பாகிஸ்தானில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட 13 வயதான சிறுமி குழந்தை பிரசவித்தாள்! 4 பேர் மீது வழக்கு

13 year old rape survivor gives birth to baby girl in Pakistan

0 1,473

பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தாகக் கூறப்­படும் 13 வய­தான பாகிஸ்­தா­னிய சிறுமி ஒருவர் குழந்­தை­யொன்றை பிர­ச­வித்­துள்ளாள்.

பாகிஸ்­தானின் சிந்து மாகா­ணத்தின் ஜாகோ­பாபாத் மாவட்­டத்தில் 7 மாதங்­க­ளாக இச்­சி­றுமி பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வந்­த­தாக கூறப்­ப­டு­வ­தா­கவும் இது தொடர்­பாக 4 பேர் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் பாகிஸ்­தானின் த எக்ஸ்­பிரஸ் ட்ரிபியூன் பத்­தி­ரிகை செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இச்­சி­று­மியின் தாய் விவ­ாகரத்து பெற்­றவர் எனவும் தான் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டதை, கர்ப்பம் விவ­காரம் தெரிய வரும்­வரை தாயா­ருக்கு அச்­சி­றுமி தெரி­விக்­க­வில்லை எனவும் அப்­பத்­தி­ரிகை தெரி­வித்­துள்­ளது.

பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­போது அச்­சி­றுமி 12 வய­தா­ன­வ­ளாக இருந்தாள் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.தற்­போது 13 வய­தான மேற்­படி சிறுமி லார்­கானா மாவட்­டத்­தி­லுள்ள ஷேக் சயீத் வைத்தியசாலையில் பெண் குழந்­தை­யொன்றை பிர­ச­வித்தாள்.

சந்­தேக நபர்­க­ளி­ட­மி­ருந்த அச்­சு­றுத்­தலை எதிர்­நோக்­கு­வதால் அச்­சி­றுமி பொலி­ஸா­னரின் பாது­காப்பில் வைக்­கப்­பட்­டுள்ளாள்.
குழந்­தையின் மர­பணு மாதி­ரிகள், மருத்­துவம் மற்றும் சுகா­தார விஞ்­ஞா­னத்­துக்­கான லியாகத் பல்­க­லைக்­க­ழ­கத்தின் தட­ய­வியல் ஆய்­வு­கூ­டத்­துக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளன.

இச்­சி­றுமி வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டமை தொடர்பில் நால்வர் மீது வழக்குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இவர்­களில் ஸபருல்லா சுரையோ மற்றும் கம்ரன் பதான் ஆகியோர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர் என மேற்படி பத்திரிகை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!