தெற்கு அவுஸ்திரேலியா, விக்டோரியா மாநிலங்களில் பற்றைத் தீயினால் பேரழிவு அபாய எச்சரிக்கை

0 129

அவுஸ்­தி­ரே­லி­யாவில் பரவும் பற்றைத் தீயினால் அந்­நாட்டின் விக்­டோ­ரியா மற்றும் தெற்கு அவுஸ்­தி­ரே­லிய மாநி­லங்­களில் பேர­ழிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

நியூ சௌத் வேல்ஸ் மாநி­லத்தில் …

பிரிஸ்­பேனை தலை­ந­க­ராகக் கொண்ட குயின்ஸ்­லாந்து மற்றும் சிட்­னியை தலை­ந­க­ராகக் கொண்ட நியூ சௌத் வேல்ஸ் மாநி­லங்­களில் கடந்த பல வாரங்­க­ளாக பற்றைத் தீ பரவி வரு­கி­றது. இதனால் அவுஸ்­தி­ரே­லி­யாவின் பல பாகங்­க­ளிலும் 6 பேர் உயி­ரி­ழந்­த­துடன் 150 இற்கும் அதி­க­மான வீடுகள் தீக்­கி­ரை­யா­கின. இதை­ய­டுத்து அங்கு அவ­சர நிலை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் அடி­லெய்ட்டை தலை­ந­க­ராகக் கொண்ட தெற்கு அவுஸ்­தி­ரே­லியா மற்றும் மெல்­பேர்னை தலை­ந­க­ராகக் கொண்ட விக்­டே­ரியா மாநி­லங்­க­ளிலும் பற்றைத் தீ கடு­மை­யாக பரவி வரு­கி­றது.

இந்­நி­லையில் இவ்­விரு மாநி­லங்­க­ளிலும் பேர­ழிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. அதிக வெப்பமான காலநிலை மற்றும் கடுமையான காற்று காரணமாக பற்றைத் தீ வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!