நான் அழகு ராணி இல்லை -நமீதா

0 146

ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் குறித்த கருத்­தரங்கு நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் நடிகை சந்தோஷி நடத்தியுள்ளார். 

இதில் நடிகைகள், நமீதா, சின்னத்திரை நடிகைகள் ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ரக்சிதா தினேஷ், ‘ரோஜா’ புகழ் பிரியங்கா, பிரபல மாடல் பிராச்சி சோலங்கி, பிக்ெபாஸ் (தெலுங்கு) புகழ் ஷியாமளா, நடிகையும் தொகுப்பாளருமான பரினா, உதவி இயக்குனரும் விடிலிகோ ெமாடலுமான ரம்யா ஆசிட் வீச்சு பாதிப்புக்கு ஆளான டில்லியை சேர்ந்த லட்சுமி அகர்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நமீதா பேசியதாவது:

  ராஜஸ்தான் மாநிலத்தில் பிப்லாந்திரி என்கிற ஒரு சாதா­ரண கிராமத்தில் ஒவ்வொரு முறையும் ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது அதை கொண்டாடும் விதமாக 111 மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்க்கிறார்கள்.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது இதுபோன்று முயற்சி..

இயற்கையை பாதுகாக்கும் முயற்சி மட்டு­மல்ல, மொத்த கிராமத்தின் பொருளா­தாரத்­தையும் மேம்படுத்தும் ஒரு விஷயமும் கூட.

அந்தவகையில் ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும்போது உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும் விதமாக பிறக்கிறாள்.

பெண்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. பெண்கள் வாழப் பிறந்தவர்கள். வீராங்கனைகள்.   

இதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

என்னைப் பொறுத்தவரை இந்த நிகழ்ச்சியில் நான் நிகழ்ச்சியின் பிரதான நபர் கிடையாது, நான் அழகு ராணி கிடையாது.

லட்சுமி அகர்வாலும், ரம்யாவும் தான் இதற்கு தகுதியானவர்கள்.

வரலாற்றில் இவர்கள்தான் ஜாம்பவான்கள் என போற்றப்படுவார்கள்.

அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

நான் இதற்கு முன்பு மிகப்பெரிய ஜாம்பவான்கள் வீற்றிருக்கும் மேடையில் இருந்திருக்கிறேன்.

ஆனால் அப்போதெல்லாம் இல்லாத அளவுக்கு இன்று தான் உண்மையிலேயே நான் பெருமையாக உணர்கிறேன்” என்று கூறினார்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!