பி.பீ.எல். கிரிக்கெட்டில் இலங்கை வீரர்கள் ஐவர்

0 906

பங்­க­ளா­தேஷில் நடை­பெ­ற­வுள்ள பங்­க­பந்து பங்­க­ளாதேஷ் ப்றீமியர் லீக் (BPL) கிரிக்கெட் போட்­டி­களில் இலங்கை வீரர்கள் ஐவர் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர்.

 

பங்­க­பந்து பங்­க­ளாதேஷ் ப்றீமியர் லீக் இரு­பது 20 கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 11ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது.
ஏழு அணிகள் பங்­கு­பற்றும் இப் போட்­டியில் 439 வெளி­நாட்டு வீரர்கள் உட்­பட 600க்கும் மேற்­பட்ட கிரிக்கெட் வீரர்கள் விளை­யா­டு­வ­தற்­கான முன்­னோடி பட்­டி­யலில் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

கடந்த காலங்­களில் ஏழு அணி­க­ளுக்கும் தனிப்­பட்ட அல்­லது கூட்டு உரி­மை­யா­ளர்கள் இருந்­த­போ­திலும் இம்­முறை ஏழு அணி­களும் நேர­டி­யாக பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் சபையின் நேரடி பொறுப்பில் இருக்கும்.

முன்­னைய காலங்­களில் அணி­களின் உரி­மை­யா­ளர்கள் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத நிபந்­த­னை­களை முன்­வைத்­த­தா­லேயே இம் முறை ஏழு அணி­களும் பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் சபை­யின்கீழ் நேர­டி­யாகக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன.

இந்த ஏழு அணி­களில் 33 வெளி­நாட்டு வீரர்கள் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­துடன் அவர்­களில் இலங்கை வீரர்கள் ஐவர் இடம்­பெ­று­கின்­றனர்.இலங்­கையில் இரு­பது 20 கிரிக்­கெட்டில் அதி­சி­றந்த வீரர்­க­ளாகத் திகழும் அதி­ரடி துடுப்­பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா, சர்­வ­தேச இரு­பது 20 இலங்கை அணியின் முன்னாள் தலை­வரும் சக­ல­துறை வீர­ரு­மான தசுன் சானக்க ஆகிய இரு­வரும் கமில்லா வொரியர்ஸ் அணி­யினால் வாங்­கப்­பட்­டுள்­ளனர்.

இளம் வீரரும் இவ் வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­களில் இலங்கை சார்­பாக சதம் குவித்த ஒரே ஒரு வீர­ரு­மான அவிஷ்க பெர்­னாண்­டோவை சட்­டோக்ரம் செலஞ்சர்ஸ் அணி இணைத்­துக்­கொண்­டுள்­ளது.

இவ்­வ­ணியில் இடம்­பெறும் அதி­ரடி நாயகன் க்றிஸ் கேலுடன் பெரும்­பாலும் அவிஷ்க பெர்­னாண்டோ ஆரம்ப வீர­ராக ஜோடி சேர்வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.சர்­வ­தேச இரு­பது 20 இலங்கை அணியின் மற்­றொரு முன்னாள் தலை­வ­ரான சக­ல­துறை வீரர் திசர பெரே­ராவை டாக்கா ப்ளட்டூன் அணி வாங்­கி­யுள்­ளது.

இலங்­கையின் மூத்த வீரர்­களில் ஒரு­வ­ரான ஜீவன் மெண்­டிஸை சில்ஹெட் தண்டர்ஸ் அணி இணைத்­துக்­கொண்­டுள்­ளது.
இந்த நான்கு அணி­க­ளுடன் குல்னா டைகர்ஸ், ராஜ்­ஷாஹி றோயல்ஸ், ரன்பூர் ரேஞ்சர்ஸ் ஆகி­ய­னவும் பங்­க­ளாதேஷ் ப்றீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றுகின்றன.

இவ் வருட பங்கபந்து பங்களாதேஷ் ப்றீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டிக்கான இலச்சினை கடந்த வாரம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!