தேவைப்பட்டால் ரஜினியும் நானும் இணைவோம் -கமல்ஹாசன் தெரிவிப்பு

0 266

தேவைப்பட்டால் இணைவோம் என தானும் ரஜினியும் கூறியிருப்பதாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கு ஒடிசா பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இப்பட்டத்தை பெற்றுக்கொண்ட அவர் நேற்று சென்னை திரும்பினார்.

இன்று காலை சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த கட்சி பொறுப்பாளர்கள் கட்சி அலுவலத்தில் கமலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தலைமை நிர்வாகிகள் மகேந்திரன்இ ஏஜி.மவுரியா,  ஸ்ரீபிரியா,  கமீலா நாசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் உரையாற்றுகையில்:- “நான் டாக்டர் பட்டம் வாங்குவதற்கு 65 ஆண்டுகள் ஆகியுள்ளன. ஆனால் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் போன்றோர் எனக்கு முன்பே படித்து பட்டம் வாங்கிவிட்டார்கள். எனக்காக நீங்கள் காட்டும் அன்பை தமிழக மக்களுக்கும் காட்ட வேண்டும்.

எனக்குக் கிடைக்கும் பட்டங்கள்,  பாராட்டுகளை விட, இங்கு கிடைக்கும் அன்புதான் எனக்கு எல்லாவற்றையும் விட பெரிது. நான் தமிழகத்தின் குழந்தை. என்னை 5 வயதிலிருந்து வெவ்வேறு வயதுடையவர்கள் என்னைக் கைதூக்கி விட்டதால்தான் நான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். இந்த அன்பை செயல்வடிவமாக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.

எனக்கு நீங்கள் காட்டும் அன்பை தமிழகத்திற்குக் காட்ட வேண்டும். அப்படியானால் என்னுடைய முனைப்பும், யாத்திரையும் கண்டிப்பாக நடக்கும் என்பதற்கான சாத்தியங்கள் அடுத்தடுத்து உங்களுக்கே தெரியும். இளைஞர்கள் வேலைவாய்ப்பு,  விவசாயம் ஆகிய இரண்டும் மிகவும் முக்கியமான,  முதலுதவி செய்யப்பட வேண்டியவை என்பதை மக்கள் நீதி மய்யம் உணர்ந்திருக்கிறது.

அதற்கான செயல்பாடுகள் விரைவில் நடக்கும். ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதற்கு ஏற்ப விரைவில் இந்த வேலைகளைச் செய்து காட்டுவோம். நம் கட்சி சின்னத்தில் இருப்பது போல அனைத்துக் கைகளும் ஒன்றுகூட வேண்டும்’ என்றார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசுகையில் ‘அவசியம் ஏற்பட்டால் நானும் ரஜினியும் இணைவோம் என்று சொன்னேன். ரஜினியுடன் இணைவது என்பது எங்கள் நட்பை விட முக்கியமான செய்தி.
தமிழகத்திற்காக உழைப்போம் என்பதுதான் இணைப்பின் முக்கிய செய்தி. என்னுடைய பணியை நான் செயலில் காட்ட உள்ளேன். இணையும் திகதி குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. எங்கள் இருவரின் நட்பை விட தமிழகத்தின் நலன்தான் முக்கியம்’ என்றார்.

மகளிரணி நிர்வாகி ஸ்ரீபிரியா பேசுகையில்இ ‘ரஜினியும் கமலும் இணைந்து செயல்பட்டாலும் கமல்தான் முதல்வர் வேட்பாளராக இருக்கவேண்டும் என்பது எனது விருப்பம்’ எனக் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!