வரலாற்றில் இன்று: நவம்பர் 21: 2009 -சீனாவில் சுரங்க விபத்தினால் 108 பேர்; பலி

0 39

1272 : மூன்றாம் ஹென்றி நவம்பர் 16 இல் இறந்­த­தை­ய­டுத்து அவரின் மகன் எட்வேர்ட் இங்­கி­லாந்தின் மன்­ன­ரானார்.

1791 : நெப்­போ­லியன் போனபார்ட் பிரெஞ்சு இரா­ணு­வத்தின் தள­ப­தி­யானார்.

1877 : ஒலியைப் பதி­யவும் கேட்­கவும் உத­வக்­கூ­டிய போனோ­கிராஃப் என்ற கரு­வியைத் தாம் கண்­டு­பி­டித்­த­தாக தோமஸ் அல்வா எடிசன் அறி­வித்தார்.

1894 : சீனாவின் மஞ்சூரியாவில் ஆர்தர் துறை­மு­கத்தை ஜப்பான் கைப்­பற்­றி­யது.

1905 : ஆற்­ற­லுக்கும் திணி­வுக்கும் இடை­யே­யான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்­டு­ரையை அல்பேர்ட் ஐன்ஸ்டைன் வெளி­யிட்டார்.

1920 : அயர்­லாந்தில் கால்­பந்துப் போட்­டி­யொன்றில் பிரித்­தா­னியப் படை­யினர் சுட்­டதில் 14 ஐரிஷ் பொது­மக்கள் கொல்­லப்­பட்­டனர்.

1962 : சீன மக்கள் விடு­தலை இரா­ணுவம் இந்­தோ-­ சீனப் போரில் போர் நிறுத்தம் செய்­வ­தாக ஒரு­தலைப் பட்­ச­மாக அறி­வித்­தது.

1969 : ஓக்­கி­னாவா தீவை 1972 இல் ஜப்­பா­னி­ய­ரிடம் ஒப்­ப­டைப்­ப­தற்­கான ஒப்­பந்தம் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ரிச்சர்ட் நிக்­ச­னுக்கும் ஜப்பான் பிர­தமர் ஐசாக்கு சாட்­டோ­வுக்கும் இடையில் வொஷிங்­டனில் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

1974 : இங்­கி­லாந்தின் பேர்­மிங்­ஹாமில் ஐரிஷ் குடி­ய­ரசு இரா­ணு­வத்­தி­னரின் குண்­டு­வெ­டிப்பில் 21 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1980 : அமெ­ரிக்­காவின் நெவாடா மாநி­லத்தில் விடுதி ஒன்றில் இடம்­பெற்ற தீ விபத்தில் 87 பேர் கொல்­லப்­பட்டு 650 பேர் காய­ம­டைந்­தனர்.

1990 : மாங்­குளம் இரா­ணுவ முகாம் மீதான தாக்­குதல் ஆரம்­ப­மா­னது.

1996 : புவேர்ட்டோ ரிக்­கோவில் சான் ஜுவான் நகரில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்­பெற்ற குண்­டு­ வெ­டிப்பில் 33 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2002: பல்­கே­ரியா, எஸ்­டோ­னியா, லத்­வியா, லித்­து­வே­னியா, ருமே­னியா, ஸ்லோவாக்­கியா, ஸ்லோவே­னியா ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைந்­தன.

2004 : டொமி­னிக்கா தீவில் இடம்­பெற்ற பூகம்­பம் கார­ண­மாக போர்ட்ஸ்­மவுத் நகரில் பலத்த சேதம் ஏற்­பட்­டது.

2004: ஈராக் செலுத்த வேண்­டிய சுமார் 100 பில்­லியன் டொலர் கடன் தொகையை இரத்துச் செய்­வ­தாக பாரிஸ் கழகம் எனும் அமைப்பைச் சேர்ந்த 19 நாடுகள் அறி­வித்­தன

2009: சீனாவில் சுரங்­க­மொன்றில் ஏற்­பட்ட வெடிப்புச் சம்­ப­வத்­தினால் 108 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2013: லத்­வியா நாட்டில் வர்த்­தக கட்­ட­ட­மொன்றின் கூரை இடிந்து வீழ்ந்­ததால் 54 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2017: ஸிம்­பாப்வே ஜனா­தி­ப­தி­யாக 30 வரு­டங்கள் பதவி வகித்த ரொபர்ட் முகாபே அப்பதவியிலிருந்து விலகினார்.

2018: சுவிட்ஸர்லாந்து பிரஜா வுரிமையைத் துறந்தமைக்கான ஆவணத்தை தேர்தல்கள் ஆணை யாளரிடம் முன்னாள் எம்.பி. கீதா குமாரசிங்க கையளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!