தல விருட்சம் (புனைவு கட்டுரை -ஆசி கந்தராஜா)

0 195

-ஆசி கந்தராஜா-

அரபு நாடொன்­றிற்­கான எனது முதல் பயணம் அது!தொழில் நிமிர்த்தம், ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தைச் (United Arab state) சேர்ந்த புஃஜே­ரா­வுக்கு(Fujairah) என்னை அழைத்­தி­ருந்­தார்கள். ஐக்­கிய அரபு இராச்­சியம் என்­பது, அபு­தாபி(Abu Dhabi), அஜ்மான்(Ajman), துபாய்(Dubai), புஃஜேரா(Fujairah), றஸ்-­அல்-­ஹய்மா(Ras al-Khaimah), சாஜா(Sharjah), உம்-­அல்-­குவேய்ன்(Umm al-Quwain) ஆகிய ஏழு இராச்­சி­யங்கள் அடங்­கிய கூட்­ட­மைப்­பாகும். இந்த இராச்­சி­யங்கள், பல தலை­மு­றை­க­ளாக மரபு வழி வந்த அரே­பிய இள­வ­ர­சர்­களால் ஆளப்­ப­டு­கி­றன.

இள­வ­ர­சர்கள் என்றால் எல்­லோரும் இள­வ­ய­தி­னர்கள் எனக் கற்­பனை செய்தல் அபத்தம். அரச பரம்­ப­ரையில், மன்­னரைத் தவிர்ந்த ஏனைய அனைத்து ஆண்­களும் இள­வ­ர­சர்கள்(Prince) என்றே குஞ்சம் சூட்­டப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் தலை­ந­கரம் அபு­தாபி. இருப்­பினும், வணிக நக­ர­மா­கவும், சுற்­றுலா மைய­மா­கவும் துபாய் வளம் பெற்­றி­ருப்­ப­தினால் அது பெரிய நக­ர­மாகக் கரு­தப்­ப­டு­கி­றது. அரபு இராச்­சி­யத்தின் சர்­வ­தேச விமான நிலையம், துபா­யிலும் அபு­தா­பி­யிலும் மட்­டுமே உண்டு. இதனால் நான் துபாயில் இறங்கி, புஃஜே­ரா­வுக்­கான நூற்று ஆறு கிலோ­மீற்றர் தூரத்தை பாலை­வன நெடுஞ்­சாலை வழி­யாக காரிலே பய­ணிக்க ஏற்­பாடு செய்­தி­ருந்­தார்கள்.

ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் ஆண்­டு­தோறும் கிடைக்கும் எண்ணை வரு­மா­னத்­திலே 0.1 சத­வீதம் விவ­சாய முயற்­சி­க­ளுக்கும் தோட்டக் கலைக்கும் (Horticulture) செலவு செய்தல் வேண்­டு­மென்­பது, அரச உத்­த­ரவு எனச் சொன்­னார்கள். கணி­தத்­திலே 0.1 சத­வீதம் என்­பது அற்ப எண்ணைக் குறிக்கும் என்­பதை நாமெல்­லோரும் அறிவோம். ஆனால் எண்ணை வரு­வா­யிலே கணக்­கிடும் பொழுது, பெரிய தொகை­யொன்று நம் கண் முன்னால் தோன்றி மிரட்டும்.

இதனால் இந்தச் சத­வீதக் கணக்கு விவ­கா­ரத்­திற்குள் நான் மூளையைக் கசக்­கு­வ­தில்லை. எது எப்­படி இருந்­த­போ­திலும், அவர்­க­ளிடம் விவ­சாய முயற்­சி­க­ளுக்குச் செலவு செய்ய நிறையப் பண­மி­ருப்­பதை, அநு­பவ வாயி­லாகப் புரிந்து கொண்டேன்.
ஒப்­பீட்­ட­ளவில், மற்­றைய அங்­கத்­துவ இராச்­சி­யங்­க­ளை­விட புஃஜ­ராவில் மழை வீழ்ச்சி அதிகம். புஃஜே­ராவை சுற்­றி­யுள்ள ஹாஜர்(Hajar) மலைத்­தொ­டரும், அதனால் அங்கு சுழன்­ற­டிக்கும் காற்றும் அதிக மழை வீழ்ச்­சிக்கு கார­ண­மாக இருக்­கலாம்.

புஃஜே­ராவின் நீர் வளம் கார­ண­மா­கவே அங்கு பல விவ­சாய முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. பாலை வனத்­திலே விவ­சாய முன்­னெ­டுப்­புக்கள் என்றால் என்ன…? பெரும்­பாலும் பேரீச்சை மர வளர்ப்­புத்தான்! அத்­துடன் பெரும் பொருட்­செ­லவில் கடல் நீரி­லுள்ள உப்பை அகற்றி, நன்­னீ­ராக்கி பசுமைக் கூடத்தில் கெக்­க­ரிக்காய், தக்­காளி போன்ற மரக்­க­றி­களை பயி­ரி­டு­கி­றார்கள்.
நம்­மூரில் ‘ஆனை­யைக்­கட்டி தீனி­போட்­டது போல…’ என்­பார்­களே, அது போலத்தான் இவர்­களின் பயிர் வளர்ப்பு முயற்­சிகள்.

ஆனால் பாலுக்­கா­கவும் இறைச்­சிக்­கா­கவும் அரபு நாடு­களில் ஒட்­ட­கங்கள் வளர்ப்­பது, ஆதாயம் தரும் விலங்கு விவ­சா­ய­மாகும் (Animal husbundry). இந்த இடத்தில் நான் இன்­னு­மொன்­றையும் சொல்ல வேண்டும். களஞ்­சியப் பொறுப்­பா­ளர்கள் (Store keepers) என்ற பெயரில் அரபு நாடு­களில் வேலை பெற்று வந்­த­வர்­களுள் பலர், அங்கு ஏமாற்­றப்­பட்டு ஒட்­ட­கங்­களைக் கணக்­கெ­டுப்­ப­திலும் ஒட்­ட­கங்கள் மேய்ப்­ப­திலும் ஈடு­ப­டு­வ­துண்டு. அரா­பிய ஏஜென்­சியைப் பொறுத்­த­வரை ஒட்­டகப் பண்­ணையில் மேச்சல் முடிந்து வரும் ஒட்­ட­கங்­களைக் கணக்­கெ­டுப்­பதும், பரா­ம­ரிப்­பதும் களஞ்­சியப் பொறுப்­பாளர் (Store keepers) வேலைதான்!

யாழ்ப்­பா­ணத்து மக்­க­ளாலே கற்­ப­க­தரு எனப் போற்­றப்­படும் பனை மரங்­களைப் போலவே, பேரீச்ச மரங்­க­ளிலும் ஆண் மரம், பெண் மரம் என்ற வேறு­பாடு உண்டு. ஆனால் தென்னை, கமுகு மரங்­களில் அப்­ப­டி­யல்ல. இவற்றில் ஆண்­பூவும் பெண்­பூவும் ஒரே மரத்தில், ஒரே பாளையில் இருக்கும். இவற்றின் பாளைக் காம்பில், பெண்­பூ­வொன்று அடிப்­பக்­கத்­திலும், அதைத் தொடர்ந்து பல ஆண் பூக்கள் காம்பின் நுனி­வ­ரையும் இருக்கும்.

மக­ரந்தச் சேர்க்­கையின் பின் ஆண்­பூக்கள் உதிர்ந்­து­விட, பெண்பூ கருக்­கட்டி குரும்­பட்­டி­யாகும். ஆனால் பனை மரங்­களைப் பொறுத்­த­வ­ரையில், மக­ரந்த மணி­களை மாத்­திரம் கொண்ட ஆண் பூக்கள் ஆண் பனை­க­ளிலும், சூல­கத்தைக் கொண்ட பெண் பூக்கள் பெண் பனை­க­ளிலும் இருக்கும். பல பெண்­ப­னைகள் கொண்ட பனங் கூட­லிலே ஒரு சில ஆண்­ப­னைகள் மட்டும் தனிக்­காட்டு ராஜாக்­க­ளாக நின்று ராஜாங்கம் நடத்­து­வதை, புலம் பெயர்ந்த நாடு­களில் வாழும் கொழும்புத் தமிழ் மூத்த பிசை­களும் அறிந்­தி­ருப்­பார்கள்.

ஆண் பனை­யி­லி­ருந்து இறக்­கப்­படும் உடன் கள்ளு, முடக்கு வாதத்­துக்கு நல்­ல­தென அதையே நம்மூர் பெரிய கமக்­கா­ர­ரான துரையர், தினமும் தன் பின்­வ­ளவு ஆண் பனை­யி­லி­ருந்து இறக்­கு­வித்துக் குடிப்பார். இருப்­பினும், அவரைப் பொறுத்­த­வரை அது பொய்­யாகி, அறு­பது வயதில் பாரி­ச­வா­தத்தால் இறந்­தது தனிக்­கதை.

‘தங்க மூளைக்­காரன்’ என்று இலங்­கையில் கொண்­டா­டப்­பட்­டவர் சம­ச­மாஜக் கட்சித் தலைவர் என். எம். பெரேரா. இவர் ஆயி­ரத்து தொழா­யி­ரத்து அறு­பதாம் ஆண்­டு­களில் நிதி­யச்­ச­ராக வந்து செய்த நிதிச் சீர்­தி­ருத்­தங்­களின் ஒன்­றாக எழுந்­த­துதான் கள்ளுக் கோப்­ப­ரேஷன். அதற்கு முன்னர் இருந்த மர­வரி முறையை அந்தக் காலத்தில் அமு­லுக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கு யாழ்ப்­பா­ணத்தில் பெரிய கிளர்ச்சி ஒன்று நடத்­தப்­பட்­ட­தாகச் சொல்­லு­கி­றார்கள். கள்ளு மது மட்­டு­மல்ல, அது உண­வு­மாகும் என்­பதை அரசு ஏற்றுக் கொண்­டதால் மர­வரி முறை யாழ்ப்­பா­ணத்தில் வந்­த­தாக முது­பெரும் எழுத்­தாளர் எஸ்போ தகவல் சொன்னார்.

கதை­யோடு கதை­யாக இன்­னொன்­றையும் அவர் சேர்த்துச் சொன்னார். யாழ் மண்ணில் முத­லிலே தோன்­றி­யது சுருட்டுத் தொழி­லாளர் சங்கம். அது சம­ஜ­மாஜக் கட்­சியின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்­தது. அதன்­பின்னர் தோற்­று­விக்கப் பட்­டது கள்­ளி­றக்கும் தொழி­லாளர் சங்கம். இச்­சங்­கங்­களின் செய­லூக்­கத்­தினால் பொன் கந்­தையா என்ற கம்­யூனிஸ்ட் யாழ் மண்­ணி­லி­ருந்து முத­லா­வது மார்க்­ஸி­ய­வா­தி­யாக பாரா­ளு­மன்­றத்­துக்கு தேர்ந்­தெ­டுக்கப் பட்­டாராம். இதன் பின்­பு­லத்­தி­லேதான் கள்ளுக் கோப்­ப­ரேஷன் உரு­வா­கி­ய­தாக எஸ்போ சொன்னார்.

மர­வரி முறையின் கீழ் கள்­ளி­றக்­கு­வ­தற்கு, பெண்­ப­னைக்கும் தென்­னைக்கும் ஆண்டு ஒன்­றுக்கு ‘லைசென்ஸ்’ பெற அப்­போது பத்து ரூபாய் வீதம் கட்­ட­வேண்டும். தென்­னை­யிலும் பெண்­ப­னை­யிலும் கள்ளுச் சீவு­வ­தனால் தேங்காய், பனங்காய் ஆகி­ய­வற்­றினால் கிடைக்கும் பயன்கள் இல்­லாமற் போவதை ஈடு­செய்­வ­தற்­காக மரத்­துக்கு பத்து ரூபாய் வீதம் அப்­போது பணம் வசூ­லிக்கப் பட்­டதாம். ஆண் பனை­க­ளிலே அத்­த­கைய பயன்கள் கிடைக்­காத கார­ணத்­தி­னால்தான் அதற்­கான ‘லைசென்ஸ்’ பண­மாக ரூபா இரண்டு வசூ­லிக்­கப்­பட்­ட­தாகச் சொல்லப் பட்­டது.

‘லைசென்ஸ்’ கட்டிச் சீவப்­படும் மரங்­க­ளுக்கு வெள்ளை மையால் நம்பர் எழு­தப்­படும். நாலு மரங்­க­ளுக்கு பணம் கட்டி, கொசு­றாக மேலும் சில மரங்­க­ளி­லேயும் கள்­ளுச்­சீ­வுதல் கிரா­மங்­க­ளிலே சக­ஜ­மாக நடை­பெறும். அப்­பொ­ழுது ‘கலால்’ இலாகா விழித்துக் கொள்ளும். நம்­ப­ரில்­லாத மரங்­க­ளி­லுள்ள கள்ளு முட்­டி­களை அடித்­து­டைத்து, பாளை­க­ளையும் ‘கலால்’ இலா­கா­வினர் வெட்டி எறி­வது கிரா­மங்­களில் அவ்­வப்­போது நடக்கும் சங்­கதி.

இவர்­களின் தொல்லை தாங்­காமல் கள்­ளி­றக்கும் சின்­ன­வியின் மனைவி வள்ளி, ஒப்­பாரி வைத்து ஊரைக் கூட்­டுவாள். ஒரு­முறை இவர்­களின் ஆய்க்­கினை அத்து மீறவே, வள்ளி தன் மாராப்பை அவிட்டு மார்பைக் காட்டிக் கத்­தவே, பாளை வெட்ட வந்­த­வர்கள் தலை தெறிக்க ஓடி­யது அந்த நாளைய ஈஸ்மன் கலர் வசுக்­கோப்பு. இந்த வசுக்­கோப்புக் கதையை யார் சொன்­னது என்று இப்­பொ­ழுது எனக்கு ஞாபகம் இல்லை.

பனை, தென்னை, கமுகு, பேரீச்­ச­ம­ரங்கள் ஒரு வித்­திலைத் தாவ­ரங்கள்(Monocot). இவற்றின் விதை­களை முளைக்க வைத்தே நாற்­றுக்­களை உரு­வாக்­க­மு­டியும். மா, தோடை, எலு­மிச்சை, கொய்யா போன்ற இரு­வித்­தலைத் தாவ­ரங்­களைப்(Dicot)) போன்று, ஒரு வித்­திலைத் தாவ­ரங்­களை, பதி­வைத்தோ ஒட்­டியோ இனப்­பெ­ருக்கம் செய்­ய­மு­டி­யாது.

இன்­னு­மொன்­றையும் இங்கு சொல்­லி­யா­க­வேண்டும். பனை, பேரீச்சம் விதைக் கன்­று­களுள் ஆண் எது? பெண் எது? என்று கண்­டு­பி­டிப்­பது கடினம். இவை காய்க்கும் போதுதான் இவற்றின் பாலின வேறு­பாட்டை அறி­ய­மு­டியும். பப்­பாசி இனங்­க­ளிலும் அப்­ப­டித்தான்.
இன்­னு­மொரு சிக்­கலும் விதைக் கன்­று­களில் உண்டு. இங்கு தாய் மரத்தின் இயல்­புகள், எந்­த­வித மாற்­ற­மு­மின்றி அப்­ப­டியே விதைக் கன்­று­க­ளுக்கும் கடத்­தப்­படும் என்­ப­தற்கு எந்­த­வித உத்­த­ர­வா­த­மு­மில்லை. இதில் தாய் மரத்தின் அல்­லது தந்தை மரத்தின் இயல்­பு­களில், ஆட்­சி­யு­டைய இயல்­பொன்றே வெளிக் கொண­ரப்­படும்.

புஃஜேரா இராச்­சி­யத்தின் விவ­சாய, பூங்­கனி இயல் அமைச்­சரே என்னை அங்கு வரு­மாறு அழைத்­தி­ருந்தார். அரே­பிய ராஜ வம்­சத்தில் பல இள­வ­ர­சர்கள் இருப்­பார்கள். முடிக்­கு­ரிய அரசர் வழியில், பரம்­பரை பரம்­ப­ரை­யாக வரும் மூத்த ஆண்­வா­ரி­சுகள் மாத்­தி­ரமே…

‘ராஜ’ இள­வ­ர­சர்­க­ளாக (Royal Prince) கணிக்­கப்­ப­டு­வார்கள்.
என்னை அழைத்த இள­வ­ர­சரும் இராஜ பரம்­ப­ரையைச் சேர்ந்­தவர் எனச் சொன்­னார்கள். அரே­பிய நாடு­களில் இராஜ வம்­சத்தைச் சேர்ந்­த­வர்­களே இராச்­சி­யத்­தி­லுள்ள செல்­வங்­களின் பெரும் பகு­தியை அநு­ப­விப்­ப­வர்கள். இவர்கள் மிகவும் புத்­தி­சா­லிகள். இல்­லா­விடின் சாதா­ரண அரா­பி­யர்­களை அடக்கி ஆண்டு, மன்­ன­ராட்­சியை இன்றும் தங்கள் நாடு­களில் தக்க வைத்­துக்­கொள்ள முடி­யாது. இவர்­களின் புத்­திக்­கூர்­மையை எனது இந்தப் பய­ணத்­தின்­போதே அறிந்து கொண்டேன். அது வரை அவர்­க­ளிடம் எண்ணைக் காசு மட்டும் இருப்­ப­தா­கவே மோட்­டுத்­த­ன­மாக எண்­ணி­யி­ருந்தேன்!

விவ­சாய அமைச்சர் தனது பெயரில், நவீன தொழில் நுட்­பங்­க­ளுடன் பேரீச்­ச­மரப் பெருந்­தோட்­டங்­களை உரு­வாக்­கி­யி­ருந்தார். இந்த மரங்­க­ளெல்லாம் விதை­களை முளைக்க வைத்து வளர்க்கப் பட்­டவை. ஏழு எட்டு வரு­டங்­களின் பின், இவை குலை தள்­ளவே, நட்ட மரங்­களுள் ஐம்­பது சத­வீத பேரீச்ச மரங்கள் ஆண்­ம­ரங்கள் என தெரிந்­து­கொண்டார். இத்­த­கைய பாலின வேறு­பாடு முன்னர் ஏற்­பட்­ட­தில்லை என்றும் அரே­பிய பிர­தே­சங்­களில் இந்த மாற்றம் தற்­போது பர­வ­லாக இருப்­ப­தா­கவும் தோட்­டத்தைப் பரா­ம­ரிப்­பவர் சொன்னார். இந்தச் சிக்கல் நமது ஊர்ப் பனை மர வளர்ப்பில் வந்­த­தாகத் தெரி­ய­வில்லை.

நூறு பனைகள் கொண்ட ஒரு பனைங்­கூ­டலில் இரண்டு அல்­லது மூன்று ஆண் பனை­க­ளையே எனது அநு­ப­வத்தில் கண்­டி­ருக்­கிறேன். நம்மூர்ப் பனைக்­கூ­ட­லிலும் ஐம்­பது சத­வீத பனைகள் ஆண்­ப­னை­க­ளாக இருப்பின் நிலமை எப்­படி இருக்கும்? ஆண் பனை­க­ளிலோ, மக­ரந்த மணி­களைத் தவிர, ஓலை, கள்ளு, மரம் என வேறு பல பயன்­களும் உண்டு. ஆனால் ஆண் பேரீச்ச மரங்கள் மக­ரந்தச் சேர்க்­கைக்கு மட்­டுமே பயன்­ப­டு­கின்­றன.

அவற்­றி­லி­ருந்து பெரு­ம­ளவில் வெளி­வரும் மக­ரந்த மணி­களால் Hay fever எனப்­படும் தும்மல் மற்றும் ஒவ்­வாமை நோய் அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­கவும் சொன்­னார்கள். இதனால், அவர்­களின் தற்­போ­தைய பிரச்­சனை ஆண் பேரீச்ச மரங்­களின் இனப் பெருக்­கத்தைக் குறைத்துப் பெண் பேரீச்ச மரங்­களின் எண்­ணிக்­கையைக் கூட்­டு­வதே.
இந்தப் பிரச்­சனை, கோழிப் பண்ணை வைத்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கும் உண்டு!

நாட்டுப் புறங்­களில் சேவல் கோழி­க­ளையும், முட்­டை­யிட்டு ஓய்ந்த பெட்டைக் கோழி­க­ளையும் அடித்துக் குழம்பு வைப்­பார்கள். கறிக்­கோ­ழிகள் எனப்­படும் புரொ­யிலர் கோழிகள்(Broiler Chicken) இன­வி­ருத்தி செய்­யப்­பட்ட பின்பு எல்லாம் தலை கீழாக மாறி­விட்­டன. புரொ­யிலர் கோழி இனங்கள் 42 நாள்­களில் இரண்டு கிலோ­வரை வள­ரக்­கூ­டி­யன. நாம் சாப்­பிடும் புரொ­யிலர் கோழிகள் கிட்­டத்­தட்ட நாற்­பத்­தைந்து நாள்கள் உயிர் வாழ்ந்­த­வையே! அதற்கு மேல் அவற்றை வளர்த்தால் பண்­ணைக்­கா­ர­னுக்கு நட்டம் வரும். 32 நாட்­க­ளி­லேயே இரண்டு கிலோ இறைச்­சியை கொடுக்கக் கூடிய கறிக்­கோ­ழியை இப்­பொ­ழுது இன­வி­ருத்தி செய்­துள்­ளார்கள். இந்த இனத்­துக்கு Cobb என்று பெயர்.

‘நீ சொல்­லுற கணக்­குப்­படி, பண்­ணை­களில் வளர்க்­கிற கறிக் கோழிகள், உயி­ருடன் இருந்த நாள்­களை விட உறை­குளிர்ப் பெட்­டி­களில் அதிக காலம் இருப்­பவை…’ என்று ‘கொமன்ற்’ அடித்­த­ப­டியே நண்பன் பாலன் தினமும் கென்­ரக்கி சிக்கின் கடைக்கு சென்று வருவான். இது மனை­விக்குத் தெரி­யாது அவன் வெளியில் சாப்­பிடும் கள்­ளத்தீன். இத­னால்தான் அவன் உடல் கொழுத்து கறிக்­கோ­ழிகள் போல் இருப்­ப­தாக நண்­பர்கள் அடிக்கும் நக்­கலை அவன் என்­றுமே பொருட்­ப­டுத்­தாது, ‘அறிஞ்­சவன் அறிவான் அரி­யாலைப் பினாட்டை’ என்ற பழ­மொ­ழியைச் சொல்லித் திரிந்தான்.

பண்­ணை­களில் வளர்க்­கப்­படும் கோழிகள் அங்­கிங்கு திரும்ப முடி­யாத சிறிய கூண்­டு­களில் வளர்க்­கப்­ப­டு­வன. அவற்றைக் கூண்­டுக்கு வெளியே விட்டால் அவற்றால் ஓட முடி­யாது. 32 நாள்­களில் இரண்டு கிலோ­வரை வளரும் Cobb இன கறிக்­கோ­ழி­களின் கால்­களால் அதன் உடல் பாரத்தை தாங்­க­மு­டி­யாது துவண்டு விழு­வதை பார்த்­தி­ருக்­கிறேன்.

கூண்­டுக்குள் எப்­போதும் இருந்­த­ப­டியே தீன் தின்னும் கோழியின் உடல் வளரும் வீதத்­துக்­கேற்­றப இரு­தயம் வளர்­வ­தில்லை என்றும், சிறிய இரு­த­யத்தால் பெரிய உட­லுக்கு இரத்­தத்தைப் பாச்ச முடி­வ­தில்லை என்ற அவ­லத்தை, விலங்கு விவ­சாயப் பேரா­சி­ரியர் விளக்­கினார். ‘கறிக்­கோ­ழிகள்(Broiler Chicken) சுவை­யற்று ‘சள­ச­ள’­வென்று இருப்­ப­தற்கு இதுதான் மச்சான் காரணம்’ எனச் சொன்ன பாலன், ‘இது, யாழ்ப்­பாண ஊர்க் கத்­த­ரிக்­காய்க்கும் மலை நாட்டுக் கத்­த­ரிக்­காய்க்கும் உள்ள வித்­தி­யாசம் போலத்தான்…’ என உதா­ர­ணத்­தையும் அவிட்டு விட்டான்.

முப்­பத்து இரண்டு நாள்­களில், Cobb இன கறிக்­கோ­ழி­களை வெட்­டாது, தொடர்ந்து வளர்த்தால் அவை நோய்­வாய்ப்­பட்டு இறந்­து­வி­டு­மென, சிட்­னியில் கோழிப் பண்ணை வைத்­தி­ருக்கும் நண்பர் ஒருவர் மேல­திக தகவல் சொன்னார்.
‘பிள்­ளைப்­பெத்த வீட்­டிலை, சூப்பு வைக்கப் பாவிக்­கிற மூண்டு மாத விடலைக் குஞ்­சுகள், கால் கிலோவும் தேறாது…, ஒரு மாதத்­திலை இரண்டு கிலோ வளர, இவங்கள் என்­னண்ணை தீன் போடு­ற­வங்கள்?’ என பாலனின் மனைவி என்­னிடம் கேட்டார். ஆண் வாரிசு வேணும் என்ற முயற்­சியில் தோற்­றுப்­போ­னதால் பால­னுக்கு வரி­சை­யாக ஐந்து பெண் பிள்­ளைகள். அவன் கோழி தின்னும் ‘றேற்­றுக்கு’ மார­டைப்பு வந்­து­விடும் என்ற அவதி பாலனின் மனை­விக்கு.

ழில் தர்மம் கருதி பாலனின் மனைவி கேட்ட கேள்­விக்கு பதில் சொல்­வதை சாதுர்­ய­மாகத் தவிர்த்தேன். இருப்­பினும் பிள்­ளை­க­ளுக்கு அதிக கறிக்­கோழி கொடுப்­பது நல்­ல­தல்ல தென்றும், குறிப்­பாக பெண் பிள்­ளைகள், பத்­துக்கு குறைந்த வய­தி­லேயே பூப்­ப­டை­வ­தற்கு இதுவும் ஒரு கார­ண­மென நம்­பப்­ப­டு­வ­தா­கவும் சொன்னேன். இந்த சம்­ப­வத்தின் பின்னர் பாலனின்; கோழிச் சாப்­பாட்டில் துண்டு விழுந்­தி­ருக்க வேணும். சில நாள்கள் என்­னுடன் அவன் முறாய்­பி­லி­ருந்தான்!

‘உந்தக் கோழி­யளைத் திண்டு கண்­ட­கண்ட வியா­தி­யளை விலைக்கு வாங்­காமல் எல்­லாரும் சைவமாய் இருங்கோ…’ என்றார் என்­னு­டைய அம்மா. அவர் மச்­ச­மா­மிசம் தொடு­வ­தில்லை. வயது தொண்­ணூ­றுக்கு மேலா­கியும் அம்மா எந்­த­வித மருந்துக் குளி­சை­களும் எடுப்­ப­தில்லை. இதற்கு சைவச் சாப்­பாடே காரணம் என்­பது அம்­மாவின் அசைக்க முடி­யாத நம்­பிக்கை. அத்­துடன் பசித்தால் மட்டும் சாப்­பிடும் பழக்­கத்­தையும் அவர் கடைப்­பி­டித்­ததும் மேல­திக கார­ண­மாக இருக்­கலாம்.

முட்­டைக்­காக வளர்க்­கப்­படும் கோழிகள், கறிக்­கோழி இனங்­க­ளல்ல. கறிக்­கோழி வளர்ப்பில் சேவ­லாக இருந்­தா­லென்ன பேடு­க­ளாக இருந்­தா­லென்ன அவற்றின் சதைதான் முக்­கியம். ஆனால் முட்­டைக்­காக வளர்க்­கப்­படுக் கோழிக்­குஞ்­சுகள் எல்­லாமே பேடு­க­ளாக வள­ர­வேண்டும்;.
முட்­டை­யிடும் கோழி இனங்­களில் சதை­வ­ளர்ச்சி இருக்­காது. இவற்றை இறைச்­சிக்­காக வளர்த்து விற்­பனை செய்தால் பண்­ணைக்­காரன் வங்­கு­றோத்­தாகி விடுவான்.

ஒரு சந்­தர்ப்­பத்­திலே ‘கோழிகள் முட்­டை­யிட சேவல் தேவை­யில்லை…’ என்ற உண்­மையை நான் சொல்ல நேர்ந்­தது.‘இதன்ன புதுக்­கதை சொல்லி ஆக்­களைக் குழப்­பிறாய். சேவல் மிதிக்­காமல் எப்­பிடி முட்டை வரும்…?’ எனக் கேட்டான் கோழிப் பிரி­ய­னான நண்பன் பாலன்.
‘ஊரிலே கோழிக் குஞ்சு பொரிக்க முட்­டை­களை அடை வைக்­கிறோம். அப்­போது, சில முட்­டைகள் குஞ்சு பொரிக்­காது கூழா­கின்­ற­னவே, ஏன் அது?’
‘எனக்­கெப்­பிடித் தெரியும்? நீதான் சொல்­ல­வேணும்.’

‘தாயின் பாலைக் குடித்து வளரும் பாலூட்டி(mammals)களைப் போன்று, கோழி­க­ளிலும் கருக்­கட்­டாத முட்­டைகள் சூல­கத்­தி­லி­ருந்து(Overy) தொடர்ச்­சி­யாக வெளிப்­படும். இந்த முட்­டைகள் சேவல் மிதிக்­கும்­போது வெளி­வரும் விந்­து­க­ளுடன் சேர்ந்து, கருக்­கட்­டிய முட்­டை­க­ளாக வெளிப்­படும். மற்­றை­யவை கருக்­கட்­டாத முட்­டை­க­ளாக உருக்­கொள்ளும். இங்கு கூழாகும் முட்­டைகள் கருக்­கட்­டாத முட்­டை­களே.’
‘அப்ப நீ சொன்ன பாலூட்­டி­க­ளிலை என்ன நடக்கும்…?’

‘பாலூட்­டி­களில் விந்­துடன் இணைந்து கருக்­கட்­டாத முட்­டைகள் அழிந்து, மாத­விடாய் காலத்தில் வெளி­வரும்.
முட்­டை­யிடும் கோழி­களை வெட்­டும்­போது உள்ளே இருக்கும் வட்­ட­வ­டிவ சின்னச் சின்ன மஞ்சள் நிற முட்­டைகள் கருக்­கட்­டாத முட்­டை­களே’.

‘பண்­ணை­க­ளிலை சின்­னட்டி கூடு­களில் வளரும் ஆயி­ரக்­க­ணக்­கான பேடு­களை, கிர­மமாய் ‘விசிற்’­பண்ண சேவலால் முடி­யாது. அப்ப, பண்­ணை­க­ளி­லி­ருந்து வரும் முட்­டைகள் கருக்­கட்­டாத முட்­டைகள் எண்டு சொல்­லுறாய்.’
‘அதுதான் உண்மை. முட்­டைக்­காக வளர்க்­கப்­படும் கோழிப் பண்­ணை­களில் சேவலே கிடை­யாது…

இதனால் பண்­ணை­க­ளி­லி­ருந்து சந்­தைக்கு வரும் முட்­டை­களில் கரு­உயிர்(Embryo) இருக்­காது. ஆனால் மற்ற எல்லாச் சத்­துக்­களும் கருக்­கட்­டிய முட்­டைகள் போன்று இருக்கும்.’
‘நீ சொல்­லு­றதைப் பாத்தால், பசு­வி­லி­ருந்து வரும் பாலுக்கும், பண்­ணை­க­ளி­லி­ருந்து வரும் கருக்­கட்­டாத, கரு­உயிர் அற்ற முட்­டை­க­ளுக்கும் வித்­தி­யா­ச­மில்லை. இவை பாலைப் போல புரதம், கொழுப்புச் சத்­துக்கள் அடங்­கிய சைவ(Vegitarian) முட்­டைகள் எண்டு சொன்னால் பிழையோ…?’

‘நீ சொல்­லி­ற­திலை உண்மை இருக்கு… ஊரிலை சேவல் இல்­லாமல் வளரும் பேடுகள் இடும் முட்­டையும் சைவ முட்­டை­களே…’ என விளக்கம் சொல்ல முனைந்த என்னை மறித்து, ‘ஒரு நாள் கோழிக் குஞ்­சு­களில் சேவ­லையும் பேடு­க­ளையும் இனம் பிரிப்­பது பற்றிச் சொன்­னியே….

அதைக் கொஞ்சம் சொல்லு’ எனப் பிறி­தொரு சங்­க­தியை அறிய அவ­சரப் பட்டான் பாலன். அவ­னுக்கு எதிலும் பொறு­மை­யில்லை. வெள்­ளாடு மேய்­வது போல அதி­லொரு கடி இதி­லொரு கடி என அவ­ச­ரப்­பட்டுக் கொண்டே இருப்பான்.
‘ஆடுகள், மாடுகள், மனி­தர்கள் உள்­ள­டங்­கிய பாலூட்­டி­களில் ஆண்­குறி, பெண்­குறி ஆகி­யன வெகு துலக்­க­மாக இருக்கும். பிறந்­த­வுடன் இனம் பிரித்­து­வி­டலாம். ஆனால் பறவை இனங்­களில் அப்­ப­டி­யல்ல…’.

பாலன் எப்­பொ­ழுதும் ஒரு சபை குழப்பி. நான் விளக்கம் சொல்ல முன்­னரே வேறொரு கேள்­வியைச் செரு­கினான். ‘பேடு­களின் மல வாச­லூ­டா­கத்­தானே முட்­டைகள் வெளி­வ­ரு­கின்­றன. சில முட்­டை­களில் கோழிப்­பீயும் பிரண்­டி­ருக்கும். பிற­கென்ன பற­வை­களில் பாலினக் குறிகள்…?’
‘உன்­னு­டைய கேள்­வியில் நியாம் இருக்­கி­றது.

பற­வை­களில் நீ சொல்லும் மல­வா­சலை விஞ்­ஞா­னத்தில் ‘புணர்ச்சிக் கழிவுப் பொதுவாய்'(Cloaca) என்­பார்கள். இத­னூ­டா­கத்தான் புணர்ச்­சியும் கழிவு வெளி­யேற்­றலும் இடம்­பெறும். புணர்ச்சி கழிவு பொது­வாயின் உட்­ப­கு­தியில் மிகச் சிறிய ஆண், பெண் பால் உறுப்­புக்கள் இருக்கும். இவற்றை குஞ்­சு­களில் இனம் காண்­பது கஷ்டம்… ஆனால் வாத்­துக்­களில் அப்­ப­டி­யல்ல. வாத்தில் ஆண்­குறி புணர்ச்சிக் கழிவு பொது­வாய்க்கு வெளியே சற்று நீண்டு துலக்­க­மாக இருக்கும்.’

‘இப்­பதான் மச்சான் விளங்­குது, சேவல் மிதிக்­கேக்கை ஏன் வாலைப் பதிக்­கு­தென்ண்டு;…’ என்ற பாலனின் சிரிப்பு வெடியை, அவ­னு­டைய மனை­வியின் பார்வை அடக்­கி­யது.
‘இவற்றை விசர் கதை­யளை விட்­டிட்டு, குஞ்­சு­க­ளி­லேயே பேடு­களை இனம் கண்­டு­பி­டிக்­கிற ரெக்­னிக்கைச் சொல்­லுங்கோ அண்ணை’ என விஷ­யத்­துக்கு வந்தார் பாலனின் மனைவி. அவர்தான் பாலனின் முருங்கைக்காய்யாவாரம் விவசாயம் உட்பட எல்லா தொழில் முயற்சிகளுக்கும் மிகப் பலமான அடித்தளம். அவர் சிட்னியில் கோழிப் பண்ணை துவங்குவதிலும் ஆர்வம் கொண்டிருப்பதான செய்தி கசிந்து கொண்டிருப்பதை நானறிவேன்.

‘கருக்கட்டாத முட்டையிலும், விந்திலும் குறியீட்டு அடையாளத்தை (Marker) செலுத்தி பொரிக்கும் குஞ்சுகளின் நிறத்திலிருந்து பால்வேறுபாட்டை அறிவது நவீன விஞ்ஞான முறை.

இலகுவான முறை குஞ்சுகளின் சிறகிலிருந்து(Wing) இனங்காண்பது. பறவைகளில் ‘கைபோன்று’ காணப்படும் சிறகு, இறகுளாலும்(Primaries), மெல்லிறகுகளாலும் (Coverts) ஆனவை.

இரு இறகுகளுக்கு இடையே ஒரு மெல்லிறகு இருக்கும். குஞ்சுகளின் மெல்லிறகு, இறகுகளிலும் பார்க்க கட்டையாக இருந்தால் அது பேடு. மெல்லிறகு, இறகுகளிலும் பார்க்க நீளமாக அல்லது ஒரே அளவாக இருந்தால், அவை சேவலாக வளரும்…, இந்த முறைமூலம் முட்டைக்கான கோழிப் பண்ணைகளில் சேவல்களை இனங்கண்டு இரண்டு மூன்று நாள் குஞ்சுப் பருவத்திலேயே அவற்றை அழித்து விடுவார்கள்.’

‘பிறகென்ன…? மனிசிக்கு ரெக்னிக் சொல்லிக் குடுத்திட்டாய். அடுத்த வருஷத்திலிருந்து முருங்கைக் காயோடை முட்டையும் சப்ளைதான்….’ எனச் சொல்லிச் சிரித்தான் பாலன்.இப்படியாக முட்டைக் கதைகள் பேசி என்னுடைய நேரங்கள் அனைத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறோனோ என்ற பயம் வந்துவிட்டது. பள்ளிக்கூடத்திலே, வகுப்பில் ஊர்ப் புதினங்கள்

எல்லாவற்றையும் விலாவாரியாக கிண்டியெடுக்கும் சைவ சமய பாடம் படிப்பிக்கும் பொன்னுத்துரை வாத்தியார் ‘அப்பனே முருகா’ என்றால், நாங்கள் சுறுக்காக சமயபாடப் புத்தகத்தை திறந்து வைத்துக் கொள்வோம். இன்று என்னவோ தெரியாது, ‘முட்டைக் கதை’ பேசிக்கொண்டிருந்த என் மனம், என்னை அறியாமலே வாத்தியார் சொல்லித்தந்த திருஞான சம்பந்தரின் தேவாரத்துக்கு மாறியது.

…………………….

திரு­ஞான சம்­பந்தர் ஆண்­ப­னை­களைப் பெண் பனை­க­ளாக்­கி­ய­தாக, சிறு­வ­யதில் சமய பாடப் புத்­த­கத்தில் படித்­தி­ருக்­கிறேன். ஒரு­முறை திரு­ஞான சம்­பந்தர் திரு­வோத்தூர் என்னும் சிவஸ்­த­லத்­துக்கு எழுந்­த­ரு­ளி­னாராம்.இத்­தலம் செய்­யாறு, திரு­வத்தூர், திரு­வத்­தி­புரம் என்றும் அழைக்­கப்­ப­டு­கி­றது.

காஞ்­சி­பு­ரத்­தி­லி­ருந்து தென்­மேற்கே 28 கிலோ மீட்டர் தொலைவில் வந்­த­வாசி செல்லும் சாலையில் இந்த சிவஸ்­தலம் இருப்­ப­தாக அடை­யாளப் படுத்­தப்­பட்­டுள்­ளது. திரு­ஞான சம்­பந்தர் இத்­த­லத்­துக்கு எழுந்­த­ரு­ளி­ய­போது கோயிலைப் பரா­ம­ரித்து வந்த சிவ­ன­டியார் ஒருவர் கோயில் நிலங்­களில் பனை மரங்­களை வளர்த்து வந்தார்.அவை யாவும் ஆண்­ப­னை­யா­யிருந்தன.

இதனை வைத்து சம­ணர்கள் அவரைப் பரி­க­சித்­தனர். அதைக்­கண்டு சிவ­ன­டியார் வருந்திச் சம்­பந்­த­ரிடம் விண்­ணப்­பித்தார். திரு­ஞான சம்­பந்தர் ஆண்­ப­னை­களைப் பெண்­ப­னை­க­ளாக மாறும்­படி திருப்­ப­திகம் பாடி­ய­தான வரலாறு வழக்­கி­லுண்டு. திருக்­கடைக் காப்பில் ‘குரும்பை யாண்­பனை யீன்­குலை யோத்தூர்’ என்று அரு­ளி­ய­போது அவை பெண்­ப­னை­க­ளா­யி­னவாம். சம்பந்தர் பாடி­ய­ரு­ளிய இத்­தி­ருப்­ப­திகம் முதலாம் திரு­மு­றையில் இடம் பெற்­றுள்­ளது.

திரு­ஞான சம்­பந்தர் எங்கே? நானெங்கே? ‘எனக்கு கடவுள் பக்தி வலு குறைவு’ என்று என்­னு­டைய மனைவி அடிக்­கடி புராணம் வாசிப்பாள். அத்­துடன், இஸ்­லா­மிய அரபு நாடொன்றின் பேரீச்ச மரத் தோட்­டத்தின் நடுவே நின்று, திருப்­ப­திகம் பாடினால் கையைக் காலை வெட்டி விடவும் கூடும். அரபு நாடு­க­ளிலே மத அனுட்­டா­னங்கள் பற்றிக் கடு­மை­யான சட்­டங்கள் அமுலில் உள்ளன.

பனை, தென்னை, கமுக மரங்கள் குட்டி போடாது என்­பது நமக்­கெல்லாம் தெரிந்­த­துதான். ஆனால் வாழை மரம் போல பேரீச்ச மரமும் குட்­டி­போடும் என்­பது எத்­தனை பேருக்குத் தெரியும்? இங்கு ஆண் மரத்தின் குட்­டிகள் ஆண் மர­மாக வளரும். பெண் மரத்தின் குட்­டிகள் அதன் மர­பணு அமைப்பின் படி பெண்­ம­ரங்­க­ளாக வளரும். இதிலும் சிக்­க­லுண்டு.

பெருந்­தோட்­டங்­களை ஸ்தாபிப்­ப­தற்கு தேவை­யான பெரும் எண்­ணிக்­கை­யி­லான பெண் பேரீச்­ச­மரக் குட்­டி­களை இந்த முறையில் பெறு­வது கஷ்டம். அத்­துடன் குட்­டிகள் பெரிதும் சிறி­து­மாக இருக்­கு­மா­தலால் ஒரே சீரான மரங்­களை பெருந்­தோட்­டத்தில் எதிர்­பார்க்க முடி­யாது. இங்­கேதான் எனது சேவை அவர்­க­ளுக்குத் தேவை­யா­யிற்று.

ஒரே சீரான ஒத்த இயல்­பு­டைய பெரு­ம­ளவு பெண் பேரீச்­ச­மரக் கன்­று­களை குறு­கிய காலத்தில் உற்­பத்தி செய்யும் ஏற்­பாட்­டினைச் செய்­வ­தற்கு ஒரே­யொரு வழி முறை தான் உண்டு. அது இழைய வளர்ப்பு(Tissue Culture) முறை. இந்த முறையில் பெண்­ம­ரத்தின் இழை­யத்­தி­லி­ருந்து(Tissue) பல ஆயிரம் கன்­று­களை, ஹோர்­மோன்­களின் உத­வி­யுடன் வளர்த்­தெ­டுக்­கலாம். இதற்­கான ஆய்வு கூடத்தை நிறு­வு­வ­தற்கும் தொழில் நுட்­பத்தைச் சொல்லிக் கொடுப்­ப­தற்­குமே, நான் சார்ந்த பல்­கலை கழ­கத்தின் சார்பில் அங்கு சென்­றி­ருந்தேன்.

பேரீச்ச மரப் பெருந்­தோட்­டத்­துக்கு நான் சென்ற பொழுது மதி­ய­மாகி விட்­டது. இந்­திய உப­கண்­டத்தைச் சேர்ந்த பல தொழி­லா­ளர்கள் உச்சி வெ­யிலின் கீழே வேர்க்க விருவி­ருக்க அங்கு வேலை செய்து கொண்­டி­ருந்­தார்கள். ஐம்­பது பாகை சத­ம­ளவு வெப்­ப­மி­ருக்கும்.

ஒரு சிலர் சுடு­ம­ணலில் மூன்று குச்­சி­களை நட்டு சிறிய காட்போட் மட்­டையைக் கூடா­ர­மாக்கி தாங்கள் கொண்­டு­வந்த சோற்றைப் பகிர்ந்து சாப்­பிட்டுக் கொண்­டி­ருந்­தார்கள். தோட்­டத்தைச் சுற்றிக் காண்­பிப்­ப­தற்­காக வாகனம் ஒன்றில் என்னை அழைத்துச் சென்­றார்கள். தங்­களுள் ஓருவன் அரே­பிய எஜ­மா­னர்­க­ளுக்கு சம­மாக அவர்கள் புடை­சூழ வலம் வரு­வதை ஆச்­ச­ரி­ய­மாகப் பார்த்துக் கொண்­டி­ருந்­தார்கள் அங்­குள்ள இந்­திய உப­கண்­டத்தின் தொழி­லா­ளர்கள்.

எங்கள் வாக­னத்தை ஓட்­டி­யவன் என் நாட்­டவன். அவன் என்­னுடன் பேசத் தயக்கம் காட்­டிய போதும் வலிந்து நான் பேசிக் கொண்டு வந்தேன். அவ­னு­டைய சொந்த ஊர் அனலை தீவு. யாழ் மத்­திய கல்­லூ­ரியில் படித்­த­தாகச் சொன்னான். அவ­னுடன் நான் பேசி­யது மடைத்­தனம் என்­பதை அடுத்த பத்து நிமி­டத்தில் உணர்ந்து கொண்டேன்.

விதைகள் முளைக்க வைக்கும் கூடா­ரத்­துக்கு நான் சென்று திரும்­பு­வ­தற்குள், வாகனம் ஓட்­டி­வந்த தமிழ்ப் பெடியன் மாற்றப் பட்டு ஏமன்(Yeman) நாட்டைச் சேர்ந்­தவன், சாரதி ஆச­னத்தில் அமர்ந்­தி­ருந்தான். அங்கு நில­விய இறுக்­க­மான சூழ்­நி­லையும், ஏமன் நாட்டைச் சேர்ந்த சார­தியின் மிரட்சிப் பார்­வையும் அங்கு என்ன நடந்­தி­ருக்கும் என்­பதை எனக்கு தெளி­வாகச் சொல்­லி­யது.

அன்று இரவு எனக்குத் தூக்கம் வர­வில்லை. தொழி­லா­ளர்­க­ளாக அரபு நாடு­க­ளுக்கு வந்து விட்டால் அவர்கள் அடி­மை­களா…? என்ற கேள்வி என் மூளையைக் குடைந்து கொண்­டி­ருந்­தது. எம்­ம­வ­னைப்­பற்றி விசா­ரித்து நில­மையை மேலும் சிக்­க­லாக்க நான் விரும்­ப­வில்லை. அவர்­க­ளுடன் பேசு­வதை தவிர்த்துக் கொண்டேன். இருப்­பினும் அவர்கள் எதிர்ப்­படும் பொழு­தெல்லாம் அவர்­க­ளது கண்கள் என்­னுடன் ஆயிரம் கதைகள் பேசின.

எங்கள் ஊர் சிவ­ரா­சனை இந்தப் பிர­யா­ணத்தின் போதுதான் சந்­தித்தேன். என்­னு­டைய வய­துதான் அவ­னுக்கும். அவனும் நானும் கைத­டியில் சுத்­தாத ஒழுங்­கை­யில்லை. அரச திணைக் கழகம் ஒன்றில் களஞ்­சிய உத­வி­யா­ள­னாக பணி­பு­ரிந்தான். நான் படிக்­க­வென வெளி­நாடு சென்­றதும் அவ­னு­ட­னான தொடர்பு படிப்­ப­டி­யாக அறுந்­து­விட்­டது.

குடும்­பத்தில் மூத்­தவன். நாலு சகோ­த­ரி­களை இவன் பொறுப்பில் விட்­டு­விட்டு தகப்பன் போய்ச் சேர்ந்­து­விட்டார். தங்­கை­களைக் கரை­சேர்க்­க­வென அரபு இராச்­சி­யத்­துக்கு வந்­தி­ருக்­கிறான். பாலை­வ­னத்­தி­லுள்ள ஒட்­டகப் பண்­ணையில் அவ­னுக்கு வேலை. இர­வெல்லாம் கடும் குளிர்.

பக­லெல்லாம் அன­ல­டிக்கும் வெய்யில் என, கொடூ­ர­மான கால­நி­லையின் கீழ் தங்­கை­க­ளுக்­காக இரு­பது வரு­டங்கள் வெந்­தி­ருக்­கிறான். கறுத்து முற்­றாக முடி கொட்டி ஆளே உரு­மாறிப் போயி­ருந்தான். வாரம்­தோறும் வெள்­ளிக்­கி­ழ­மை­களில் கிடைக்கும் லீவின்­போ­துதான் நம் ஊர­வர்­களைப் பார்க்­கவும் கறி­சோறு தின்­னவும் நக­ரத்­துக்கு வரு­வ­தாகச் சொன்னான்.

இந்த வெள்ளிக் கிழ­மைக்­கா­கவே மிகுதி ஆறு­நாளும் பாலை­வ­னத்தின் கொடூ­ர­மான தட்ப வெப்­பத்தில் காத்­தி­ருப்பான். கடைசி தங்­கையை கரை­சேர்த்து அவன் நிமிந்­த­போது மிஞ்­சி­யி­ருந்த முடியும் நரைத்து வயது ஐம்­பத்­தைந்­தாகி விட்­டது.

‘வேண்­டா­மென்று சொன்­னாலும் தங்­கைமார் எனக்கு பெண் பார்க்­கி­றார்கள். இந்­த­வ­யதில் இனி­யென்ன மச்சான் எனக்கு குடும்ப வாழ்க்கை’ என அலுத்­துக்­கொண்ட சிவ­ராசன், ‘இண்­டைக்கு சிம்ரான் நடிச்ச படம் போடு­றாங்கள், வா போய்ப் பாப்பம்’ என படம் பார்க்க அழைத்தான். போகும் வழியில், வயதில் இப்­போது அரை நூற்­றாண்டை தாண்­டி­விட்ட அப்­போ­தைய நம்மூர் கனவுக் கன்­னி­களைப் பற்றிப் பேச்சு வந்­த­போது, அவ­னது முகத்தில் பாலை­வன மின்­னல்போல் சந்­தோஷம் நெளிந்து மறைந்­தது. இப்­படி எத்­தனை எத்­தனை நம்­ம­வர்கள், பாலை­வ­னத்தில் தங்கள் வாழ்க்­கையைத் தொலைத்து வாழ்­கி­றார்கள் என்­பது, அவர்கள் அனுப்பும் காசைக் கிலுக்கிக் கொண்டு, ஊரில் சுகம் காணும் எத்­தனை பேருக்குத் தெரியும்?

இதை நான் எழுதும் போது என்­னு­டைய மகள் பேரீச்சம் பழக் கேக் செய்­வ­தற்­காக பேரீச்சம் பழங்­களைத் தெரிவு செய்து கொண்­டி­ருந்தாள். அழ­கான பெட்­டி­களில் அலுங்­காது நலுங்­காது பொதி செய்­யப்­பட்ட பழங்கள் அவை. இருப்­பினும் வாங்­கிய பழங்­களில் அரை­வா­சியை கேக் செய்ய உத­வாது எனக் கழித்து விட்டாள்.

நான் சிறு­வ­னாக இருந்­த­போது, காய்­கட்டி ஐயாவின் பெட்டிக் கடையில் பேரீச்சம் பழங்­களை வாங்கிச் சாப்­பிட்­டி­ருக்­கிறேன். பழம் நசுங்கி கொட்டை பிதுங்­கிய நிலையில், அவை அரே­பிய நாடு­க­ளி­லி­ருந்து இறக்­கு­ம­தி­யாகும். பேரீச்­ச­மர ஓலைக் கூடை­களில் இறக்­கு­ம­தி­யாகும் பேரீச்சம் பழங்­களை, ஈ மொய்க்க காய்­கட்­டி­ஐயா விற்­ப­னைக்கு வைத்­தி­ருப்பார்.

அந்தக் கடையில் எங்­க­ளுக்கு கொப்பிக் கணக்கு. மாதம் முடிவில் ஐயா கணக்­குப்­பார்த்துக் காசு கொடுப்பார். அப்­போ­துதான் தெரிய வரும் நான் தாரா­ள­மாக பேரீச்சம் பழங்கள் வாங்கித் தின்ற கதை. புஃஜே­ராவில் குட்­டை­யான பேரீச்ச மரங்­களில், தரையில் நின்றே பழங்­களைப் பறித்துச் சாப்­பிட்­டி­ருக்­கிறேன். அதன் சுவையே தனி­யா­னது. தேனில் சில­நாட்கள் அவற்றை ஊற­வைத்துச் சாப்­பிட்டால் அது தேவா­மிர்தம்! என்­னு­டைய ஆச்­சிக்கு, (அம்­மாவின் அம்­மா­வுக்கு) நிறைய பனங்­கா­ணிகள் இருந்­தன.

பனங்­கா­ணி­களில் எதேச்­சை­யாக ஈச்ச மரங்­களும் வளர்ந்­தன. இவை பேரீச்ச மரங்­களின் இன­மா­யினும் வளர்ச்­சியில் குட்­டை­யா­னவை. இவற்­றிலே அளவில் சிறிய, கறுப்பு நிற ஈச்சம் பழங்­களை பறித்துச் சாப்­பி­டு­வதில் எனக்கும்; சிவ­ரா­ச­னுக்கும் சண்­டை­வரும். நமது ஈச்ச மரங்­களில், பாளை வெளி­வ­ரும்­போது அதை வெளியில் இழுப்­பதும், அதன் அடிப்­ப­கு­தி­யி­லுள்ள மென்­மை­யான பகு­தியைச் சப்­பு­வதும் மிக இனி­மை­யான அநு­பவம்.

பாளை இழுப்­ப­தற்கு சிவ­ராசன் ஒரு பாட்டு வைத்­தி­ருந்தான். அந்தப் பாட்டில் எல்லா தெய்­வங்­க­ளையும் துணைக்­க­ழைத்து இறு­தியில் ‘பாளையே…, பாளையே…, கெதியாய் வா…, கெதியாய் வா…!’ என்று சொல்லி தம் பிடித்து இழுப்பான். இழுத்த இழுப்பில் பல தடவை அரு­கே­யுள்ள ஈச்சம் பத்­தைக்குள் விழுந்­தெ­ழும்­பி­யதும் உண்டு.

ஆச்சி வழியில் நெருங்­கிய உற­வி­ன­ரான ஒரு பெத்­தாச்­சியின் வீடு எங்கள் வீட்­டி­லி­ருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருந்­தது. அவர் ஒரு கைம்பெண். இரு பெண் பிள்­ளை­க­ளுடன் பனை ஓலையால் வேயப்­பட்ட மண் வீட்டில், தங்­க­ளுக்குச் சொந்­த­மான பனை­களை நம்பி மிகவும் கண்­ணி­ய­மாக வாழ்ந்­து­வந்தார்.

சின்ன வயதில் அவர் வீட்­டி­லேயே, பனை மரத்தின் விளை பொருட்­க­ளி­லி­ருந்து தயா­ரிக்­கப்­படும் உணவு வகை­களை அதிகம் சாப்­பிட்­டி­ருக்­கிறேன். அவ­ரது கைப் பக்­கு­வத்தில் தயா­ராகும் பாணிப்­பி­னாட்டும், புழுக்­கொ­டியல் மாவு­றுண்­டை­களும் மிகவும் சுவை­யா­னவை. பனம் பழக் காலங்­க­ளிலே பனங்காய்ப் பணி­யாரம் சுடப்­ப­டு­வ­து­முண்டு.

இவ­ரைப்­போல இன்னும் சில பெத்­தாச்­சி­களும் அய­லட்­டையில் வாழ்ந்­தார்கள். அவர்கள் வீட்டில் எப்­பொ­ழுதும் நான் செல்லப் பிள்ளை. அவர்கள் அனை­வரும் தோட்­டத்தை நம்­பியே வாழ்ந்­தார்கள். அவர்­க­ளிடம் பண­வ­சதி இல்­லா­விட்­டாலும் வந்­த­வர்­க­ளையும் உற­வி­னர்­க­ளையும் மன­தார வர­வேற்று உப­ச­ரிக்கும் பண்பு இருந்­தது. போலித்­த­னமோ எந்­த­வித எதிர்­பார்ப்போ அவர்­க­ளிடம் இருந்­த­தில்லை.

மாறாக அவர்கள் மனதில் மனிதம் நிறைந்­தி­ருந்­தது. ஆனால் போராட்­டத்­துக்குப் பின்­னான இன்­றைய கால­கட்­டத்தின் புதிய தலை­மு­றையில், இது முற்­றாக மறைந்து போனதை, இலங்­கைக்­கான என் சமீ­பத்­திய பயணம் உணர்த்­தி­யது. அடிப்­படைத் தேவை­க­ளுக்­கப்பால் மேல­திக தேவை­களும் பற்றாக் குறை­க­ளும்தான் இதற்கு கார­ணமா? அல்­லது இன்­றைய வாழ்க்கை முறையில் முகிழ்ந்து வரும் புதுக் கோலமா என, என்னுள் எழுந்­துள்ள சந்­தே­கங்­க­ளுக்கு இன்று வரை விடை கிடைக்­க­வில்லை.

யாழ்ப்­பாணப் பல்­கலைக் கழ­கத்தின் விஞ்­ஞான பீடத்தில் தாவ­ர­வியல் பேரா­சி­ரி­ய­ராக டாக்டர் கந்­தையா பணி­பு­ரிந்தார். அதற்கு முன்பு அவர் தேயிலை ஆராய்ச்சி நில­யத்தில் விஞ்­ஞா­னி­யாக சேவை­யாற்­றி­யவர். இவர் ஜேர்மன் அரசின் புலமைப் பரிசில் பெற்று, பேர்ளின் தொழில் நுட்ப பல்­கலைக் கழ­கத்­துக்கு எண்­பதாம் ஆண்­டு­களின் நடுக்­கூறில் வந்­தி­ருந்தார்.

அங்கு நான் டாக்டர் பட்­டத்­துக்­கான ஆய்­வு­களைச் செய்து கொண்­டி­ருந்த கால­மது. ஓய்வு நேரங்­களில், யாழ் குடா­நாட்டில் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய விவ­சாய அபி­வி­ருத்தி பற்றிப் பேசுவோம். குட்டைப் பனை­ம­ரங்­களை இலங்­கையில் இன­வி­ருத்தி செய்ய வேண்­டு­மென்­பது அவ­ரது கன­வு­களில் ஒன்று.

பனை­வள ஆராச்­சியில் அவர் கணி­ச­மான பங்­க­ளிப்பை செய்­தி­ருந்­த­போதும் அவை பனை அபி­வி­ருத்திச் சபை­யி­னரால் இன்­று­வரை நடை­முறைப் படுத்­தப்­ப­ட­வில்லை. போராட்ட காலங்­களில் பஸ் போக்­கு­வ­ரத்து இல்­லாத நிலை­யிலும், கிளி­நொச்­சியில் இயங்­கிய யாழ் பல்­க­லைக்­க­ழக விவ­சாய பீடத்­துக்கு யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து மிதி­வண்­டி­யி­லேயே சென்று பணி­யாற்­றி­யவர்.

இத்­த­கைய பிர­யா­ணத்தின் போது வரும்­வ­ழியில் மூச்­சுத்­தி­ணறி மிதி­வண்­டி­யுடன் கண்டி வீதியில் விழுந்து அவர் மர­ணித்­தது சோக­மா­னது. இலங்­கையின் விவ­சாய முன்­னேற்­றத்­துக்கும் பனை வளத்தை பெருக்­கவும் டாக்டர் கந்­தையா மௌன­மாகச் செய்த பாரிய பங்­க­ளிப்பை பதிவு செய்­யவே இதை இங்கு குறிப்­பி­டு­கின்றேன்!

சூரிய வெளிச்சம் நிலத்தில் விழாத அள­வுக்கு அடர்­த­்தி­யாக வளர்ந்த யாழ் மற்றும் வன்னிப் பனங்­கா­டுகள் இனப்­போரின் பெய­ரினால் ‘மொட்­டை­ய­டிக்க’ப் பட்­டு­விட்­டன. நான் பிறந்து, மண் அளைந்த கைதடி வடக்கில் ‘கொத்தாக் கூடல்’ என்னும் பெயரில் ஒரு பனங்­கூடல் இருந்­தது. அங்கு ஆயிரம் பனை­க­ளுக்கு மேல் நின்­றி­ருக்கும். அப்­போது எனது மூதா­தை­யரின் வீட்­டுக்கு வழி சொல்ல, அது ஒரு அடை­யா­ள­மாகப் பயன்­பட்­டது.

அதி­கா­லை­களில் அங்கு சிரம பரி­காரம் செய்ய பனை­களின் மறைவில் குந்­து­ப­வர்கள் அநேகர். கைதடிச் சந்­தியை தொட்டுச் செல்லும் யாழ்-­கண்டி வீதிக்குச் செல்ல, வடக்குக் கைத­டி­யி­லி­ருந்து பனங்­கூ­ட­லூ­டாக குறுக்கு வழியில், மிதி­வண்­டி­யிலும் நடந்தும் செல்­வார்கள். அப்­படி மிதி­வண்­டியில் செல்­லும்­போது பனங்காய் முதுகில் விழுந்து நோஎண்ணை போட்டுத் திரிந்த பலர் இப்­பொ­ழுது என் ஞாப­கத்­துக்கு வரு­கி­றார்கள்.

இவ்­வாறு என் இள­மைக்­கால வாழ்க்­கை­யுடன் பின்னிப் பிணைந்த கொத்தாக் கூடலில் ஒரு பனை மரம்­கூட இல்­லாமல் இப்­பொ­ழுது அழிந்து போயினமை பெரும் சோகம். இந்த வகையில் பனையும் தென்­னையும் போரின் அவ­லங்­களைச் சுமக்கும் தற்­போ­தைய அடை­யா­ளங்கள். ஈழத்தில் அழிக்­கப்­பட்ட பனை­களின் எண்­ணிக்கை 5,500,000 என்று தற்­போது மதிப்­பிடப் படு­கி­றது.

பனை ஏறு­வது மிகவும் கஷ்­ட­மான தொழில். ஏறு­பட்டி, தளநார், நெஞ்­சுத்தோல், பாளைக் கத்­தி­க­ளுடன் பனை­மரம் ஏறும் எங்கள் ஊர் வட்டர்(ன்) இன்றும் என் மனதில் வாழும் அன்­புக்­கு­ரி­யவர். விவ­சா­யி­யான எங்கள் பெரி­யை­யா­வுக்­காகத் தினமும் மாலையில் மா­டு­க­ளுக்கு தீனி­யாக பனை­யோலை வெட்­டி­வ­ருவார்.

நுங்கு காய்க்கும் காலங்­களில் பத­மான நுங்­குகள் எனக்­காக வெட்­டி­வ­ருவார். இரவில் நாமெல்­லோரும் முற்­றத்தில் அமர்ந்து ஈர்க்­கு­களை நீக்கிப் பனை­யோலை கிழிப்போம். அது தினந்­தோறும் இரவில் நடக்கும் குடும்ப மாநாடு. அப்­போது குடும்ப விஷ­யங்கள் தொடக்கம் ஊர்ப்­பு­தி­னங்கள் வரை அங்கு அலசி ஆரா­யப்­படும். இது எத்­த­கைய சுக­மான அநு­ப­வங்­களும் காலங்­களும்!

இந்த வகையில், புலம் பெயர்ந்த மண்ணில், தம் வேர்­களை மறந்து, மணிக்கு நூற்­றுப்­பத்து மைல் வேகத்­திலே ஓடும் கார்ப்­ப­ய­ணங்கள் செய்து பழக்­கப்­பட்ட எங்­க­ளு­டைய இன்­றைய தலை­முறைப் பிள்­ளை­க­ளுக்கு பனங்­கூ­ட­லுக்கு ஊடாக எறித்த நில­வொ­ளியின் அழ­கு­களை எப்­படிப் புரிய வைக்க முடியும்?

சாதா­ரண பனைகள் 98 அடிகள் (30 மீட்­டர்கள்) வரை வளரும். தமிழ்­நாட்டின் காயல்­குடி காயல்­பட்­டினம் ஆகிய பகு­தி­களில் குட்டைப் பனைகள் செழிப்­பாக வளர்­வதைக் கண்­டி­ருக்­கிறேன். இவை 15 அடி உய­ரத்­துக்கு வளர்ந்து 8 வரு­டத்தில் 70-80 பனங்­காய்கள் காய்க்கும் எனவும் கோயம்­புத்தூர் விவ­சாயப் பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் சொன்னார்.

சிறிய எண்­ணிக்­கையில் இந்த ரகம் இலங்கை புத்­தளம் கற்­பிட்­டிப்ப பகு­தியில் அறி­முகம் செய்யப் பட்­டி­ருப்­ப­தாக என் பால்ய நண்பன் பாலன் சொன்னான். இதை உறி­திப்­ப­டுத்த இலங்கை பனை ஆராச்சி நில­யத்தை தொடர்பு கொண்டும் சரி­யான தக­வல்­களை அறிய முடி­ய­வில்லை. அவ­ர­வர்­க­ளுக்கு அவ­ரவர் பிராக்­குகள் தான் பிர­தானம் என்­பதே இதற்­கான சமா­தானம்!

வைரவர் வழி­பாடு அனே­க­மாக யாழ்­குடா நாட்டின் சமய வழி­பாட்டு முறை­யென்­பது எனது அபிப்­பி­ராயம். இந்­தி­யாவில் வைர­வ­ருக்கு தனி­யான கோவில்கள் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. எங்கள் குடும்­பத்­துக்­கென அம்­மா­வுக்கு சீத­ன­மாக வந்த பனங்­கூ­டலில், கொண்டல் மரத்தின் கீழ் ஒரு வைரவர் இருந்தார். வெள்ளிக் கிழ­மை­களில் மாத்­திரம் அவர் நாங்கள் ஏற்றும் வெளிச்­சத்தில் இருப்பார். மற்­றும்­படி இருட்­டில்தான் அவ­ரது சீவியம்.

வரு­டத்­துக்கு ஒரு­முறை பொங்கல் பொங்கி முக்­க­னிகள் சகிதம் படையல் வைப்போம். இப்­படி மூன்று நான்கு குடும்­பங்­க­ளுக்கு ஒரு வைரவர் வீதம், பல வைர­வர்கள் பனை­க­ளுக்கு நடுவே இருந்து யாழ் குடா­நாட்டில் அருள் பாலிப்­பர் வைரவர் வழி­பாடு பற்றி என்­னு­டைய ஐயா சொன்ன சங்­கதி ஒன்று இங்கு பதி­வுக்­கு­ரி­யது.

‘போத்­துக்­கேயர் இலங்­கைக்குப் படை­யெ­டுத்து இலங்­கையை ஆண்­ட­போது மக்­களை வலோற்­கா­ர­மாக மதம் மாற்­றி­ய­துடன் வழி­பாட்டு தலங்­க­ளையும் அழித்­தார்­களாம். அப்­போது யாழ்ப்­பாண மக்கள், பயத்தில் தங்கள் பின் வள­வு­க­ளுக்குள் அல்­லது பனங்­கூ­ட­லுக்குள் வைரவர் சூலங்­களை நாட்டி மறை­வாக வழி­ப­ட்­டார்­களாம். அதுவே காலப்­போக்கில் வைரவர் கோயில்­க­ளாக வந்­தி­ருக்­கலாம்’ என்ற கருத்தை சொன்னார்.

‘வைரவர் மாதிரி, ஏன் மற்ற சுவா­மி­களை பின் வள­வு­க­ளுக்குள் வைக்­க­வில்லை…?’ என்று வழ­மை­போல நான் எதிர்க் கேள்வி கேட்டேன். கிரா­மத்­தி­லேயே பிறந்து, வளர்ந்து தமிழ் வாத்­தி­யா­ருக்கு வாழ்க்­கைப்­பட்ட அம்­மாவால், தகப்­பனை எதிர்த்து மகன் கேள்வி கேட்­பது ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தொன்று.

‘பெரி­யாக்­க­ளோடை குதர்க்கம் பேசிப் பழ­காதை…! மற்ற சுவா­மி­ய­ளுக்கு கோவில் வைக்க, விக்­கி­ரகம் வேணும். வைரவ சுவா­மிக்கு ஒரு சூலத்தை நட்டு, கற்­பூரம் கொழுத்த முன்­னுக்கு ஒரு கல்லை வைச்­சு­விட்டால், அது கோயில்…’ என்றார் அம்மா, தன் கண­வனின் கௌர­வத்தைக் காப்­பாற்றும் பதி­வி­ர­தை­யாக.

சித்­திரை வருஷப் பிறப்­பன்று வைர­வ­ருக்கு பொங்கல் பொங்கி, அத்­துடன் முக்­க­னி­க­ளாகச் சொல்­லப்­படும் மா, வாழை, பலாப் பழங்­க­ளுடன் ‘மடை’­வைக்கும் போது, ஐயா வேறு சில தக­வல்­க­ளையும் சொன்னார். ‘முக்­க­னி­களைப் பற்­றிய புனிதம் சைவ­ச­மய பூசை அநுட்­டா­னங்­க­ளிலே வலி­யு­றுத்தப் படு­வது பிற்­கா­லத்­திலே தோன்­றி­யதாம்.

ஒவ்­வொரு கோயி­லுக்கும் ஒவ்­வொரு விருட்சம் சிறப்­பாகச் சொல்லப் படு­கி­றது. ஆதி­கா­லத்தில் யாழ்ப்­பாணக் கோவில்­க­ளுக்கு தல விருட்­ச­மாக அமைந்­தது, யாழ் கலா­சா­ரத்­துடன் கைகோத்துச் செழித்து வளர்ந்த பனை மரமே’ என்றார் புராண இதி­கா­சங்­களை முறைப்­படி கற்றுத் தேர்ந்த என்­னு­டைய ஐயா.

பனையும் அதன் பானமும் அவற்றை உண்டு தமி­ழிலே களிப்­புற்ற பாண­ருமே நமது தமிழ்க் கலை இலக்­கிய வடிவங்­க­ளுக்கு முதன் முத­லாக வடி­வமும், வகையும், சுவையும் அளித்­தனர்.

பொருநர், மதங்கர், கூத்தர், பாணர், பாடினி, விறலி என்­கிற சொற்கள் அனைத்தும், பாணர் சேரி­யிலே வாழ்ந்து, ஐந்­திணை நிலங்­க­ளையும் அடி­ய­ளந்து அலைந்து திரிந்து, இயல் இசை நாட­க­மென முத்­த­மி­ழையும் வளர்த்த தமிழ்க் கலை­ஞர்­க­ளையே குறித்­தன.  அவர்கள் கலை­ஞர்­க­ளா­கவும், மகிழ்­வூட்­டு­வோர்­க­ளா­கவும் படைப்­பா­ளி­க­ளா­கவும் விளங்­கி­னார்கள்.

பாணர்கள் மகிழ்ந்து, அவற்றைச் சுவை­ஞர்­க­ளுடன் பங்­கி­டு­வ­தற்கு, ‘உற்­சா­க­பா­ன’­மாகக் கள்ளே பயன்­பட்­டது. எனவே சங்க காலத்­திலே தமிழின் படைப்­புக்கும் சுவைக்கும் ஊடக பான­மாக விளங்­கிய கள் மது­வ­கை­யிலேயே சேர்க்­கப்­ப­டாது உணவு வகை­க­ளிலே சேர்க்கப் பட்­ட­தாகச் சொன்ன மூத்த எழுத்­தாளர் எஸ்பொ, ஒரு­முறை சங்கத் தமி­ழிலே கள்ளின் புகழ்­பாடும் அனேக வரி­களை தொகுத்துச் சொன்னார். அவற்றுள் என் ஞாபத்தில் நின்ற பாடல்தான் ‘சீறியாழ் பணையம்’ என்ற தலைப்பில், மதுரைக் கள்ளிற் கடை­யத்தன் வெண்­ணா­கனார் என்­பவர் இயற்­றிய சங்கத் தமிழ்ப் பாடல்.

கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்
காட்­டொடு மிடைந்த சீயா முன்றில்
நாட்­செ­ருக்கு அனந்தாத் துஞ்சு வோனே!
அவன்எம் இறைவன் யாம்­அவன் பாணர்
நெருநை வந்த விருந்­திற்கு மற்­றுத்
தன் இரும்­புடைப் பழவாள் வைத்­தனன் இன்­று
இக்கருங்­கோட்டுச் சீறியாழ்
பணையம் இது­கொண்டு ஈவது இலாளன்
என்­னாது நீயும் வள்ளி மருங்குல்
வயங்­கு­இழை அணியக் கள்­ளுடைக் கலத்தெம்
யாம்­மகிழ் தூங்கச் சென்­றுவாய்
சிவந்­துமேல் வருகசிறுகண் யானை வேந்து விழு­முறவே!

ஓரூரில் ஒரு அரசன் மற்­றொரு அர­ச­னுடன் போரிட்டான். போரில் பகை­ய­ரசன் இறந்தான். வெற்­றி­பெற்ற அரசன் விடி­யற்­கா­லை­வரை கள்­ளுண்டு மகிழ்ந்தான். அவ­னிடம் பரிசில் பெற்­று­வரும் பாணர்­களின் தலைவன், வரும்­வ­ழியில் வேறு சில பாணர்­களைக் கண்டான். பாணர் தலைவன் வழியில் வந்த பாணர்­களைக் கள்­ளுண்டு மகிழ்ந்­தி­ருக்கும் அர­ச­னிடம் ஆற்­றுப்­ப­டுத்­து­வ­தாக இப்­பாடல் அமைந்­துள்­ளது.

பனை­களின் முக்­கிய பொரு­ளா­தார பயன்கள், கள்ளு சாராயம் பனங்­கட்டி பனங்­கற்­கண்டு ஆகி­ய­னவே. ‘கல்­லாக்­காரம்’ என்னும் பெயரில் விற்­ப­னை­யாகும் பனங்­கற்­கண்டு இரு­ம­லுக்கும் தொண்டை அரிப்­புக்கும் நல்ல மருந்­தென விஞ்­ஞான ரீதி­யாக இப்­பொ­ழுது நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் காலா­தி­கா­ல­மாக கல்­லாக்­கா­ரமே யாழ்ப்­பா­ணத்தில் இரு­ம­லுக்­கான இயற்கை மருந்­தாக பாவ­னை­யி­­லி­ருந்த தகவல் முறைப்­படி நம்மால் பதி­யப்­ப­டா­தது து­ர­திஸ்­டமே! இவை­த­விர பனாட்டு, பாணிப்­ப­னாட்டு, பனங்­காய்ப் பணி­யாரம், பூரான், பனங்­கி­ழங்கு, ஒடியல். புழுக்­கொ­டியல், ஊமல், மற்றும் பனை ஓலை­யி­லி­ருந்­தும, மட்­டை­யி­லி­ருந்தும், மரத்­தி­லி­ருந்தும் பெறப்­படும் பயன்­களை நீண்ட பட்­டி­ய­லி­டலாம். இந்­த­வ­கை­யிலே இலங்­கையில் ‘கற்­பகம்’ என்ற நிறு­வனம் பனம் பொருள் உற்­பத்­தி­யிலே பாரிய பங்­க­ளிப்பைச் செய்­வதை இங்கு குறைத்து மதிப்­பி­ட­லா­காது.

இடையில் அவ­ச­ர­மாக இன்­னொரு சங்­கதி மூளையைக் குடை­கி­றது. யாழ்ப்­பா­ணத்துக் ‘கிளாக்கர் ஐயாக்­களின்’ அதி­கா­ரங்கள் கொழும்­பிலே கொடி­கட்டிப் பறந்த காலத்தில், கந்­தோர்­களில் கோப்­புக்­களைக் கட்­டிப்­பி­டித்து நாட்டின் நலன்­களை அடை­காத்துப் பெருக்­கி­ய­தாகப் பெருமைப் பட்ட காலங்­களில், அவர்­க­ளுக்குத் தேவை­யான ‘relaxation’I பனங்­கள்ளே அளித்­தது என்­பதை அறு­பதைத் தாண்­டிய எந்த யாழ்ப்­பா­ணி­யாலும் மறுக்க முடி­யாது. பரம உண்­மை­களைப் பரி­மாறிக் கொள்­வ­தற்கு உரு­வா­ன­வைதான் குறி­யீ­டு­களும் மரபுத் தொடர்­களும் என்பார் எஸபொ!

‘அண்ணை, யாழ்ப்­பா­ணத்­திலை கொடி­யே­றிற்­றிது, நீங்கள் கந்­தோ­ரிலை மார­டிச்சுக் கொண்­டி­ருக்­கி­றியள்…’ என்ற தொடரில் ‘பனங்­கள்ளு யாழ்ப்­பா­ணத்­திலை மலிஞ்­சுபோய்க் கிடக்­குது…’ என்­கிற செய்­தி­யைத்தான் ‘கொடி­யே­றிற்று’ என்ற அப்­பா­வி­யான சொல் சொல்­லி­யது. இந்த வகையில் ‘கூவில் கள்ளும் கீரி­மலைக் குளிப்பும்’ என நகைச் சுவை­யையும் நாடகக் கலை­யையும் கால் நூற்­றாண்டு காலம் இலங்­கையில் முன்­னெ­டுத்து வாழ்ந்த ‘சானா’ என்ற மாபெரும் கலை­ஞரும் என் நெஞ்­சிலே முகங்­காட்டி மறை­கின்றார்.

Palmyra என்­ற­வுடன் நம்மூர் பனை மரங்கள் மாத்­திரம் நினை­வுக்கு வரும். ஆனால் இதில் பல இனங்கள் உண்டு. Borassus aethiopum உஷ்ணவலய ஆபிரிக்க நாடுகளிலும், Borassus akeassii மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் வளர்வன. ஆசிய நாடுகளில் வளரும் நம்மூர் பனைமரங்களை Borassus flabellifer என அழைப்பார்கள். Borassus madagascariensis, Borassus sambiranensis ஆகிய இரண்டு பனை இனங்களும் மடகாஸ்கரில் வளர்வன. நியூகினியில் வளரும் பனையை Borassus heinenus என அழைப்பார்கள்.

இதில் Borassus flabellifer என்ற லத்தீன் விஞ்ஞானப் பெயர் கொண்ட நம்மூர்ப் பனை மரங்கள் நெடிதுயர்ந்து வளர்வன. இதிலேறி கள் இறக்காவிட்டால் பனை வருமானத்தின் பெரும் பங்கை நாம் இழந்து விடுவோம். ஆபிரிக்க குட்டைப் பனைமரங்களுடன் நம்மூர் பனைமரங்கள் சிலவற்றை கலந்தோ அல்லது நம்மூர் பனை மரங்களின் மரபணுக்களை மாற்றியோ இனவிருத்தி செய்ய விஞ்ஞானத்தில் வழிமுறைகள் உண்டு.

நிலத்தில் நின்று கொண்டே தேங்காய் பறிக்கக் கூடிய குள்ளமான தென்னைமரங்கள் தற்போது இனவிருத்தி செய்யப்பட்டுள்ளன. இப்போது கள்ளிறக்கும் கடினமான தொழிலைச்செய்ய இளைஞர்கள் முன்வருவதில்லை.எனவே, நின்றுகொண்டோ அல்லது சிறிய ஏணிவைத்தோ கள் இறக்கக்கூடிய குள்ளமான பனைகளை இனவிருத்தி செய்வது அவசியமாகிறது.

‘தென்னை பனை கமுகு ஆகியன ஒருவித்திலைத் தாவரங்கள். இதில் இனவிருத்தி செய்வதும் மரபணுக்களை மாற்றுவதும் கடினமானது. அது மட்டுமல்லாது நமக்கு வேண்டிய இயல்புடைய இறுதி தெரிவுக்கு காலமெடுக்குமல்லவா?’ என பேராசிரியர் கந்தையாவிடம் ஒருமுறை கேட்டேன்.

‘காலமெடுத்தாலும், அதை அப்படி விட்டுவிட முடியுமா…? குள்ளமான தென்னை மரங்கள் இனவிருத்தி செய்யப்படவில்லையா…? நெல்லு, கோதுமை. சோளம், பார்ளி, ஆகியனவும் ஒருவித்திலைத் தாவரங்கள்தான். அவற்றில் மரபணுக்கள் மாற்றப்படவில்லையா…? இதற்கு பணமும் அரச ஆதரவும்தான் தேவை.

இலங்கை இந்தியாவிலுள்ள பனம்பொருள் ஆராய்ச்சி மையங்கள் தமக்கிடையேயுள்ள உள்ளூர் அரசியலை விடுத்து பனை அபிவிருத்தியில் கவனம் செலுத்தவேண்டும்…’ என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் பேராசிரியர்.
அவரது தொனியில் ஆவேசமும், முகத்தில் இயலாமையும், விரக்தியும் மாறிமாறி மின்னலடித்தன!

****************

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!