திருடிய மோட்டார் சைக்கிள் 10 தினங்களின் பின் திருடப்பட்ட இடத்திலேயே விட்டுச் சென்ற நபர்!

0 917

(மது­ரங்­குளி நிருபர்)

நிக்­க­வெ­ரட்டி நகரில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­த­போது திருடிச் செல்­லப்­பட்­டி­ருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பத்து தினங்­க­ளுக்குப் பின்னர் நேற்று முன்­தினம் திருடிச் செல்­லப்­பட்ட இடத்­தி­லேயே கொண்டு வந்து நிறுத்­தப்­பட்­டி­ருந்த நிலை யில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக நிக்­க­வெ­ரட்டி பொலி ஸார் தெரி­வித்­தனர்.

இத்­தி­ருட்டுச் சம்­பவம் தொடர்பில் பொலிஸ் நிலை­யத்தில் செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டை­ய­டுத்து விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலிஸார், நகரில் பொருத்­தப்­பட்­டி­ருந்த கண்­கா­ணிப்பு கெம­ராக்­களில் பதி­வா­கி­யி­ருந்த காட்­சி­களின் அடிப்­ப­டையில் மோட்டார் சைக்­கிளைத் திரு­டிய நபரை அடை­யாளம் கண்டு கொண்­ட­த­னை­ய­டுத்து அவரைக் கைது செய்ய சென்ற போது பிர­தே­சத்தை விட்டுத் தப்பிச் சென்­றுள்ளார்.

இத­னை­ய­டுத்து தொடர் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட நிலையில் இவ்­வாறு திரு­டப்­பட்ட மோட்டார் சைக்கிள் பத்து தினங்­களின் பின்னர் திரு­டிய இடத்­தி­லேயே நிறுத்தி வைத்­தி­ருந்த நிலையில் மீட்­கப்­பட்­ட­தாகப் பொலிஸார் தெரி­வித்­தனர்

நிக்­க­வெ­ரட்டி நகரில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டு­வரும் இரண்டு மாடிக் கட்­டி­டத்தில் தொழில் புரியும் ஒரு­வரின் மோட்டார் சைக்­கிளே திருடிச் செல்லப்பட்டிருந்தது.இது தொடர்பில் நிக்கவெரட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!