின்­றமை விசேட அம்­ச­மாகும்.

அடுத்த வருட ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவை முன்­னின்று நடத்தும் வர­வேற்பு நாடு என்ற வகையில் ஜப்பான் நேரடி தகு­தி­பெற்­றுள்ள நிலையில் ஆசி­யா­வி­லி­ருந்து இரண்­டா­வது அணி­யாக எந்த நாடு தகு­தி­பெறப் போகின்­றது என்­பதை இந்த தகு­திகாண் சுற்று தீர்­மா­னிக்கும்.

அணிக்கு எழுவர் றக்பி இலங்கை குழாம் தனுஷ் தயான் (அணித் தலைவர்), இரோஷன் சில்வா, ஜேசன் திசா­நா­யக்க, கெவின் டிக்சன் ஜோசப், ரவிந்து ஹெட்­டி­ஆ­ராச்சி, ரீஸா ரபாய்தீன், சச்சித் சில்வா, சுதா­ரக்க டிக்­கும்­புர, விமுக்தி ராகுல.
பயிற்­றுநர்: மெத்யூ லீ, உதவி பயிற்றுநர்: மொஹமத் முஷ்தாக், முகாமையாளர்: ரொஹான் சின்தக்க, உடற்கூற்று மருத்துவர்: தாரக்க வித்தானகே.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!