அமிர்கானின் ‘லால் சிங் சட்டா’ ஃபெர்ஸ்ட் லுக் வெளியீடு

0 118

அமீர் கான், கரீனா கபூர் நடிக்கும் ‘லால் சிங் சட்டா’ – அமிர்கான் நடிப்பில் உரு­வாகும் ‘லால் சிங் சட்டா’ படத்தில், அமிர்­கானின் கதா­பாத்­திரத் தோற்­றத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளி­யா­கி­யுள்­ளது.

                

1986-ல் வின்ஸ்டன் க்ரூம் எழு­திய நாவலின் அடிப்­ப­டையில் உரு­வான பிர­பல ஹொலிவுட் திரைப்­ப­ட­மான ‘ஃபொரஸ்ட் கம்ப்’ (Forrest Gump) படத்தின் அதி­கா­ர­பூர்வ ரீமேக்கே ‘லால் சிங் சட்டா’ படம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஃபொரஸ்ட் கம் படத்தில் கதா­நா­ய­க­னாக டொம் ஹாங்க்ஸ் நடித்­தி­ருந்தார்.

இன்­ற­ளவும் ஃபொரஸ்ட் கம்ப் படத்தின் வச­னங்­களும், காட்­சி­களும் சமூக வலை­த­ளங்­களில் பகி­ரப்­பட்டு வரு­கின்­றன.

சிறந்த நடிகர், சிறந்த இயக்­குநர், சிறந்த தழுவல் திரைக்­கதை, சிறந்த கிராபிக்ஸ், சிறந்த படத்­தொ­குப்பு உள்­ளிட்ட பிரி­வு­களில் ஒஸ்கர் விரு­து­க­ளையும் இப்­படம் வென்­றது.

டோம் ஹாங்­ஸுக்குப் பதி­லாக ‘லால் சிங் சட்டா’ படத்தில் அமீர் கான் நடிக்­கிறார். கதா­நா­ய­கி­யாக கரீனா கபூர் நடிக்­கிறார்.

‘3 இடியட்ஸ்’, ‘தலாஷ்’ படங்­களைத் தொடர்ந்து மூன்­றா­வது முறை­யாக அமிர்­கா­னுடன் கரீனா கபூர் இணைந்து நடிக்­கின்­றனர்.

அத்வைத் சந்தன் இப்­ப­டத்தை இயக்­கு­கிறார்.இப்­ப­டத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்­டரில் ரயி­லுக்குள் கையில் சிவப்பு பொதி­யுடன் அமிர்கான் அமர்ந்­தி­ருக்­கிறார்.

தலையில் சீக்­கி­யர்­களின் தலைப்­பா­கை­யான டர்­பனும் அணிந்­தி­ருப்­பது போல அமிர்­கானின் தோற்றம் இதில் உள்­ளது.

பஞ்­சாபி மொழியில் வணக்­கங்­க­ளுடன் இந்த போஸ்­டரை அமிர்கான் சமூக வலை­த­ளங்­களில் பகிர்ந்­துள்ளார்.

இப்­ப­டத்தின் படப்­பி­டிப்பு நவம்பர் முதலாம் திகதி பஞ்சாப் மாநி­லத்தின் அமிர்­த­சரஸ், லூதி­யானா, ஜலந்தர் முதலான நகரங்களில் ஆரம்பமாகின.

2020 டிசம்பர் 25 ஆம் திகதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!